பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம்
வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்களின் வணிகச் சங்கம்
பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம் (International Air Transport Association, IATA) வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்கங்களின் பன்னாட்டு வணிகச் சங்கமாகும். இதன் தலைமையகம் மொண்ட்ரியால், கியூபெக், கனடாவில் அமைந்துள்ளது. இதன் செயல் அலுவலகங்கள் சுவிட்சர்லாந்தின் செனீவா வானூர்தி நிலையத்திலிருந்து இயங்குகின்றன. இச்சங்கத்தின் நோக்கம் தங்கள் தொழிற்துறையின் சார்பாளராக விளங்கிடவும் வழிநடத்திச் செல்லவும் துறைசார்ந்த ஆதரவை நல்குவதும் ஆகும். இச்சங்கத்தில் 240 ஏர்லைன்சுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இது பன்னாட்டு வான் போக்குவரத்தில் 84% ஆகும்.[1] இதன் தற்போதைய தலைமை இயக்குநராகவும் முதன்மை செயல் அதிகாரியாகவும் டோனி டைலர் இருந்து வருகிறார். இச்சங்கம் 150 நாடுகளில் 101 அலுவலகங்களுடன் செயல்பட்டு வருகிறது.
சுருக்கம் | ஐஏடிஏ |
---|---|
உருவாக்கம் | ஏப்ரல் 19, 1945அவானா, கூபா | ,
வகை | பன்னாட்டு வணிகச் சங்கம் |
நோக்கம் | வான்வழிச் சேவைத் தொழிலுக்கு சார்பாகவும் வழிநடத்தவும் சேவை புரியவும் |
தலைமையகம் | 800 பிளேசு விக்டோரியா (ரூ காவின்), மொண்ட்ரியால், கனடா |
ஆள்கூறுகள் | 45°30′02″N 73°33′42″W / 45.5006°N 73.5617°W |
உறுப்பினர்கள் | 240 வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்கள் (2011)[1] |
தலைமை இயக்குநரும் முதன்மை செயல் அதிகாரியும் | டோனி டைலர் |
வலைத்தளம் | iata.org |
மேற்சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Airlines". IATA. Archived from the original on 8 டிசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 13 December 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)