பத்மா சச்தேவ்

இந்தியக் கவிஞர், புதின ஆசிரியர்

பத்மா சச்தேவ் (Padma Sachdev, 17 ஏப்ரல் 1940 - 4 ஆகஸ்ட் 2021) ஓர் இந்திய கவிஞரும் மற்றும் புதின ஆசிரியரும் ஆவார். இவர் தோக்ரி மொழியின் முதல் நவீன பெண் கவிஞராக அறியப்படுகிறார்.[1]இவர் இந்தியிலும் கவிதைகளை எழுதினார். 1971 இல் சாகித்ய அகாடமி விருதை வென்ற மேரி கவிதா மேரே கீத் (என் கவிதைகள், என் பாடல்கள்) உட்பட பல கவிதைத் தொகுப்புகளை இவர் வெளியிட்டார்.[2] [3] 2001 ஆம் ஆண்டில் இந்தியக் குடிமகனின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ இவருக்கு வழங்கப்பட்டது.[4] 2007-08இல் மத்திய பிரதேச அரசு [5] கவிதைக்கான கபீர் சம்மான் விருது, 2015 ஆம் ஆண்டிற்கான சரசுவதி சம்மான் விருது , [6] [7] 2019 இல் சாகித்ய அகாடமியின் உதவித்தொகை ஆகியவற்றையும் பெற்றார்.[8]

பத்மா சச்தேவ்
2018இல் பத்மா சச்தேவ்
2018இல் பத்மா சச்தேவ்
பிறப்பு(1940-04-17)17 ஏப்ரல் 1940
புர்மந்தல் சம்மு, ஜம்மு காஷ்மீர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா
இறப்பு4 ஆகத்து 2021(2021-08-04) (அகவை 81)
மும்பை
தொழில்கவிஞர், எழுத்தாளர்
மொழிதோக்ரி மொழி
தேசியம் இந்தியா
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்திய அகாதமி; பத்மசிறீ; கபீர் சம்மான்
துணைவர்வேத்பால் தீப் மற்றும் பின்னர் சிரீந்தர் சிங் (பாடகர் (1966-2021)

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இறப்பு

தொகு

பத்மா சச்தேவ், 1940 ஏப்ரல் 17 அன்று சம்முவில் உள்ள புர்மந்தலில் உள்ள பாரு பிராமண குடும்பத்தில் பிறந்தார்.[9] 1947 இல் இந்தியப் பிரிவினையின் போது கொல்லப்பட்ட சமசுகிருத அறிஞரான பேராசிரியர் ஜெய் தேவ் படுவின் மூன்று குழந்தைகளில் இவர் மூத்தவர். இவர் முதலில் வேட்பால் தீப் என்பவரை மணந்தார். பின்னர் 1966 இல் இசை இரட்டையர்களான " சிங் பந்து " பாடகர் சுரிந்தர் சிங்கை மணந்தார். [10] இவர்கள் இருவரும் முதலில் புதுதில்லியில் வசித்து வந்தனர். ஆனால் பின்னர் மும்பைக்கு மாறினார்கள்.[2]

தொழில்

தொகு

பத்மா சச்தேவ் சம்முவில் உள்ள அனைத்திந்திய வானொலியில் 1961 முதல் அறிவிப்பாளராக பணியாற்றினார். அங்கே இவர் சிங் பந்து இசை இரட்டையர்களின் இந்துஸ்தானி பாடகர் சுரிந்தர் சிங்கை சந்தித்தார். அவர் அந்த நேரத்தில் வானொலியில் ஒரு அதிகாரியாக இருந்தார். அடுத்த ஆண்டுகளில், இவர் மும்பையிலன் அனைத்திந்திய வானொலியில் பணியாற்றினார்.[2]

பத்மா சச்தேவ், 1969 ஆம் ஆண்டு மேரி கவிதா மேரே கீத் (என் கவிதை என் பாடல்) என்ற கவிதைத் தொகுப்பிற்காக சாகித்திய அகாதமி விருதைப் பெற்றார். படைப்பின் முன்னுரையில், இந்தி கவிஞர் ராம்தாரி சிங் திங்கர் "பத்மாவின் கவிதைகளைப் படித்த பிறகு, நான் என் பேனாவை தூக்கி எறிய வேண்டும் என்று உணர்ந்தேன் – பத்மா எழுதுவது உண்மையான கவிதை" எனக் குறிப்பிட்டார். பூண்ட் பவாடி என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதினார். இவரது புத்தகம் இன் பின் ( அவர்கள் இல்லாமல் ) இந்தியக் குடும்பங்களில் வீட்டு உதவியாளர்களின் பங்கை பாராட்டும்விதமாக எடுத்துரைத்தார்.[11]

