பண்டுவ மனவதர் இராச்சியம்
பண்டுவ-மானவதர் இராச்சியம் (Bantva-Manavadar or Manavadar State) 1947-இல் இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராட்டிரா தீபகற்பத்தில் இருந்தது. 1941-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பண்டுவ-மனவதர் இராச்சியம் 261.6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 26,200 மக்கள் தொகையும் கொண்டிருந்தது.
Warning: Value not specified for "common_name" | |||||
பண்டுவ-மனவதர் இராச்சியம் | |||||
சுதேச சமஸ்தானம் | |||||
| |||||
கொடி | |||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1733 | |||
• | இந்திய விடுதலை, சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1947 | |||
பரப்பு | |||||
• | 1941 | 261.6 km2 (101 sq mi) | |||
Population | |||||
• | 1941 | 26,209 | |||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) |
வரலாறு
தொகு1733-ஆம் ஆண்டில் பண்டுவ-மனவதர் இராச்சியத்தை நிறுவியவர் பஷ்தூன் இன திலேர் கான் சலாபாத் கான் ஆவார். 1807-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற பண்டுவ-மானவதர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் கத்தியவார் முகமையின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி பண்டுவ-மானவதர் இராச்சியம், 1948-ஆம் ஆண்டு முதல் 1956-ஆம் ஆண்டு முடிய சௌராஷ்டிர மாநிலத்துடன் இணக்கப்பட்டது. மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, பண்டுவ-மான்வதர் இராச்சியம் 1956-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.
ஆட்சியாளர்கள்
தொகுபஷ்தூன் இன பாண்டுவ-மானவதர் ஆட்சியாளர்கள் இராச்சியத்தை கான் பட்டத்துடன் ஆட்சி செய்தனர்.[1]
கான்கள்
தொகு- 1733 – c.1760 திலேர் கான் சலாபாத் கான் (இறப்பு:1760)
- 1760 – .... சதர் நத்து கான் திலேர் கான்
- 17.. – 18.. காசாபர் கான் நத்துக் கான்
- 18.. – 18.. கமல் அத்-தீன் காசாபர் கான்
- 18.. – 12 சூன் 1882 சோராவர் கான் கமல் அத்தீன் கான் (இ. 1882)
- 12 சூன் 1882 – 28 மார்ச் 1888 காசாபர் கான் சோராவர் கான் (பிறப்பு:. 1862 – இறப்பு. 1888)
- 12 சூன் 1882 – 21 சூன் 1883 .... -அரசப்பிரதிநிதி
- 28 மார்ச் 1888 – 19 அக்டோபர் 1918 பாத் அத்தீன் கான் காசாபர் கான் (பி. 1885 – இ. 1918)
- 28 மார்ச் 1888 – 25 நவம்பர் 1907 .... -அரசப்பிரதிநிதி
- 19 அக்டோபர் 1918 – 15 பிப்ரவரி 1948 குலாம் மொகிதீன் கான் (பி. 1911 – இ. 2003)
- 19 அக்டோபர் 1918 – 21 நவம்பர் 1931 பாத்திமா சித்திக்கா பேகம் (பெண்) -அரசப்பிரதிநிதி (பி. 1891 – இ. 1943)
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Manavadar". Genealogical Gleanings. Soszynski, Henry. University of Queensland. பார்க்கப்பட்ட நாள் 2010-04-12.
வெளி இணைப்புகள்
தொகுThis article incorporates text from a publication now in the public domain: Gazetteer of the Bombay Presidency: Kathiawar. Vol. VIII. Printed at the Government Central Press, Bombay. 1884. pp. 377–378.