பனிப்புயல்
சில வேளைகளில் புயல்காற்று வீசுவது இயல்பு. வட தென் துருவங்களிலிருந்து வீசும் புயல்காற்றில் சிதறுண்ட பனிக்கட்டிகளும் கலந்து வரும். இதுவே பனிப்புயல் (Blizzard) என்பது ஆகும்.

பனிப்புயல் வீசும் பகுதிகள் தொகு
மத்திய கிழக்குக் கனடா, சோவியத் ரஷ்யா, அமெரிக்காவின் மிசிசிப்பி வடிகால்பகுதி ஆகியவை பனிப்புயல் வீசும் பகுதிகளாகும்.
பனிப்புயலின் இயல்புகள் தொகு
பனிப்புயல் சிலசமயம் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதுண்டு. பனிப்புயலால் பெருஞ்சேதம் உண்டாகும். இப்புயல் எப்போது எத்திசையில் வீசக்கூடும் என்பதை வானிலை ஆராய்ச்சி நிலையம் முன்னதாகவே தெரிந்து அறிவிக்க முடியும். இதனால் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்ள முடிகிறது.
மேற்கோள்கள் தொகு
- "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1992, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.