பதிபரா தேவி கோயில்

நேபாளத்தின் மிக முக்கியமான கோயில்களில் ஒன்று

பதிபரா தேவி கோயில் (Pathibhara Devi Temple) அல்லது முக்கும்லுங் (லிம்பு மக்களின் பண்டைய மதநூலும் நாட்டுப்புற இலக்கியமுமான முந்தும் என்பதில் குறிப்பிட்டுள்ளபடி) என்பது நேபாளத்தின் மிக முக்கியமான கோயில்களில் ஒன்றாகும். இது தாப்லேஜங் மலையில் அமைந்துள்ளது. இது இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. நேபாளத்திலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் விசேஷ சமயங்களில் கோவிலுக்கு திரள்வார்கள். ஏனெனில் கோவிலுக்கு யாத்திரை செய்வது பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதை உறுதி செய்கிறது.

பதிபரா தேவி கோயில்
பதிபரா தேவியின் சிலை
அமைவிடம்
நாடு:நேபாளம்
மாவட்டம்:தாப்லேஜங்
அமைவு:தாப்லேஜங்
ஏற்றம்:3,794 m (12,448 அடி)
ஆள்கூறுகள்:27°25′46″N 87°46′3.8″E / 27.42944°N 87.767722°E / 27.42944; 87.767722
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:அடுக்குத் தூபி

3,794 மீ (12,448 அடி) உயரத்தில் பங்லிங் நகராட்சியிலிருந்து 19.4 வடகிழக்கில் கோயில் அமைந்துள்ளது. இது கஞ்சஞ்சங்கா மலையேற்றத்தின் இரண்டாம் பாதையாக செயல்படுகிறது. இக்கோயிலின் பக்தர்கள் பட்டியலில் நேபாளத்தின் முன்னாள் அரச குடும்பமும் அடங்கும். பக்தர்கள் அம்மனை மகிழ்விக்க மிருக பலி, தங்கம், வெள்ளியை வழங்குகின்றனர்.

புராணக் கதை

தொகு

இன்று கோயில் இருக்கும் அதே இடத்தில் உள்ளூர் மேய்ப்பர்கள் மேய்ச்சலின்போது நூற்றுக்கணக்கான ஆடுகளை இழந்ததாக நம்பப்படுகிறது. இதனால் இடர்பாட்டுக்கு ஆளான மேய்ப்பர்களின் கனவில் ஆடுகளை பலியிடவும், தனது நினைவாக ஒரு சன்னதியைக் கட்டவும் தெய்வம் கட்டளையிட்டது. பலி கொடுக்கப்பட்டதும், காணாமல் போன ஆட்டு மந்தைகள் திடீரென்று திரும்பி வந்தது. இச்சம்பவத்திற்குப் பிறகு கோயிலுக்குள் பலி செலுத்தும் சடங்கு தொடங்கியதாக நம்பப்படுகிறது.

மலை தெய்வமான பதிபரா, இந்த இடத்திற்கு பெயரிடப்பட்ட ஒரு கடுமையான தெய்வம் என பக்தர்களால் நம்பப்படுகிறது. கடவுளுக்கு எளிய மற்றும் தன்னலமற்ற கருணை, பிரார்த்தனை, தியாகம் மூலம் (இந்து மதத்தில் தியாகம் என்பது ஒருவரின் அகங்காரத்தையும் பேராசையையும் தியாகம் செய்வதைக் குறிக்கிறது) வணங்கலாம். அதே சமயம் தீங்கிழைக்கும் நோக்கங்களைக் கொண்ட ஒருவருக்கு தண்டனை என்பது இரக்கமற்றதாகவும், கடுமையானதாகவும் இருக்கும்.

தேவி அனைத்து பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறார். மேலும், இந்துக்களுக்கும் லிம்பு மக்களுக்கும் மிகவும் முக்கியமானவர். பதிபராவில் உள்ள தேவி, குழந்தைகள் இல்லாதவர்களுக்கு குழந்தைகள், ஏழைகளுக்கு செல்வம் போன்ற தனது பக்தர்களின் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றுவதாக நம்பப்படுகிறது.[1]

இது 'சக்தி பீடங்களில்' ஒன்றாகக் கருதப்படுகிறது. சக்தி பீடங்கள் என்பது சதி தேவியின் உடலை சிவபெருமான் சுமந்து செல்லும் போது அவரது பாகங்கள் விழுந்த இடங்கள் ஆகும். விசேஷ சமயங்களில் நேபாளத்திலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வழிபாட்டாளர்கள் கோவிலுக்கு திரளுகிறார்கள். ஏனெனில் இந்த கோவிலுக்கு யாத்திரை செய்யும் பக்தர்கள் விரும்பும் அனைத்தையும் நிறைவேற்றுவதாக நம்பப்படுகிறது. [2]

ஈர்ப்புகளும் பிற செயல்பாடுகளும்

தொகு

யாத்ரீகர்கள் ஓலாங்சுங் கோலா, லுங்சுங்கில் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மடங்களுக்கும் செல்லலாம். சாவாவில் உள்ள அருவி, திம்பங் குளம் ஆகியவை ஒவ்வொரு ஆண்டின் இலையுதிர் காலத்திலும், வசந்த காலத்திலும் பார்வையிடத்தக்கது. சோதனையின் போது வன சுற்றுச்சூழல் அமைப்பு காட்டுயிர், பறவைகள், பூக்கள் , பட்டாம்பூச்சிகளின் பன்முகத்தன்மையை வழங்குகிறது. இந்த மலையேற்றத்தில் கஞ்சஞ்சங்கா மலைத்தொடர் முழுவதையும் காணலாம்.

