பத்மாவதி அனந்தகோபாலன்

பத்மாவதி அனந்தகோபாலன் (Padmavathy Ananthagopalan) (பிறப்பு: 1934 சூலை 12) கருநாடக இசை வகைகளில் இந்தியாவிலிருந்து வந்த ஒரு பாரம்பரிய இசைக்கலைஞரும் மற்றும் வீணை மேதையுமாவார். இவர் மிருதங்கம் மற்றும் நாதசுவரம் இசைக்கத் தெரிந்தவர். இவருக்கு வீணை வாசிப்பதில் ஏழு ஆண்டு அனுபவம் உள்ளது. இவர் திறமையான இசைக் கலைஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். அதில் வயலின் மேதையான லால்குடி ஜெயராமன் மற்றும் அவரது மூதாதையர்கள் தியாகராஜரின் நேரடி சீடர்கள் ஆவர்.

இவர் தனது தனித்துவமான " கயாகி " பாணியால் அறியப்படுகிறார். இவர் குரு-சீடர் ( குருகுலம் ) மரபுக்கு பெரும் உதாராணமாவார். ஜெயந்தி குமரேஷ் (வீணை), உஷா ராஜகோபாலன் (வயலின்) போன்ற ஏராளமான கலைஞர்களுக்கு இவர் குருவாக இருந்துள்ளார். இவர்சிறீசத்குரு சஙகீத இசைப் பள்ளியின் நிறுவனரும் ஆவார். மேலும் இந்த நிறுவனம் மூலம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கற்பித்தல் பணியை செய்து வருகிறார்.

ஆரம்ப நாட்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

பத்மாவதி தனது தந்தை லால்குடி கோபால ஐயரால் ஐந்து வயதில் இசை பயிற்சியைத் தொடங்கினார். அவரிடமிருந்து வீணை வாசிப்பதன் நுணுக்கங்களை இவர் கற்றுக்கொண்டார். இவரது முதல் சைசை நிகழ்ச்சி பன்னிரண்டு வயதில் இருந்தது. [1] இவரது மூதாதையர்கள் கருநாடக இசையின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான தியாகராஜரின் நேரடி சீடர்கள் ஆவார்கள்.

பத்மாவதியின் கணவர் அனந்தகோபாலனும் ஒரு வீணை மற்றும் வயலின் நிபுணராவார். இந்த கருவிகளை வாசிப்பதற்கு மாணவர்களுக்கு அனந்தகோபாலன் கற்றுக்கொடுக்கிறார். இவரது மூத்த சகோதரர் மறைந்த வயலின் மேதை, பாடகர் மற்றும் இசையமைப்பாளர் பத்ம பூசண் லால்குடி ஜி.ஜெயராமன் ஆவார் . இவரது தங்கைகளான லால்குடி இராஜலட்சுமி, லால்குடி சிறீமதி பிரம்மானந்தம் ஆகியோரும் வயலின் கலைஞர்கள். [2]

தொழில்

தொகு

பத்மாவதி வீணையை " கயாகி " பாணியில் இசைக்கிறார். அதில் இவர் இசைக் கருவியில் உள்ள நுணுக்கங்களை குரல் விளக்கக்காட்சியிலும் வழங்குகிறார். வித்வான் எஸ் பாலச்சந்தர் இவருக்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். மேலும் இவர் அவரை தனது " மானசீக குரு" என்று கருதினார் . அவர் அனைத்து பிரபலங்களையும் கவனித்தார். இறுதியில் தனது சொந்த தனித்துவமான பாணியைக் கொண்டு வந்தார், அதில் ஒவ்வொரு சுரத்தையும் ஒரு இராகத்தில் வழங்கினார். [3]

ஒரு 'ஏ' தர கலைஞரான இவர் அகில இந்திய வானொலி மற்றும் பிரபலமான தொலைக்காட்சி வலைப்பின்னல்களில் தவறாமல் இடம்பெறுகிறார். இவர் தனது மாணவர்களின் நலனுக்காக லலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்யலகரி, மூக பஞ்சசதி போன்ற சமஸ்கிருத படைப்புகளை இசைக்கவும் செய்துள்ளார். [4]

இவர் பல சர்வதேச நிகழ்ச்சிகளையும் சுற்றுப்பயணங்களையும் தனது கணக்கில் கொண்டுள்ளார். 1990 முதல் இவர் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணங்களில் சிலவற்றில் இவருடன் ஜெயந்தி குமரேசுவும் சென்றுள்ளார்.

அவர் தற்போது அதிக திறமையான வீணா கலைஞர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் பிற இசைக்கருவிகள் மற்றும் குரல் நிகழ்ச்சிகளுக்காக சபாக்களில் வீணா நிகழ்ச்சிகளை அதிக அளவில் ஏற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துகிறார்.

புத்தகங்கள்

தொகு

இசை மாணவர்களுக்காக சிங்கப்பூர் இந்தியன் நுண்கலை அமைப்புடன் இணைந்து சட்ஜம் மற்றும் ரிஷபம் என்ற இரண்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். கர்நாடக இசையில் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களுக்காக அபியாச மஞ்சரி என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.. [1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Lalgudi Padmavathy". SPICMACAY. பார்க்கப்பட்ட நாள் 15 March 2015.
  2. V, Balasubramanian (July 10, 2014). "Her life with the Veena". The Hindu. Chennai. http://www.thehindu.com/features/friday-review/her-life-with-the-veena/article6196979.ece. பார்த்த நாள்: 14 March 2015. 
  3. S, Subhakeerthana (1 September 2014). "Seven Decades of Playing the Veena". The New Indian Express. Chennai. http://www.newindianexpress.com/cities/chennai/Seven-Decades-of-Playing-the-Veena/2014/09/01/article2407848.ece. பார்த்த நாள்: 14 March 2015. 
  4. Kumaresh, Jayanthi (October 2010). "My Guru". Sruti: 41, 42. https://www.dhvaniohio.org/wp-content/uploads/2011/09/padmavathy-ananthagopalan.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மாவதி_அனந்தகோபாலன்&oldid=2937716" இலிருந்து மீள்விக்கப்பட்டது