பதாரியப் பண்பாடு

பதாரியப் பண்பாடு (Badarian culture) வரலாற்றுக்கு முந்தைய பண்டைய எகிப்தின் தெற்கு எகிப்தில் உள்ள பதாரி எனும் நகரத்தில் கிமு 5,000 முதல் கிமு 4,000 வரை செழித்திருந்த பண்பாடாகும். இப்பண்பாடுக் காலத்தில் தெற்கு எகிப்தில் பாயும் நைல் நதி ஒட்டிய பகுதிகளில் வேளாண்மை செழித்திருந்ததை காட்டுகிறது.[2][3] [1] 1922 மற்றும் 1931-ஆம் ஆண்டுகளில் முதன்முதலில் பதாரி தொல்லியல் களம் அகழாய்வு செய்யப்பட்டது.[4][5]இத்தொல்லியல்களத்தில் 40 குடியிருப்புகளும், 600 கல்லறைகளும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது.

பதாரியப் பண்பாடு
[[File:|264px|alt=]]
புவியியல் பகுதிமேல் எகிப்து
காலப்பகுதிபுதிய கற்காலம்
காலம்ஏறத்தாழ் கிமு 5,000 [1]கிமு 4,000
வகை களம்பதாரி தொல்லியல் களம்
இயல்புகள்தஸ்சியப் பண்பாடு, மெரிம்தி பண்பாடுகளுடன் சமகாலத்தியவை
முந்தியதுபையூம் பண்பாடு
பிந்தியதுஅமராத்தியப் பண்பாடு
பதாரி தொல்லியல் களத்தின் கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட பதாரியப் பண்பாடுக் காலத்திய பெண்ணின் மரச்சிற்பம்

பதாரிய பண்பாட்டுக் காலத்தில் பண்டைய எகிப்தின் தெற்கில் நைல் நதியின் இரு கரை ஓரங்களில் வேளாண்மை செய்தல், மீன் பிடித்தல், ஆடு, மாடு கால்நடைகள் வளர்க்கப்பட்டது. இப்பண்பாடுக் காலத்தில் வேளாண் பொருளாதாரம் செழித்தோங்கியது. இக்காலத்தில் கோதுமை, பார்லி, கிழங்குகள் மற்றும் பருப்பு வகைகள் பயிரிடப்பட்டது. தரையடிக் குழிகளில் உணவு தானியங்கள் சேமிக்கப்பட்டது. சடங்குகளின் போது கால்நடைகள், நாய்கள் பலியிடப்பட்டு, உணவு தாணியங்கள் படையலிடப்பட்டது. இப்பண்பாடுக் கால வளரி போன்ற வேட்டைக் கருவிகளை பயன்படுத்தினர். [6] இக்கால மக்கள் மீன் பிடித்தலுடன், அழகிய சிறுமான்களை வேட்டையாடினர்.

பதாரியப் பண்பாட்டின் கட்டிடங்கள் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இருப்பினும் மரக் கட்டைகளின் எச்சங்கள் ஒரு தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அது அறியப்படாத கட்டுமானத்தின் குடிசை அல்லது தங்குமிடத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது.

இறந்தவர்களின் உடல்கள் நாணல் புற்களால் அல்லது விலங்குகளின் தோல்களால் சுற்றப்பட்டு, குழிகளில் புதைக்கப்பட்டனர். அவர்களின் தலைகள் மேற்கு நோக்கி வைக்கப்பட்டது[6]இது மேற்குப் பகுதியை இறந்தவர்களின் தேசமாகக் கருதிய எகிப்தின் துவக்ககால அரசமரபுகளின் இறப்புச் சடங்குடன் ஒத்துப்போகிறது. இறந்தவர் உடலுடன் தந்தத்தினால் செய்யப்பட்ட் மான், தாயத்துகள், நீர்யானை உருவங்கள் சேர்த்து புதைக்கப்பட்டது.

இப்பண்பாட்டுக் கால கல்லறைகளில் இறந்தவர் உடலுடன் தந்தத்திலான மான், நீர் யானை போன்ற உருவங்கள், படிகங்கள் மற்றும் நகைகள்[6] சேர்த்துப் புதைக்கப்பட்டது.