திரையுலகம்

தொகு

ஜெய்தேவ் இசையமைத்து வேத் ராகியின் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளியான " பிரேம் பர்பத் " என்ற பாலிவுட் திரைப்படத்தின் 'மேரா சோட்டா சா கர் பார்' என்ற பாடலின் வரிகளை இவர் எழுதினார். அதன்பிறகு, 1978 ஆம் ஆண்டு வெளியான இந்தித் திரைப்படமான "ஆன்கின் தேக்கி"யின் முகமது ரபி மற்றும் சுலக்சனா பண்டிட் ஆகிய இருவரும் பாடிய பிரபலமான "சோனா ரே, துஜே கைசே மிலூ" உட்பட இரண்டு பாடல்களின் வரிகளையும் இவர் எழுதினார். இதற்கு ஜேபி கௌஷிக் இசையமைத்திருந்தார். அமீன் சங்கீத் இசையமைத்த 1979 ஆம் ஆண்டு இந்தித் திரைப்படமான "சாஹாஸ்" படத்திற்காக யோகேஷ் உடன் இணைந்து பாடல் வரிகளை எழுதினார்.

இறப்பு

தொகு

இவர் 4 ஆகஸ்ட் 2021 அன்று மும்பையில் தனது 81 வயதில் இறந்தார். [12] [13]

நூல் பட்டியல்

தொகு

மொழிபெயர்ப்புகள்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு
  • K. M. George; Sahitya Akademi (1992). Modern Indian Literature, an Anthology: Plays and prose. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8172013248.
  • Shiv Nath (1997). 2 Decades of Dogri Literature. Sahitya Akademi. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8126003936.
  • Divya Mathur (2003). "Padma Sachdev:Introduction". Aashaa: Short Stories by Indian Women Writers: Translated from Hindi and Other Indian Languages. Star Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8176500755.

வெளி இணைப்புகள்

தொகு
  1. George, p. 522
  2. 2.0 2.1 2.2 Mathur, p. 182
  3. "Sahitya Akademi Award". பார்க்கப்பட்ட நாள் 26 February 2013.
  4. "Padma Awards Directory (1954–2009)" (PDF).
  5. "Rashtriya Mahatma Gandhi Award to be given to Seva Bharti". 10 August 2008. http://www.hindu.com/thehindu/holnus/004200808101759.htm. 
  6. "Jammu-born poet Padma Sachdev gets Saraswati Samman". 12 April 2016. https://www.business-standard.com/article/pti-stories/jammu-born-poet-padma-sachdev-gets-saraswati-samman-116041200967_1.html. 
  7. "Dogri poet Padma Sachdev awarded Saraswati Samman". India Today (in ஆங்கிலம்). April 12, 2016. பார்க்கப்பட்ட நாள் 2021-12-01.
  8. "Padma Sachdev conferred Akademi's highest honour" (in அமெரிக்க ஆங்கிலம்). 12 June 2019. பார்க்கப்பட்ட நாள் 4 August 2021.
  9. "Padamshree Padma Sachdev" (in அமெரிக்க ஆங்கிலம்). 17 April 2021. பார்க்கப்பட்ட நாள் 4 August 2021.
  10. "Song of the Singhs". 6 May 2004. http://www.hindu.com/mp/2004/05/06/stories/2004050600290300.htm. 
  11. Ghosh (August 5, 2021). "Noted Dogri writer Padma Sachdev, who passed away, worked closely with Lata Mangeshkar" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-07.
  12. "Eminent Dogri Poet Padma Sachdev dies at 81, Jitendra Singh mourns". 4 August 2021. http://www.uniindia.com/eminent-dogri-poet-padma-sachdev-dies-at-81-jitendra-singh-mourns/north/news/2467251.html. 
  13. "Dogri Poet Padma Sachdev Is No More". 4 August 2021. பார்க்கப்பட்ட நாள் 4 August 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மா_சச்தேவ்&oldid=3892048" இலிருந்து மீள்விக்கப்பட்டது