நல்வரவு!

வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. பல வருடங்களாக தமிழ் விக்கிபீடியாவில் சில குறிப்புக்களை எழுத வேண்டும் என்ற விருப்பம் இருந்தபோதிலும் என்னால் இத்திட்டத்தை செயற்படுத்த முடியவில்லை. சில நாட்களுக்கு முன்பு எனது தோழி கலை என்னை தமிழ் விக்கிபீடியாவில் எழுதுமாறு ஊக்கப்படுத்தினார். அவரின் வேண்டுகோளை ஏற்று தமிழ் விக்கிபீடியாவில் பயனர் கணக்கை ஆரம்பித்துள்ளேன். எனது கல்வித்தகைமைகள் பொறியியல், கணினி ஆகிய துறைகளில் உள்ளன. மேலும் எனது தொழில் பட்டறிவுகள் காரணமாக எப்படியோ பல துறைகளில் கால் பதித்தும் உள்ளேன். தமிழ் மொழியில் எனக்கு மிகவும் ஈடுபாடு உள்ளது. சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் கவிதை, சிறுகதை, கட்டுரை போன்ற படைப்பிலக்கியங்களையும், அறிவியல் கட்டுரைகளையும் அகணி என்ற புனைபெயரில் எழுதி வருகின்றேன். அத்தோடு அறிவியல் கட்டுரைகளையும் எழுதியதோடு அவற்றை நூல் உருவிலும் கொண்டு வந்துள்ளேன். யாப்பிலக்கணத்தை முறைப்படி கற்று மரபுக் கவிதைகளையும் எழுதி வருகின்றேன். தமிழ் விக்கிபீடியாவில் தமிழ் இலக்கியம், தமிழ் மொழிக் கல்வி, பொறியியல், கணினி, தொழில்நுட்பம், அறிவியல், இயற்பியல், தமிழ் மொழியில் கலைச்சொற்களின் அறிமுகம், கணிதம், சுய முன்னேற்றக் குறிப்புக்கள் போன்ற துறைகளில் எனது குறிப்புக்களை எழுதலாம் என எண்ணுகின்றேன். தமிழ் மொழி நிலைத்திட இவ்வாறான முயற்சிகள் அவசியமானது என்ற கருத்தோடு தமிழ் விக்கிபீடியாவில் நானும் கால் பதிக்கின்றேன். என்னைத் தமிழ் விக்கிபீடியாவில் ஈடுபடுத்திய கலை அவர்களுக்கு மீண்டும் எனது நன்றிகள். எனது வேலைப்பழு, ஏற்கனவே ஈடுபட்டுள்ள எழுத்துப் பணிகளோடு தமிழ் விக்கிபீடியாவிலும் எழுதத் துணிவதால் நேரக்குறைவின் காரணமாகவும், அறிந்து கொள்ள வேண்டிய தமிழ் விக்கிபீடியா விடயங்கள் காரணமாகவும் எனது பதிவுகள் ஓரளவு தாமதமாகலாம், அனைத்து தமிழ் விக்கிபீடியா பயனர்களுக்கும், வாசகர்களுக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் கனடாவில் வசிக்கின்றேன். நாமும் வாழ்வோம், நம்மைப் போன்று எல்லோரும் நன்கே வாழட்டும். அன்புடன் அகணி சுரேஸ்

ஆர்வமுள்ள விக்கி இணைப்புக்கள் தொகு

எனது வலைப்பதிவு தொகு

எனது வலையொளிப் பதிவு 1 தொகு

எனது வலையொளிப் பதிவு 2 தொகு

எனது வலையொலிப் பதிவு 1 தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:அகணி_சுரேஸ்&oldid=3099775" இலிருந்து மீள்விக்கப்பட்டது