பதே சிங் (சீக்கியம்)
பாபா பதே சிங் (Fateh Singh) (12 டிசம்பர் 1697 – 26 டிசம்பர் 1705) சீக்கிய சமயத்தின் பத்தாவது மற்றும் இறுதி குருவான குரு கோவிந்த் சிங்கின் நான்கு பிள்ளைகளில் இளையவர் ஆவார். சீக்கிய சமயத்தில் பதே சிங்கும், இவரது மூத்த சகோதரர் சோரவார் சிங்கும் மிகவும் புனிதமான தியாகிகள் என்ற புகழை பெற்றவர்கள். சீக்கியர்கள் இவரது பெயருக்கு முன்னாள் பாபா (மூத்தவர்) அல்லது சாகிப்சதா (இளவர்சன்) இட்டு அழைப்பர்.
பாபா பதே சிங் | |
---|---|
குரு கோவிந்த் சிங்குடன் அவரது நான்கு மகன்கள் | |
பதவி | சாகிப்சதா |
சுய தரவுகள் | |
பிறப்பு | 12 டிசம்பர் 1697 |
இறப்பு | 26 திசம்பர் 1705 | (அகவை 8)
இறப்பிற்கான காரணம் | சட்டத்துக்கு புறம்பான கொலை |
சமயம் | சீக்கியம் |
பெற்றோர்கள் |
|
வரலாறு
தொகுமே 1705-இல் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் ஆனையின் படி, சீக்கியர்களின் அனந்த்பூர் சாஹிப் நகரம் பல மாதங்களாக முற்றுகை இடப்பட்டது. பல மாதங்கள் சீக்கியர்கள் தாக்குதல்களையும் முற்றுகைகளையும் தாங்கினர், ஆனால் இறுதியில் நகரத்தில் உணவு இருப்பு தீர்ந்துவிட்டது. சீக்கியர்கள் ஆனந்த்பூரை விட்டு வெளியேறினால், முகலாயர்கள் பாதுகாப்பான வெளியேற்றத்தை வழங்குவதாக கூறினர். அதனை குரு கோவிந்த் சிங் சம்மதித்து, தனது குடும்பத்தினரை ஒரு சிறிய குழுவினருடன் அனந்தபூர் சாகிப் நகரத்தை காலி செய்தார். குரு கோவிந்த் சிங்கின் தாயான மாதா குஜாரி, தனது இரண்டு பேரன்களான பதே சிங், சோரவார் சிங் மற்றும் குடும்ப வேலைக்காரர் கங்குவை உடன் அழைத்துக் கொண்டு தனது சொந்த கிராமமான சஹேதிக்கு சென்று கொண்டிருந்தார். முகலாயர்களால் லஞ்சம் பெற்ற வேலைக்காரர் கங்கு, குரு கோவிந்த் சிங்கின் குடும்பத்தின் மூன்று உறுப்பினர்களையும் சிர்இந்த்-பதேகர் என்ற இடத்தின் நவாப் வசீர் கான் முன்னிலையில் அழைத்துச் சென்றார்.
குரு கோவிந்த் சிங்கின் இரண்டு மகன்களான பதே சிங் (வயது 8) மற்றும் சோரவார் சிங்கை (வயது 10) இசுலாமிய சமயத்திற்கு மதம் மாறினால் உயிருடன் விடப்படுவர் என்றார் நவாப் வசீர் கான். ஆனால் இரண்டு சிறுவர்களும் இசுலாம் சமயத்திற்கு மதம் மாற மறுத்தனர். வசீர் கான் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தார். குழந்தைகள் இருவரையும் உயிருடன் வைத்து செங்கல் சுவரை எழுப்பி மூடி கொல்லப்பட்டனர்.[1] பதேசிங் குருத்துவார் கோயிலில் இக்குழந்தைகள் உயிருடன் கொல்லப்பட்ட செங்கல் சுவர் அடையாளம் இன்றும் காணப்படுகிறது.
குரு கோவிந்த் சிங்கின் மறைவிற்குப் பின்னர் கால்சா சீக்கிய இராணுவத்தில் பணியாற்றிய பண்டா சிங் பகதூர் என்பவர் இரண்டு சீக்கிய குழந்தைகளை உயருடன் கொன்ற வசீர் கானை சிர்இந்த்-பதேகர் போரில் தலையை துண்டித்துக் கொன்றார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Singh, Patwant (2001). The Sikhs by Patwant Singh. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780385502061.
- ↑ Syad Muhammad Latif (1984), History of the Panjab from the Remotest Antiquity to the Present Time, Progressive Books, p. 274