பதிநான்காம் இராம வர்மா

பதிநான்காம் இராம வர்மா (Rama Varma XIV) (1848-1888) இவர், 1864 முதல் 1888 வரை கொச்சி இராச்சியத்தின் ஆட்சியாளராக இருந்தார். பிரித்தானியர்களிடமிருந்து வீரத்திருத்தகை ஆக்கப்பட்ட கொச்சியின் முதல் மகாராஜா இவராவார். [1]

பதிநான்காம் இராம வர்மா 1868

ஆட்சி தொகு

இவர், மிகவும் பலவீனமான மன்னராக இருந்தார். மேலும் இவரது ஆட்சி முழுவதும் நோயால் பாதிக்கப்பட்டார். 1879 வரை இவரது பிரதம மந்திரிகள் டி.சங்குன்னி மேனன் மற்றும் 1879 முதல் அவரது சகோதரர் கோவிந்த மேனன் ஆகியோரால் நிர்வாகம் பெரும்பாலும் கையாளப்பட்டது. இவர் 1876 இல் சென்னையில் வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் எட்வர்ட்டின் இந்திய பயணத்தின் போது கலந்து கொண்டார். இவர் திருப்பூணித்துறை புத்தன் மாளைகையையும் மணி மாளிகையையும் கட்டினார் .

இறப்பு தொகு

இவர், ஆகத்து 1888இல் திருப்பூணித்துறையில் காலமானார்.

மரியாதை தொகு

பிரித்தானிய மகுடத்திற்கு விசுவாசமாக இருந்ததற்காக, இவரை வீரத்திருத்தகை ஆக்கியது.

குறிப்புகள் தொகு

  1. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).