பத்மா திரையரங்கம்

இந்தியாவின் கொச்சி நகரத்திலுள்ள ஒரு திரையரங்கம்

பத்மா திரையரங்கம் (Padma Theatre) இந்தியாவின் தென்னிந்திய நகரமான கேரளாவின் கொச்சியில் உள்ளது. மகாத்மா காந்தி சாலையில் அமைந்துள்ள இத்திரையரங்கம் 1946 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டதாகும்.[1] கேரளாவின் பழமையான திரையரங்குகளில் ஒன்றான இது இன்னும் இயங்கி வருகிறது. கொச்சியில் செயல்படும் பழமையான திரையரங்கமான இது ஒரு முக்கிய கட்டிடமாகவும் கருதப்படுகிறது. [2]

பத்மா திரையரங்கம்
Padma Theatre
2011 ஆம் ஆண்டில் பத்மா திரையரங்கம்
முகவரிமகாத்மா காந்தி சாலை, கொச்சி
நகரம்கொச்சி, கேரளம்,
நாடுஇந்தியா
உரிமையாளர்செனாய் குடும்பம்
திறப்பு1946
செயல்பட்ட ஆண்டுகள்1946–முதல்
பிற பெயர்கள்பத்மா சினிமா

வரலாறு

தொகு

பத்மா திரையரங்கம் 1946 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. செனாய் குடும்பத்தின் இரண்டாவது திரையரங்கமாக இத்திரையரங்கம் திகழ்கிறது. இதற்கு முன், இலட்சுமணன் செனாய், 1944 ஆம் ஆண்டில் இலட்சுமன் திரையரங்கை திறந்தார். திரையரங்கத்திற்கு இலக்மன் செனாயின் மனைவி பெயர் சூட்டப்பட்டது. கொச்சி அரச குடும்பத்திற்கு 20 சிறப்பு இருக்கைகள் ஒதுக்கப்பட்ட மாடியின் முன்பாகம் இருந்தது. பத்மா திரையரங்கம் 1971 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.. ஒலிகளை ஒளிமூலமாகக் கடத்தும் அமைவு கொண்ட நவீன படவீழ்த்தியுடன் திரையரங்கம் குளிரூட்டப்பட்டது. . புதுப்பிக்கப்பட்ட திரையரங்கை நடிகர் கமலகாசன் திறந்து வைத்தார். [3]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "സിനിമാലോകത്തെ ഷേണായിമാർ" (in ஆங்கிலம்). 2021-01-30. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
  2. "Kochi's Favourite Padma Theatre is Back with a Bang!" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
  3. V. K, Rajendran (1994). "ഷേണായ്മാർ 50 പിന്നിടുമ്പോൾ". Malayala Manorama: pp. 8,9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மா_திரையரங்கம்&oldid=3812068" இலிருந்து மீள்விக்கப்பட்டது