பதார்த்த குண சிந்தாமணி
பதார்த்த குண சிந்தாமணி தேரையர் என்னும் சித்தரால் இயற்றப்பட்ட ஒரு மருத்துவ நூலாகும். தமிழ் மருத்துவ நூலான பதார்த்த குண சிந்தாமணியில் ஒவ்வொரு பொருளிலும் அடங்கியுள்ள மருத்துவக் குணங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது[1][2]. ‘பதார்த்தம்’ என்பது தாவரங்களின் உறுப்புகளான வேர், பட்டை, பிசின், சாறு, இலை, பூ, காய், விதை ஆகிய எட்டுப் பொருள்களையும் குறிப்பதாகும். இப்பொருள்கள் கசப்பு, உவர்ப்பு, இனிப்பு, கார்ப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய அறுவகைச் சுவைகளைக் குணமாகக் கொண்டிருக்கும். இவ்வகைப் பதார்த்தங்களைச் சிந்தாமணியாய்த் தொகுத்து உரைப்பதே பதார்த்த குண சிந்தாமணியாகும்[3].
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழ் மருத்துவத்தின் வரலாறு". Archived from the original on 2012-11-27. பார்க்கப்பட்ட நாள் 2012-12-09.
- ↑ "சித்தர்கள் இராச்சியம்". பார்க்கப்பட்ட நாள் 2012-12-09.
- ↑ "தமிழில் மருத்துவ நூல்கள்". Archived from the original on 2012-12-26. பார்க்கப்பட்ட நாள் 2012-12-09.