பந்தோரா, கோவா

பந்தோரா (Bandora) என்பது இந்தியாவின் கோவா மாநிலத்தின் வடக்கு கோவா மாவட்டத்தில் இருக்கும் பாண்டா தாலுக்காவில் உள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊராகும்.

பந்தோரா
Bandora
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கோவா
மாவட்டம்வடக்கு கோவா
ஏற்றம்
107 m (351 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்12,264
மொழிகள்
 • அலுவல்பூர்வம்கொங்கணி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

புவியியல் அமைப்பு

தொகு

15.40°வடக்கு மற்றும் 73.97°கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் பந்தோரா நகரம் [1] பரவியுள்ளது. [2] மேலும் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 107 மீட்டர் உயரத்தில் இந்நகரம் உள்ளது

மக்கள் தொகையியல்

தொகு

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பந்தோரா நகரின் மொத்த மக்கள் தொகை 12,264 ஆகும். [3] இம்மக்கள் தொகையில் 54% பேர் ஆண்கள் மற்றும் 46% பேர் பெண்கள் ஆவர். பந்தோரா நகரின் கல்வியறிவு சதவீதம் 71% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். கல்வியறிவு பெற்ற மக்களில் ஆண்கள் 59% எண்னிக்கையும் பெண்கள் 41% எண்ணிக்கையிலும் காணப்பட்டனர். மக்கள் தொகையில் 10% பேர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர்.

தொல்பொருளியல்

தொகு

சமண சமயத்தின் 22 ஆவது தீர்த்தங்கரர் நேமிநாதருடைய ஒரு பண்டைய சமணக் கோயில் இங்கு கண்டறியப்பட்டுள்ளது. கி.பி 1425 ஆம் ஆண்டு காலத்தைச் சார்ந்த இக்கோயில் தற்பொழுது ஒரு தொல்பொருள் தளமாக விளங்குகிறது. [4][5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. Falling Rain Genomics, Inc - Bandora
  2. Falling Rain Genomics, Inc - Carapur
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  4. TNN (24 November 2008), Singular pre-Portuguese monument crumbling from neglect Paul Fernandes finds that the Jain basti at Bandora requires conservation, Goa: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, archived from the original on 5 மார்ச் 2016, பார்க்கப்பட்ட நாள் 11 ஆகஸ்ட் 2021 {{citation}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  5. Shenoy, Balaji (11 February 2015), Ruins of Neminath Jain Basti at Bandora, The Navhind Times
  6. Kerkar, Rajendra; TNN (31 October 2014), Jain heritage dwindles as govt sits pretty, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தோரா,_கோவா&oldid=3575509" இலிருந்து மீள்விக்கப்பட்டது