தஸ்சியப் பண்பாடு
தஸ்சியப் பண்பாடு (Tasian culture), வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் தெற்கு எகிப்து பகுதியில் கிமு 4,500-இல் விளங்கியது. இதன் சமகாலத்தில் வடக்கு எகிப்தின் நைல் வடிநிலத்தில் மெரிம்தி பண்பாடு விளங்கியது. தஸ்சியப் பண்பாட்டிற்குப் பின் எகிப்தில் நக்காடா காலத்திய பதாரியப் பண்பாடு[1] மற்றும் அமராத்தியப் பண்பாடுகள் தோன்றியது.
தஸ்சியப் பண்பாடு | |
---|---|
[[File:|264px|alt=]] | |
புவியியல் பகுதி | மேல் எகிப்து |
காலப்பகுதி | புதிய கற்காலம் |
காலம் | ~ கிமு 4,500 |
வகை களம் | தேர் தஸ்சா தொல்லியல் களம் |
இயல்புகள் | சமகால பண்பாடு: மெரிம்தி பண்பாடு |
முந்தியது | பையூம் பண்பாடு |
பிந்தியது | பதாரியப் பண்பாடு, அமராத்தியப் பண்பாடு |
தஸ்சியப் பண்பாடு தெற்கு எகிப்தில் பாயும் நைல் நதியின் கிழக்குக் கரையில் கண்டெடுத்த புதைகுழிகளுக்காக இந்தப்பண்பாட்டிற்கு பெயரிடப்பட்டது. தஸ்சியப் பண்பாட்டுக் காலத்தின் துவக்கத்தில் ஆரம்பகால மட்பாண்டங்களின் மேற்புறங்களில் கருப்பு வண்ணம் கொண்டிருந்தது. சிவப்பு மற்றும் பழுப்பு மட்பாண்டங்களின் மேல் மற்றும் உட்புறத்தில் கருப்பு வண்ணம் பூசப்பட்டிருந்தது.[2]
தஸ்சியப் பண்பாட்டின் மட்பாண்டங்கள் மற்றும் பதாரியன் பண்பாட்டின் மட்பாண்டங்களுக்கு இடையே சிறிய வித்தியாசம் இருப்பதால், தஸ்சியன் பண்பாடு பதாரியன் பண்பாட்டின் வரம்பில் குறிப்பிடத்தக்க அளவில் ஒன்றுடன் ஒன்று கல்ந்து உள்ளது. தஸ்சியன் காலத்தில் மேல் எகிப்து, கீழ் எகிப்தின் பண்பாட்டால் வலுவாக தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.
தஸ்சியப் பண்பாட்டின் தொல்லியல் களத்தின் புதைகுழிகளிலிருந்து கிடைத்த எலும்புக் கூடுகளின் புதை படிவங்கள், எகிப்தின் துவக்க கால வம்ச மக்களின் எலும்புக்கூடுகளை விட உயரமாக இருந்தது. தஸ்சியப் பண்பாட்டின் மக்கள், மெரிம்தி பண்பாடு மக்களைப் போன்றே நீண்ட தலைகளுடன் இருந்தனர்.[3]
தொல்பொருள் சான்றுகள், தஸ்சியன் மற்றும் பதாரியப் பண்பாட்டின் நைல் நதி பள்ளத்தாக்கு தளங்கள், முந்தைய ஆப்பிரிக்க கலாச்சாரங்களின் புற வலையமைப்பாக இருந்தன. அவை பதாரியன், சகாரா, நூபியான் மற்றும் நைல் நதிக் கரை மக்களின் இயக்கத்தைக் கொண்டிருந்தன.[4]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "University College London. "Tasian"". www.ucl.ac.uk.
- ↑ Gardiner, Alan (1964). Egypt of the Pharaohs. Oxford University Press. pp. 388, 389.
- ↑ Forde-Johnston, James L. (1959). Neolithic cultures of North Africa: aspects of one phase in the development of the African stone age cultures. University of California. p. 58. பார்க்கப்பட்ட நாள் 16 June 2016.
- ↑ Egypt in its African context : proceedings of the conference held at the Manchester Museum, University of Manchester, 2-4 October 2009. Oxford: Archaeopress. 2011. pp. 43–54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1407307602.
- ↑ "Beaker British Museum". The British Museum (in ஆங்கிலம்).