பம்போர் (Pampore)[3]இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் அமைந்த புல்வாமா மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும்.[4] இது மாவட்டத் தலைமையிடமான புல்வாமாவுக்கு வடக்கே 17.4 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான சிறிநகருக்கு தென்கிழக்கே 16.7 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இது கடல்மட்டத்திலிருந்து 1573 மீட்டர் உயரத்தில் உள்ளது. இப்பகுதியில் குங்குமப்பூ விளைச்சல் அதிகம் உள்ளது. இதனருகே சிறிநகர தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[5]

பம்போர்
பம்பார், பன்பார்
நகரம்
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பம்போர் நகரத்தின் காட்சி
அடைபெயர்(கள்): குங்க்குமப் பூ நகரம்
பம்போர் is located in ஜம்மு காஷ்மீர்
பம்போர்
பம்போர்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் பம்போர் நகரத்தின் அமைவிடம்
பம்போர் is located in இந்தியா
பம்போர்
பம்போர்
பம்போர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 34°01′N 74°56′E / 34.02°N 74.93°E / 34.02; 74.93
நாடு இந்தியா
மாநிலம்மாவட்டம்
ஜம்மு காஷ்மீர்புல்வாமா மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பம்போர் நகராட்சி
ஏற்றம்
1,573 m (5,161 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்21,680
மொழிகள்
 • அலுவல் மொழிகாஷ்மீரி மொழி, உருது, இந்தி தோக்ரி மொழி, ஆங்கிலம்[1][2]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 17 வார்டுகளும், 3,389 வீடுகளும் கொண்ட பம்போரா நகரத்தின் மக்கள் தொகை 21,680 ஆகும். அதில் ஆண்கள் 11,00 மற்றும் பெண்கள் 10,673 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 970 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 16% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 70.7% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 0 மற்றும் 69 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 0.12%, இசுலாமியர் 99.56% கிறித்தவர்கள் 0.18% மற்றும் பிறர் 0.13% ஆகவுள்ளனர்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "The Jammu and Kashmir Official Languages Act, 2020" (PDF). The Gazette of India. 27 September 2020. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.
  2. "Parliament passes JK Official Languages Bill, 2020". Rising Kashmir. 23 September 2020 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200924141909/http://risingkashmir.com/news/parliament-passes-jk-official-languages-bill-2020. 
  3. Kashir Encyclopedia (in காஷ்மிரி). Vol. 1. Jammu and Kashmir Academy of Arts Culture and Languages. 1986. p. 86.
  4. Chib, Sukhdev Singh (1977). Jammu and Kashmir. Light & Life Publishers. p. 60. The entire process of saffron growing, harvesting, picking and drying is done in Pampore, which was known as Padampur in ancient times. India is the second largest producer of Saffron in the world after Spain
  5. Srinagar railway station
  6. Pampora Population, Religion, Caste, Working Data Pulwama, Jammu and Kashmir - Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்போர்&oldid=3596728" இலிருந்து மீள்விக்கப்பட்டது