கருவிகளில் கோடாரிகள், இருமுக அரிவாள்கள் மற்றும் குழிவான-அடிப்படை அம்புக்குறிகள் ஆகியவை அடங்கும். சமூக அடுக்கு சமூகத்தின் மிகவும் செழிப்பான உறுப்பினர்களை கல்லறையின் வேறு பகுதியில் புதைத்தனர்.

இந்த கல்லறைகளில் மேற்புறம் கருப்பு நிறமும், அடிப்புறம் சிவப்பு நிற மெருகூட்டப்பட்ட மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த படைப்புகள் பதாரியப் பண்பட்டின் மிகவும் சிறப்பு கூறுகளாகக் கருதப்படுகிறது.

வர்த்தகம்

தொகு

பதாரி தொல்லியல் தளங்களில் காணப்படும் எரிகல் பாறைக் குவளைகள் பெரும்பாலும் நைல் வடிநிலப் பகுதியிலிருந்து அல்லது வடமேற்கிலிருந்து நைல் நதி வழியாக வர்த்தகம் செய்யப்பட்டன. செங்கடலிருந்து இருந்து சங்குகள் இறக்குமதியானது. நீலவண்ண இரத்தினக்கற்கள் சினாய் தீபகற்பம் வழியாக பதாரியப் பண்பாட்டுப் பகுதிக்கு வந்திருக்கலாம். பதாரிய மக்கள் கடின இளஞ்சிவப்பு பாத்திரத்தில் நான்கு கைப்பிடிகள் கொண்ட பானைகள் பயன்படுத்தினர். கருப்பு மட்பாண்டங்கள் நேரடியாக எகிப்தின் மேற்கு (லிபியா) அல்லது தெற்கிலிருந்து (நூபியா) வந்திருக்கலாம்.

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. 1.0 1.1 Watterson, Barbara (1998). The Egyptians. Wiley-Blackwell. pp. 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-21195-0.
 2. Holmes, D., & Friedman, R. (1994). Survey and Test Excavations in the Badari Region, Egypt. Proceedings of the Prehistoric Society, 60(1), 105-142. doi:10.1017/S0079497X0000342X
 3. Shaw, Ian, ed. (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. pp. 479. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-815034-2.
 4. Brunton, Guy; Caton-Thompson, Gertrude (1928). The Badarian Civilisation and Predynastic Remains near Badari. British School of Archaeology in Egypt. ISBN 9780404166250.
 5. Holmes, D., & Friedman, R. (1994). Survey and Test Excavations in the Badari Region, Egypt. Proceedings of the Prehistoric Society, 60(1), 105-142. doi:10.1017/S0079497X0000342X
 6. 6.0 6.1 6.2 Smith, Homer W. (2015) [1952]. மனிதனும் அவனுடைய கடவுள்களும். Lulu Press. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781329584952.
 7. "Artifact". www.metmuseum.org.

உசாத்துணை

தொகு
 • Petrie, Flinders. “34. The Badarian Civilisation.” Man, vol. 26, 1926, pp. 64–64. JSTOR, http://www.jstor.org/stable/2787955. Accessed 2 Jun. 2022.
 • Guy Brunton and Gertrude Caton-Thompson: The Badarian Civilisation and Predynastic Remains near Badari, London: British School of Archaeology in Egypt, 1928.
 • Castillos, J. J. (1982). Analysis of Egyptian Predynastic and Early Dynastic Cemeteries. Final Conclusions. Journal (The) of the Society for the Study of Egyptian Antiquities, 12(1), 29-53.
 • Holmes, D. L. (1989). The Predynastic lithic industries of Upper Egypt/1. The Predynastic lithic industries of Upper Egypt a comparative study of the lithic traditions of Badari, Nagada and Hierakonpolis.
 • Friedman, R. F. (1994). Predynastic settlement ceramics of Upper Egypt: A comparative study of the ceramics of Hemamieh, Nagada, and Hierakonpolis (Doctoral dissertation, University of California, Berkeley).
 • Holmes, D., & Friedman, R. (1994). Survey and Test Excavations in the Badari Region, Egypt. Proceedings of the Prehistoric Society, 60(1), 105-142. doi:10.1017/S0079497X0000342X
 • Savage, S. (2001). Towards an AMS Radiocarbon Chronology of Predynastic Egyptian Ceramics. Radiocarbon, 43(3), 1255-1277. doi:10.1017/S0033822200038534

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Badari culture
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பதாரியப்_பண்பாடு&oldid=3503104" இலிருந்து மீள்விக்கப்பட்டது