பன்னாட்டு பௌத்த அருங்காட்சியகம்
பன்னாட்டு பௌத்த அருங்காட்சியகம் அல்லது பன்னாட்டு பௌத்த நூதனசாலை (International Buddhist Museum) என்பது இலங்கையில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இதுவே உலகிலிலேயே முதலாவதாகக் கட்டப்பட்ட பௌத்த அருங்காட்சியகம் ஆகும்.[1] இது கண்டியில் தலதா மாளிகைக்கும் கண்டி தேசிய அருங்காட்சியகத்துக்கும் அடுத்ததாக அமைந்துள்ளது. இது கண்டியில் மன்னாகவிருந்த முதலாம் விமலதர்மசூரியனின் மாளிகை அமைந்துள்ள இடத்திலேயே தற்போது இயங்குகின்றது.[2] அவ்விடத்தில் பின்னர் பிரித்தானியரால் விக்டோரியா அரசியின் காலத்தில் கட்டடம் கட்டப்பட்டு கச்சேரியாகப் பயன்படுத்தப்பட்டது.
சர்வதேச பௌத்த நூதனசாலை | |
நிறுவப்பட்டது | 2011 |
---|---|
அமைவிடம் | கண்டி, இலங்கை |
ஆள்கூற்று | 7°17′41″N 80°38′27″E / 7.29472°N 80.64083°E |
வகை | மதம் |
வலைத்தளம் | International Buddhist Museum website |
இவ்வருங்காட்சியகத்தை அமைப்பதற்கு இலங்கை, இந்தியா, சீனா, ஜப்பான், வங்காளதேசம், மியான்மார், தாய்லாந்து, இந்தோனேசியா, நேபாளம், பாக்கித்தான், கொரியா, லாவோசு, வியட்நாம், கம்போடியா, மலேசியா, பூட்டான், ஆப்கானித்தான் ஆகிய 17 நாடுகள் தமது பங்களிப்பையும் ஆற்றியுள்ளன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sri Lanka President declares open the International Buddhist Museum". Archived from the original on 29 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 29 May 2015.
- ↑ "World's Buddhist countries to be showcased at museum in Kandy". பார்க்கப்பட்ட நாள் 29 May 2015.
- ↑ "Contributions". பார்க்கப்பட்ட நாள் 29 May 2015.