அகணி சுரேஸ்
வாருங்கள்!
வாருங்கள், அகணி சுரேஸ், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--Kanags \உரையாடுக 23:54, 23 மார்ச் 2015 (UTC)
வாருங்கள் சுரேஸ்! தமிழ் விக்கியில் உங்களைக் காண்பதில் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் நேரக் குறைபாட்டை அறிவேன். இருந்தாலும், இங்கே உங்கள் பங்களிப்பை முடிந்தவரையில் கொடுப்பீர்கள் என நம்புகின்றேன். நன்றி. --கலை (பேச்சு) 10:59, 24 மார்ச் 2015 (UTC)
- வாருங்கள் ! உங்கள் பங்களிப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.--இரவி (பேச்சு) 14:19, 26 மார்ச் 2015 (UTC)
பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி
வணக்கம், அகணி சுரேஸ்!
தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:
- ஒரு புதிய கட்டுரையைத் தொடங்கலாம்
- ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம்
- விக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.
--இரவி (பேச்சு) 14:25, 26 மார்ச் 2015 (UTC)
உங்கள் குறிப்புக்களுக்கு நன்றி. --அகணி சுரேஸ் (பேச்சு) 02:14, 27 மார்ச் 2015 (UTC)
கையெழுத்து இட
தொகுகட்டுரையின் உரையாடல் பக்கங்களிலோ, பயனரின் பேச்சுப் பக்கங்களிலோ கையெழுத்திட --~~~~ என்ற குறியீட்டினைப் பயன்படுத்துங்கள். இதன் மூலமாக தங்களுடையப் பேச்சுப் பக்கத்தின் இணைப்பும் சேர்க்கப்படும். தற்போது நீங்கள் இடுகின்ற கையெழுத்தில் பெயர் மட்டுமே வருகிறது. இணைப்பு காணப்படவில்லை. இதனைப் பற்றி அறிந்து கொள்ள விக்கிப்பீடியா:கையெழுத்து பக்கத்தினைப் பார்க்கவும். தாங்கள் இடையிராதப் பணிகளுக்கிடையே விக்கியில் பங்களிப்பது குறித்து பயனர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. உடன் நன்றிகளும். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 01:29, 27 மார்ச் 2015 (UTC)
நன்றி. நீங்கள் குறிப்பிட்டதைக் கவனத்தில் எடுக்கின்றேன். அன்புடன் --அகணி சுரேஸ் (பேச்சு) 02:05, 27 மார்ச் 2015 (UTC)
கட்டுரையும் பகுப்பும்
தொகுவணக்கம், எழுதப்படும் கட்டுரைகள் அனைத்தும் கட்டுரைகளுக்கேற்ப பகுப்பு ஒன்றினுள் சேர்க்கப்பட வேண்டும். நீங்கள் உருவாக்கிய பகுப்பு:வெண்சீர் வெண்டளையின் இலக்கணம் என்ற பகுப்பு ஒரு கட்டுரையைக் கொண்டுள்ளது. நீங்கள் இதனைத் தவறுதலாக பகுப்பினுள் சேர்த்திருக்கிறீர்கள் போல் தெரிகிறது. வெண்சீர் வெண்டளை என்ற கட்டுரை இல்லாததால் நீங்கள் எழுதியவற்றை வெண்சீர் வெண்டளை என்ற கட்டுரைத் தலைப்புக்கு மாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 13:13, 27 மார்ச் 2015 (UTC)
கலிப்பா
தொகுவணக்கம், கொச்சகக் கலிப்பாவின் பகுதிகள் பற்றி நீங்கள் எழுதிய தனித் தனிக் கட்டுரைகளை கொச்சகக் கலிப்பா கட்டுரையில் சேர்த்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். இவை தனித் தனிக் கட்டுரையாக இருப்பதிலும் பார்க்க தாய்க் கட்டுரையில் இருப்பதே சிறப்பானது. தாய்க்கட்டுரையும் முழுமை அடையும். நன்றி.--Kanags \உரையாடுக 06:59, 31 மார்ச் 2015 (UTC)
வணக்கம் கனக்ஸ், உங்கள் செய்தியைப் பார்த்தேன். நான் விரிவாக்கம் செய்ய முதலே கொச்சகக் கலிப்பாவின் வகைகளுக்குத் தலைப்பு இடப்பட்டு வெற்றிடமாக இருந்தன. அதனால் அதற்குள்ளேயே விரிவாக்கம் செய்து விட்டேன். உங்கள் கருத்து மிகவும் நன்று நான் இப்பொழுதுதான் அதைத்திருத்த நினைக்கும் பொழுது ஏற்கனவே திருத்தம் செய்யப்பட்டு விட்டது. தாமதத்திற்கு மன்னிக்கவும். நன்றி --அகணி சுரேஸ் (பேச்சு) 18:12, 1 ஏப்ரல் 2015 (UTC)
அகணி என்றால் என்ன?
தொகுஅகணிய உயிரி என்ற பெயரிலுள்ள "அகணிய" என்ற சொல்லுக்கும் உங்கள் பெயரில் உள்ள சொல்லுக்கும் தொடர்புண்டா? இல்லை அகணி என்பது ஊரா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:17, 1 ஏப்ரல் 2015 (UTC)
வணக்கம். தென்காசி சுப்பிரமணியன், அகணி என்பது நான் எழுத்துலகில் பயன்படுத்தும் புனைபெயர். தமிழ் அகராதியில் அகணி என்றால் மருத நிலம், செழிப்பு நிறைந்த நிலம், தென்னம் நார், நம்பிக்கைக்கு உரியவர். இவை எல்லாம் நேர் மறையான சொற்கள். தென்னம் நாரினை பல தேவைகளுக்குப் பயன்படுத்துவார்கள். மாலைகள் கோர்ப்பது உட்பட. எனது தாய், தந்தையர்களின் பெயர்களில் இருந்து எழுத்துக்களைச் சேர்த்து ஒரு நேர்மறையான பொருள் வரத்தக்கதாக எனது புனைபெயரை வைத்துக் கொண்டேன். ஆர்வமுடன் விசாரித்ததிற்கு நன்றி. பொதுவாக எல்லோரும் என்னிடம் கேட்கும் கேள்வி. அன்புடன் அகணி சுரேஸ் --அகணி சுரேஸ் (பேச்சு) 11:55, 2 ஏப்ரல் 2015 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.