பன்னாட்டுத் தாவரப் பெயர்கள் குறிப்பேடு


பன்னாட்டு தாவரப் பெயர்கள் குறிப்பேடு (The International Plant Names Index (IPNI)) என்பது தாவரங்கள் குறித்தத் தரவுகளை ஒருங்கிணைத்துத் தரும் இணையதளம் ஆகும். இத்தளத்தில் கூறியுள்ளபடி, இதில் வித்துத் தாவரங்கள், பன்னம், இலைகோபைட்டு (lycophyte) ஆகிய தாவரங்களின் தரவுத்தளம் ஆகும். இத்தரவுதளம் இனம், பேரினம் குறித்த பன்னாட்டு ஆய்வுத்தரவுகளையும், நூற்பட்டியல்களையும் தொகுத்து அளிக்கிறது.[1] ஒரு தாவரம் குறித்து வரும் தரவுகள், வெவ்வேறு பெயர்களில், பலமுறை வருவதை தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது.[2][3] இத்தளத்தில் ஆய்வாளர் நற்குறிப்பு - தாவரவியல் என்ற நோக்கில், ஒரு தாவரவியலாளர் குறித்த சீர்தரமுள்ள தரவுகளை (Brummitt & Powell (1992)) தொடர்ந்து மேம்படுத்தித் தருகிறது.

பன்னாட்டு தாவரப் பெயர்கள் குறிப்பேடு
International Plant Names Index
வலைத்தள வகைDatabase
உரிமையாளர்Plant Names Project
உருவாக்கியவர்The அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ, Harvard University Herbarium, and the Australian National Herbarium
வணிக நோக்கம்No
பதிவு செய்தல்Not required
வெளியீடு1999
உரலிwww.ipni.org இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

கூட்டுழைப்பு

தொகு

இப்னி (IPNI) என்ற சுருக்கப்பெயரால் அழைக்கப்படும் இதன் தரவுகள், அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ (Index Kewensis), [ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம்]] (Gray Herbarium Index), ஆத்திரேலிய தேசிய உலர்தாவரகம் (Australian Plant Name Index|APNI) ஆகிய அமைப்புகளின் சீர்தரமுள்ள தரவுத்தொகுப்பாகும். ஆத்தர் ஆஃப் பிளாண்ட் நேம்ஸ்(Brummitt and Powell's ) என்பதன் அடிப்படையில், தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை உருவாக்கப்பட்டது. இதன் சீர்தரமுள்ள தாவரவியலாளரின் சுருக்கப்பெயர்கள் பேணப்படுகின்றன. இத்தகையத் தரவுகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, வளர்க்கப்பட்ட இணைய இணைப்பு நிலையில், உலகின் பன்னாட்டினரும் உடனடியாக அறியும் வகையில் எண்ணிமத் தகவல்களாக அணுகும் நிலையில் தரப்படுகிறது. தாவரப்பெயர்கள், தாவர பெயரிடல் முறைமையின்படி (botanical nomenclature) மட்டும் அல்லாமல், பன்னாட்டு ஆய்விதழ்கள் வெளியிடும் பெயர்களையே இத்தளம் முதன்மையாகத் தருகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "About". International Plant Names Index. பார்க்கப்பட்ட நாள் 1 மார்ச்சு 2024.
  2. 2.0 2.1 Lughadha, Eimear Nic (29 April 2004). "Towards a working list of all known plant species". Philosophical Transactions of the Royal Society of London. Series B, Biological Sciences 359 (1444): 681–687. doi:10.1098/rstb.2003.1446. பப்மெட்:15253353. 
  3. Croft, J.; Cross, N.; Hinchcliffe, S.; Lughadha, E. Nic; Stevens, P. F.; West, J. G.; Whitbread, G. (May 1999). "Plant Names for the 21st Century: The International Plant Names Index, a Distributed Data Source of General Accessibility". Taxon 48 (2): 317. doi:10.2307/1224436. 

வெளியிணைப்புகள்

தொகு