பனகமுட்லு
பனகமுட்லு என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.[1]
பனகமுட்லு
வண்ணக்கமுட்டல் | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
வரலாறு
தொகுஇந்த கிராமத்தில் உள்ள ஒரு மாந்தோப்பில் சுமார் 500 ஆண்டு பழமையான கல்வெட்டுடன் கூடிய நடுகல்லை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இந்த நடுகல்லில் வீரன் ஒருவன் வில்லேந்தி போரிடுவது போன்ற புடைப்புச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் மேற்புறம் 9 வரிகளில் கல்வெட்டு வரிகள் உள்ளன. இக்கல்வெட்டு தகவலின்படி தற்போது பனகமுட்லு என்று அழைக்கப்படும் இந்த ஊர் கடந்த 500 ஆண்டுக்கு முன்னர் வண்ணக்கமுட்டல் என்று அழைக்கப்பட்ட செய்தி தெரிய வந்தது. அப்போது இந்த ஊரின் மீது படையெடுத்து வந்த மாமயதண்ணாக்கன் என்பவரது படையை அழித்து, தானும் இறந்து போனார் காமிண்டர் கோவிந்தாண்டை ஆந்தையந்த அடியான் பணிக்கமாராயன் என்பவரின் மகனான படலன் என்ற வீரன். இந்த வீரனது உயிர் தியாகத்தை போற்றும் வகையில் கோவிந்தாண்டை என்பவர் இந்த நடுகல்லை செதுக்கவைத்தார். இக்கல்லை காணிக்காத்தான் என்பவர் நட்டார்.[2]
ஊரில் உள்ள கோயில்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "பனகமுட்லு கிராமத்தில் ரேஷன் குறைதீர் கூட்டம்". செய்தி. தினகரன். 14 நவம்பர் 2014. Archived from the original on 2022-03-16. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "500 ஆண்டு பழமையான நடுகல் கண்டுபிடிப்பு". செய்தி. தினமலர். 8 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)