இயற்கை காட்சி கோபுரம்

தொகு

இயற்கையான கண்காணிப்பு கோபுரமாக உருவாக்கப்பட்டு வரும் பதிபரா மலையிலிருந்து வடக்கே வெள்ளிபோல் பிரதிபலிக்கும் மலைத்தொடரால் உருவாக்கப்பட்ட அழகிய பள்ளத்தாக்குகளும் அதன் காட்சிகளும் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. எவரெசுட்டு, இலோட்சே, சோயு, மக்காலு போன்ற மலைகளை எட்டாயிரம் மீட்டர் உயரத்தில் இருந்து பார்க்கலாம். இதேபோல், பஞ்ச்தார், இலம், தெக்ராதும், சங்குவாசபா, சோலு உட்பட பங்லிங் பஜார் , இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளையும் காணலாம். [3]

மலையேற்றம்

தொகு

பக்தர்களைத் தவிர மற்ற சுற்றுலாப் பயணிகளுக்கு, இப்பகுதியில் உள்ள லிம்பு கலாச்சார மலையேற்றம் சமமாக ஈர்க்கக்கூடியதாக கருதப்படுகிறது. ஒரு வார கால மலையேற்றம் தப்லேஜங், புருங்கா (அல்லது புரும்பு), லிம்கிம், கெவாங், டெல்லோக், பவாகோலா மற்றும் மாமன்கே போன்ற இனக் கிராமங்கள் வழியாக செல்கிறது.

அணுகல்

தொகு

பதிபரா யாங்வாரக் கிராமப்புற நகராட்சியில் அமைந்துள்ளது. பதிபராவிற்கான பயணம் சுகேதரிலிருந்து தொடங்குகிறது. இது பங்லிங் பஜாரிலிருந்து சுமார் 20 நிமிட பயணத்தில் உள்ளது. பின்னர் சுகேதாரிலிருந்து கப்லே பதிக்கு 1-2 மணிநேர பயணம் செய்ய வெண்டும். கப்லே பதியிலிருந்து பதிபரா தேவி கோயில் சுமார் 3-4 மணிநேர நடைப்பயணத்தில் உள்ளது.

சுகேதரில் உள்ள சுகேதர் விமான நிலையம் (2,840 மீ [9,320 அடி]) தப்லேஜங் மாவட்டத்தில் உள்ள ஒரே விமான நிலையமாகும். இது திட்டமிடப்பட்ட விமானங்கள் மூலம் காத்மாண்டுவையும் பிரத்நகரையும் இணைக்கிறது.

பதிபரா பாதை டெயூராலி, ரமிடெடாண்டா, சட்டேதுங்கா, பாலுகவுண்டா, பேடி வழியாக இறுதியாக கோயிலை அடைவதற்கு முன் செல்கிறது. பாதையில் வசிப்பவர்கள் உணவையும் தங்கும் வசதிகளையும் வழங்குகிறார்கள். கோவில் வளாகத்திற்கு அருகிலேயே பக்தர்கள் தங்குவதற்கான அடிப்படை வசதிகளும் உள்ளன.

கோவிலுக்கு வருகை தருவதற்கு முன்பருவ மழைக்காலமும் (மார்ச் முதல் சூன் வரை) , பருவமழைக்கு பிந்தைய காலங்களும் (செப்டம்பர் முதல் நவம்பர் வரை) ஆகும்.

பதிபரா தேவி கோயிலின் மணிகள்
கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய மணி
கோயில் வளாகத்தில் பௌத்த வழிபாட்டிற்கான கொடிகள்

சான்றுகள்

தொகு
  1. Asianheritagetreks. "Nepal - Pathivara Temple (7 Days)". asianheritagetreks. Archived from the original on 29 ஜூலை 2020. பார்க்கப்பட்ட நாள் 29 July 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. asianheritagetrek. "Nepal - Pathivara Temple (7 Days)". Asianheritagetrek.com. Archived from the original on 29 ஜூலை 2020. பார்க்கப்பட்ட நாள் 29 July 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. https://www.wondersofnepal.com/pathivara-temple/ Pathivara Temple

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிபரா_தேவி_கோயில்&oldid=3673817" இலிருந்து மீள்விக்கப்பட்டது