பதேகர் (Fatehgarh), வட இந்தியாவின் அமைந்த உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்த பரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள இராணுவப் பாசறை நகரம் ஆகும். இதனருகே பரூக்காபாத் மாநகரம் உள்ளது. பதேகர் கங்கை ஆற்றின் தென்கரையில் உள்ளது. பதேகர் அருகே பௌத்தம் தொடர்பான சங்காசியா மற்றும் சிராவஸ்தி பண்டைய நகரங்கள் உள்ளது. பதேகர் இராணுவப் பாசறை நகரம், இந்திய இராணுவத்தின் இராஜ்புத் ரெஜிமெண்டு, 114 தரைப்படை பட்டாலியன் மற்றும் சீக்கிய லைட் தரைப்படைகளின் தலைமையகம் உள்ளது. இது பரூகாபாத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

பதேகர்
நகரம்
பதேகர் is located in உத்தரப் பிரதேசம்
பதேகர்
பதேகர்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பதேகர் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°22′N 79°38′E / 27.37°N 79.63°E / 27.37; 79.63
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பரூக்காபாத்
அரசு
 • வகைஇராணுவப் பாசறை நகரம்
 • நிர்வாகம்பதேகர் இராணுவப் பாசறை மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்28.86 km2 (11.14 sq mi)
ஏற்றம்
138 m (453 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்14,793
 • அடர்த்தி350/km2 (900/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
209601
தொலைபேசி குறியீடு எண்05692
வாகனப் பதிவுUP 76
பாலின விகிதம்842/1000 /

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 7 வார்டுகளும், 2,486 வீடுகளும் கொண்ட பதேகர் இராணுவப் பாசறை நகரத்தின் மக்கள் தொகை 14,793 ஆகும். அதில் ஆண்கள் 9,135 மற்றும் பெண்கள்5,658 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 619 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1633 (11%) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 87.2% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,477 மற்றும் 9 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 72.7%, இசுலாமியர் 10.34%, சீக்கியர்கள் 15.93%, கிறித்தவர்கள் 0.77% மற்றும் பிறர் 0.25% ஆகவுள்ளனர்.[1]

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பதேகர்&oldid=3862862" இலிருந்து மீள்விக்கப்பட்டது