பன்னிஹட்டி பரமேசுவரப்ப தாக்சாயணி
பன்னிஹட்டி பரமேசுவரப்ப தாக்சாயணி (Bannihatti Parameshwarappa Dakshayani) இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு செயற்கைக்கோள் மையத்தின் விமான இயக்கவியல் மற்றும் விண்வெளி ஊடுருவல் குழுக்களின் குழு இயக்குநராக இருந்தார்
பிபி தாக்சாயணி | |
---|---|
இயற்பெயர் | பன்னிஹட்டி பரமேசுவரப்ப |
பணியிடங்கள் | இந்திய விண்வெளி ஆய்வு மைய செய்மதி நடுவம் சர் வுசுவேசுரைய்யா அறிவியல் தொழிழ் நுட்பக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | மைசூர் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | செவ்வாய் சுற்றுகலன் திட்டம் |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஇவர், கர்நாடகாவின் பத்ராவதியில் பிறந்து வளர்ந்தார். [1] தன்னுடைய தந்தையால் பொறியியல் படிக்க இவர் ஊக்கப்படுத்தப்பட்டார். ஆனால் இளங்கலை பட்டம் போதுமானதாக இருக்கும் என்று இவரது தந்தை நினைத்தார். இவர் மைசூர் பல்கலைக்கழகத்தில் கணிதம் பயின்றார். மேலும், 1981 இல் முதுகலைப் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற பிறகு சர் விசுவேசுவரைய்யா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் கணிதம் கற்பித்தார். 1998 ஆம் ஆண்டில் இந்திய அறிவியல் கழகத்தில் விண்வெளி பயண பொறியியலில் முதுகலை முடித்தார்.
தொழில்
தொகு1984 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு செயற்கைக்கோள் மையத்தில் தாக்சாயணி நியமிக்கப்பட்டார். [1] இவர் கணினி நிரலாக்க மற்றும் சுற்றுப்பாதை இயக்கவியலுக்கு நியமிக்கப்பட்டார். இவர் இப்பணிக்கு விண்ணப்பிக்கும்வரை ஒரு கணினியையும் பார்த்ததில்லை, எனவே மாலை நேரங்களில் கூடுதலாக கணினியைப் பற்றி கற்றுக்கொண்டார். பாதை உருவாக்கத்திற்காக இவர் வடிவமைத்த மென்பொருள் பல விண்வெளி பயணங்களில் பயன்படுத்தப்பட்டது.
இவர் விமான இயக்கவியல் மற்றும் விண்வெளி ஊடுருவல் குழுக்களுக்கு இயக்குநராக நியமிக்கப்பட்டார். செயற்கைக்கோள்களின் வளர்ச்சி மற்றும் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களில் சுமார் 27% பெண்கள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு செயற்கைக்கோள் மையத்தின் குறைந்த பூமி, புவி ஒத்திசைவு சுற்றுப்பாதை மற்றும் கிரகப் பணிகளுக்கு இவர் பொறுப்பேற்றார். இவர் விண்வெளி ஓடம் மீட்பு பரிசோதனைக்கான திட்ட மேலாளராகவும், செவ்வாய் கிரக சுற்றுகலன் திட்டத்தின் துணை திட்ட மேலாளராகவும் இருந்தார். சுற்றுப்பாதை நிலைத்தன்மையின் பகுப்பாய்வை முடித்த பிறகு, மிகவும் விசித்திரமான சுற்றுப்பாதை சிறந்த நிலை துல்லியத்தை வழங்கும் என்பதை இவர் அடையாளம் கண்டார். [2] [3] இவர் தனது செவ்வாய் கிரக சுற்றுகலன் திட்டத்திற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு செயற்கைக் கோள் மையத்தின் தகுதி விருதை வென்றார். செப்டம்பர் 2014 இல் இந்த பணி செவ்வாய் சுற்றுப்பாதையில் நுழைந்தது. [4] 2018 ஆம் ஆண்டில் பிபிசி உலக சேவை நிகழ்ச்சியான மை இந்தியன் லைஃப் வித் கல்கி கோய்ச்லின் என்ற நிகழ்ச்சியில் தோன்றினார். [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Pandey, Geeta (2018-09-02). "How to cook curry and get a spacecraft into Mars orbit" (in en-GB). BBC News. https://www.bbc.com/news/stories-45374442.
- ↑ "Orbital Dynamics - Part 1" (PDF). International Astronautical Congress. 2011. பார்க்கப்பட்ட நாள் 2018-09-02.
- ↑ "IAC Archive — IAC-13/C1/5/4". iafastro.directory. பார்க்கப்பட்ட நாள் 2018-09-02.
- ↑ B S, Kiran. "Mission Design, Operations & Optimization" (PDF). International Astronautical Congress. பார்க்கப்பட்ட நாள் 2018-09-02.
- ↑ "BBC World Service - Rocket Woman". www.bbc.co.uk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-02.