பன்மொழி நூலகம், ஓசுலோ
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பன்மொழி நூலகம், நோர்வேயின் ஓசுலோவில் அமைந்துள்ளது. பல்வகைப்பண்பாடுகள் மற்றும் பன்மொழிகளுக்கான நூலகமாகத் திகழ்கிறது. பிற நூலகங்களுக்கு ஆலோசனைகளையும் வழங்குகிறது. அல்பேனியம், அம்கரியம், அரபி, போசுனியம், பர்மியம், தரி, ஆங்கிலம், பின்னியம், பிரெஞ்சு, அவுசா, இந்தி, யொருபா, சீனம், குரோட்டியம், குர்தி மொழி, லித்துவேனியம், இடச்சு மொழி, ஒரோமோ, பஞ்சாபியம், பஷ்டோ, பாரசீகம், போலிசு, போர்த்துகீச மொழி, உரோமானியம், உருசியம், செர்பியம், ஷோனா, சோமாலி, எசுப்பானியம், சுவாகிலி, தகலாகு, தமிழ், தாய், டிகீரினியா, செச்சென், துருக்கியம், துவி, அங்கேரியம், உருது, வியத்னாமியம் ஆகிய மொழிகளில் நூல்களையும் இசைக்குறுவட்டுக்களையும் வாங்கி இந்நூலகம் வழங்குகிறது.
இந்நூலகத்துக்கு நார்வே மொழியில் மொழிபெயர்ப்பதற்கான தனிப்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இங்கு வெளியிடப்படும் நூல்கள் நோர்வீடிய மொழியிலும், அரபி, உருது, குர்தி, சோமாலி, பாரசீகம் போன்ற ஏதாவது ஒரு மொழியிலும் வெளியிடப்படுகின்றன. பிரபலமான சிறுவர் நூல்கள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.
வெளியிணைப்புகள்
தொகு- நூலகத்தின் தளம் பரணிடப்பட்டது 2013-01-16 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ் சேகரிப்புகள்[தொடர்பிழந்த இணைப்பு]