ERICHY-Erichi:

Erichi-Erichy(எரிச்சி) is located in pudukkottai district. Pudukkottai to Aranthangi. Pudukkottai to Erichy 24 km, Aranthangi to Erichy 9 km. Erichi (Erichy), the ancient Erichalur which had been identified with Erichi Village in Pudukkottai - Aranthangi road. It was probably the home of the poet Madalan Madurai Kumaranar.

Erichy
எரிச்சி சிதம்பரவிடுதி பொய்யப்பட்டி
Village
A Road in Pudukkottai to aranthangi
A Road in Pudukkottai to aranthangi
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்Pudukkottai
ஏற்றம்
87.78 m (287.99 ft)
Languages
 • Officialதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
பின்கோடு
614 622
Telephone code04371
வாகனப் பதிவுTN 55
Sex ratio995 per 1000 males /
இணையதளம்
  1. www.sivaraman.blogspot.in
  2. www.sivaramanerichy.blogspot.com
  3. www.sivankoilerichy.blogspot.com
  4. www.vsbmbafriends.blogspot.com
  5. www.friendsnmc.blogspot.com

எரிச்சிக்கு தென் கிழக்கில் உள்ள வீரவனம், பொய்கைநல்லூர் என்று இலக்கியங்களின் சொல்லப்படுகின்ற அறந்தாங்கியில் அருள்பாலித்துவரும் பீரவனக்காளியாகிய வீரமாகாளி அம்மனிடம் பஞ்ச பாண்டவர்கள் சிறிது காலம் தங்கி வழிபாடு செய்ய எண்ணியபோது இல்லறத்தார் தங்க ஏற்ற இடமாக வீரவனம் இல்லை என்று தனது வலக்கையை நீட்டி இடா்பாடுகனை எரித்து எரிச்சியில் பாண்டவர்களைத் தங்கச செய்தாள். அன்னை வீரமாகாளி கை நீட்டி இடர்பாடுகனை எரித்த இடம் ஆதலால் இவ்வூர் எரிச்சி எனப் பெயர் பெற்றது. இப்பகுதி மகாபாரதத்துடன் தொடர்புடையது என்பதற்கு மயூரகிரி என்று அழைக்கப்படும் குன்றக்குடி தல வரலாறும் சான்று பகர்கின்றது.


சங்ககால இலக்கியங்களில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல ஊர்ப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களின் காலம் சர்ச்சைக்குறியதென்றாலும், இவை குறிப்பிடும் வரலாறு கி.பி முதல் மூன்று நூற்றாண்டுக்குரியது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும் இந்த இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளிலிருந்து இந்த மாவட்டத்தின் கோர்வையான் வரலாறைத் தொகுப்பது கடினம் எனினும் சங்க காலத்தில் சிறப்பு பெற்றிருந்த பகுதிகளில் ஒன்றாகப் புதுக்கோட்டை திகழ்ந்தது என்பது விளங்கும்.


"தென்பாண்டிக்குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு நன்றாய சீதமலாடு புனநாடு செந்தமிழ்ச்சேர் ஏதமிழ் பன்னிரு நாடென்"

என்ற பழம்பாடலில் கூறப்பட்டுள்ள பன்றிநாடே சங்ககாலத்தில் புதுக்கோட்டைப் பகுதிக்கு பெயராக இருந்தது. தமிழ்நாட்டின் பன்னிரு பகுதிகளில் இதுவும் ஒன்று. பாண்டி நாட்டிற்கு வடக்குப் பகுதியாகவும், புனல் நாடு எனப்பட்ட சோழநாட்டிற்கு தெற்குப் பகுதியாகவும் பன்றிநாடு அமைந்திருந்தது. "ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச் சோழர் காலக்கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது.

பன்றிநாடானது கோனாடு, கானாடு என இரு பெரும் பிரிவுகளாக விளங்கியத். இது உறையூர் கூற்றம், ஒல்லையூர் கூற்றம், உறத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம், கானக் கூற்றம் என ஐந்து கூற்றங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் கோனாடு நான்கு கூற்றங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்றும், தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் விளங்கின. தென்கோனாட்டில் ஒல்லையூர் கூற்றம் அமைந்திருந்தது. ஒல்லையூரை வெற்றிகொண்ட ஒல்லையூர் தந்த பூத பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் சிறப்பு புறநானூறு 71வது பாடலில் கூறப்படுகிறது.

மெலே கூறப்பட்ட சான்றுகளின் படி எரிச்சி வெள்ளாற்றிற்கு வடக்கே இருப்பதல் இந்த பகுதி வடகோனாடு என்று அழைக்கபட்டது. இதன் மூலம் தற்போதைய எரிச்சியே பண்டைய கோனாட்டு எறிச்சலூர் என்பது உறுதிப்படுத்தபடுகிறது.

SRI KASI VISWANATHAR VISHLATCHI AMBAL TEMPLE

தொகு

The temple build in 17th centuary. The temple called as then kasi viswanathar koil erichy. The temple festivels shivan rathiri, thai pusam.


