பதாரி
எல் பதாரி (El Badari) (அரபு மொழி: البداري) மேல் எகிப்தின் அஸ்யூத் மாகாணத்தில் அமைந்த ஒரு பண்டைய நகரம் ஆகும். வரலாற்றுக்கு முந்தைய எகிப்தில் கிமு 5,000 - 4000 காலத்தில் இப்பகுதியில் பதாரியப் பண்பாடு செழித்து இருந்தது.
தொல்லியல்
தொகு1922 மற்றும் 1931 ஆண்டுகளில் எல் பதாரி தொல்லியல் களத்தை அகழாய்வு செய்த போது[1][2] , எகிப்தின் வரலாற்றுக்கு முந்தைய (கிமு 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது) தொல்பொருட்கள் மற்றும் கல்லறைப் பொருட்கள் கிடைத்துள்ளது. பதாரி தொல்லியல் பொருட்களைக் கொண்டு பண்டைய எகிப்தின் மேல் எகிப்து பகுதிகளில் கிமு 5,000 முதல் 4000 வரை பதாரியப் பண்பாடு நிலவியிருக்கலாம் எனக்கணித்துள்ளனர்.[3][4]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Holmes, D., & Friedman, R. (1994). Survey and Test Excavations in the Badari Region, Egypt. Proceedings of the Prehistoric Society, 60(1), 105-142. doi:10.1017/S0079497X0000342X
- ↑ Brunton, G., & Caton-Thompson, G. (1928). The Badarian civilisation and predynastic remains near Badari. British School of Archaeology in Egypt, University College.
- ↑ Shaw, Ian, ed. (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. pp. 479. ISBN 0-19-815034-2.
- ↑ Watterson, Barbara (1998). The Egyptians. Wiley-Blackwell. pp. 31. ISBN 0-631-21195-0.