நக்காடா பண்பாடு

நக்காடா பண்பாடு (Naqada culture) வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய பண்டைய எகிப்தின் வெண்கலக் காலத்தில் ஏறத்தாழ கிமு 4400 முதல் கிமு 3000 முடிய இத்தொல்லியல் பண்பாடு விளங்கியது. தெற்கு எகிப்தில் அமைந்த நக்காடா எனும் பண்டைய நகரத்தின் பெயரால் இப்பண்பாட்டின் பெயர் அமைந்தது. 2013- ஆம் ஆண்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கரிம கதிரியக்க ஆய்வில், நக்காடா பண்பாடு கிமு 3,800-3,700 காலத்தியது என முடிவு செய்துள்ளனர். [1]

நக்காடா பண்பாடு
[[File:|264px|alt=]]
புவியியல் பகுதிஎகிப்து
காலப்பகுதிசெப்புக் காலம்
காலம்ஏறத்தாழ கிமு 4,400 – 3,000
வகை களம்நக்காடா தொல்லியல் களம்
முந்தியதுபதாரியப் பண்பாடு
பிந்தியதுஎகிப்தின் துவக்க கால அரச மரபுகள்
பறவையின் கூறுகளுடன் கூடிய பெண் உருவம், இரண்டாம் நக்காடா காலம், கிம 3500 - 3400

நக்காடா பண்பாட்டின் இறுதியில், துவக்க வெண்கலக் காலத்தில் விளங்கிய மூன்றாவது நக்காடா பண்பாட்டுக் காலத்தின் போது, துவக்க கால எகிப்திய அரசமரபினர் கிமு 3,150 முதல் கிமு 2,686 முடிய தெற்கு எகிப்தையும், வடக்கு எகிப்தையும் ஒன்றிணைத்து ஆண்டனர்.

நக்காடா பண்பாட்டின் காலவரிசை

தொகு

பிரித்தானிய எகிப்தியவியல் அறிஞர் வில்லியம் பிளின்டர்ஸ் பேட்ரி, நக்காடா பண்பாட்டுக் கால வரிசையை மூன்று காலமாக வகைப்படுத்தியுள்ளார்.

படக்காட்சிகள்

தொகு

நார்மெர் கற்பலகை

தொகு

மூன்றாம் நக்காடா காலத்தில் பண்டைய எகிப்தை ஆண்ட மன்னர் நார்மெர் எழுப்பிய சிற்பத்தாலான கற்பலகை 63 செண்டிமீட்டர் (2.07 அடி) உயரம் கொண்ட அழகிய பதக்க வடிவில் அமைந்துள்ளது. இக்கற்பலகையின் முன் பக்கம் மற்றும் பின் பக்கம் என இரண்டு பக்கங்களிலும் மன்னர் நார்மெர் உருவத்துடன் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது

 
நார்மெர் கற்பலகையின் முன்பக்கக் காட்சி


 
நார்மெர் கற்பலகையின் பின்பக்கக் காட்சி

அகழாய்வுகளும், நினைவுச் சினனங்களும்

தொகு

வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய காலத்தின் நக்காடா பண்பாடு I காலத்திய எகிப்தியர்கள், தெற்கு எகிப்தின் நூபியா மற்றும் மேற்கு எகிப்தின் பாலைவனச் சோலைப் பிரதேசங்கள் மற்றும் மத்திய தரைக் கடலின் கிழக்கு கரையில் உள்ள மெசொப்பொத்தேமியாவில் வாழும் மக்களிடையே வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். [2]கூரான கற்கருவிகளை செய்வதற்கு தேவையான, எரிமலைக் கரும்பளிங்குப் பாறைகளை எத்தியோப்பியாவிலிருந்து வாங்கி வந்தனர்.[3] நெக்கென் நினைவுச் சின்னக் கட்டிடத்தின் அகழாய்வில் கரித்துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கரித்துண்டுகள் லெபனான் நாட்டின் தேவதாரு மரத்தின் கரித்துண்டுகள் போன்று இருந்தது.[4]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.newscientist.com/article/dn24145-carbon-dating-shows-ancient-egypts-rapid-expansion/
  2. Shaw, Ian (2002). The Oxford History of Ancient Egypt. Oxford, England: Oxford University Press. p. 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05074-0.
  3. Barbara G. Aston, James A. Harrell, Ian Shaw (2000). Paul T. Nicholson and Ian Shaw editors. "Stone," in Ancient Egyptian Materials and Technology, Cambridge, 5-77, pp. 46-47. Also note: Barbara G. Aston (1994). "Ancient Egyptian Stone Vessels", Studien zur Archäologie und Geschichte Altägyptens 5, Heidelberg, pp. 23-26. See on-line posts: [3] and [4].
  4. Parsons, Marie. "Egypt: Hierakonpolis, A Feature Tour Egypt Story". www.touregypt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-07-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நக்காடா_பண்பாடு&oldid=3502993" இலிருந்து மீள்விக்கப்பட்டது