கோயில் சிறப்பு:

தொகு

ஐந்து பெருநிலங்கள்ல் ஒன்றான முல்லை நிலப்பகுதி(கடும் பாடு சாரந்த இடமும்) முழுவதும் எரிமலைப் பாறை போன்ற செம்பறாங்கல் போன்று பூமியின் அமைப்பில் காணப்படுகின்றன. இப்பாறை கற்களைக் கொண்டே இத்திருக்கோயிலும், அருகில் உள்ள மெய்யர் அய்யனார் கோயிலும், சுப்பிரமணியர் கோயிலும், காமாட்சி அம்மன் கோயிலும் அறந்தாங்கி அகரம் காசி விஸ்வநாதர் கோயிலும் குளவாய்பட்டி அட்ட வீரட்டேஸ்வரர் கோயிலு் கருவறை மற்றம் உள்கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

எங்கும் காண முடியாத கண்டவர் வியக்கும் வண்ணம் அழகுற 32.5 அடி நீளமும் 21.5 அடி அகலமும் 40 அடி ஆழமும் கொண்ட சுணை ஒன்று செம்மறாங்கல் பாறைகளை வெட்டி அமைக்கப்பட்டு இருப்பது சிறப்புடையது ஆகும்.

இத்திருக்கோயில் மகாபாரதத்துடன் தொடர்புடையது; மிகவும் பழமையான திருக்கோயில் - பஞ்சபாண்டவர்கள் நிலவறை அமைத்து சிவபெருமானை வழிபாடு செய்து அருள்பெற்ற திருத்தலம். இங்குள்ள தீர்த்தம் சுனை வடிவில் அமைந்துள்ளது. இந்தச் சுனையில் நீராடி அன்னை விசாலாட்சி அம்மையை வழிபாடு செய்தால் திருமணம், மகப்பேறு உறுதியாகக் கைக்கூடும். ஆடி, தை அமாவாசைகளில் இச்சுனையில் நீராடி தாம்பூலத்துடன் தட்சனை வைத்து சுனையில் சமர்ப்பித்தால் கங்கையில் நீராடி காசியில் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்திருத்தலத்தில் சிவராத்திரி இரவு நான்கு கால பூஜைகளிலும் பங்கு பெறுவோர் நீண்ட ஆயுலும், நிறைந்த செல்வமும் பெறுவர். திருக்கார்த்திகை திருநாளில் இத்தலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் கல்வி சிறக்கும், தொழில்வளம் பெருகும் என்பது ஐதீகம்.

KAMATCHI AMMAN TEMPLE

தொகு

The temple located in Aranthangi road.

MEYYAR AYYANAR TEMPLE(NARPAVALA VADAVAYAL-ERICHY)

தொகு

The temple located in Narpavala vadavayal(Erichy).The temple entrance aarch located Erichy. The temple is one of famous in pudukkottai district. The temple festivel period id April & May(chithira powrnami) The festivel continuously 20 days.

KONNATTU ERICHALUR MADALAN MADURAI KUMARANAR Poet Purananuru

தொகு

புறநானூறு - Purananuru

கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் (54, 61, 167, 180, 197, 394). இவர் கோனாட்டு எறிச்சிலூரைச் சார்ந்த மாடலன் என்பவனின் மகனாகையால் இப்பெயர் பெற்றிருக்கலாம். இவரால் பாடப்பட்டவர்கள்: சேரமான் குட்டுவன் கோதை, சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி, ஏனாதி திருக்கிள்ளி, ஈர்ந்தூர் கிழான் தோயன் நன்மாறன், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், சோழிய ஏனாதி திருக்குட்டுவன். இவர் இனிமையான பாடல்களை இயற்றுவதிலும், வஞ்சப் புகழ்ச்சியாகச் செய்யுள் இயற்றுவதிலும் வல்லவர்.


பாடல் எண் 54. எளிதும் கடிதும்!

தொகு

பாடப்பட்டோன்: சேரமான் குட்டுவன் கோதை (54). கோதை என்பது இவன் இயற்பெயர். இவன் சேர நாட்டின் ஒரு பகுதியாகிய குட்ட நாட்டுக்குத் தலைவனாக இருந்தான். ஆகவே, இவன் குட்டுவன் கோதை என்று அழைக்கப்பட்டான்.

பாடலின் பின்னணி: குட்டுவன் கோதையின் கொடைச் சிறப்பையும், ஆட்சிச் சிறப்பையும், அவன் காட்சிக்கு எளியவனாக இருந்ததையும் இப்பாடலில் புலவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும். துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.


பாடியவா்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.

பாடப்பட்டோன்: சேரமான் குட்டுவன் கோதை.

திணை: வாகை. துறை: அரசவாகை.


எங்கோன் இருந்த கம்பலை முதூர்

உடையோர் போல இடையின்று குறுகிச்,

செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல்

எமஅன வாழ்க்கை இரவலர்ககு எளிதே

இரவலர்க்க எண்மை யல்லது புரவு எதிர்ந்து

வானம் நாண வரையாது. சென்றோர்க்கு

ஆனாது ஈயும் கவிகை வண்மைக்

கடுமான் கோதை துப்பெதிர்ந்து எழுந்த

நெடுமொழி மன்னர்நினைக்குங் காலைப்.

பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி

மாசுண் உடுக்கை. மடிவாய். இடையன்

சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப்

புலிதுஞ்சு வியன்புலத்து அற்றே

வலிதுஞ்சு தடக்கை அவனுடை நாடே.


அருஞ்சொற்பொருள்: 1. கம்பலை = ஆரவாரம். 2. இடை = காலம் (சமயம்). 3. நாளவை = அரசன் நாட்பொழுதில் வீற்றிருக்கும் அவை (அரசவை). 5. எண்மை = எளிமை; புரவு = கொடை, பாதுகாப்பு; எதிர்ந்து = ஏற்றுக்கொண்டு. 7. ஆனாது = குறையாது. 8. கடு = விரைவு; மான் = குதிரை; துப்பு = வலிமை; எதிர்ந்து = எதிர்த்து, மாறாகத் தாக்குதல். 10. பாசிலை = பச்சிலை; உவலை = தழை; கண்ணி = மாலை. 11. மடிவாய் = சீழ்க்கை ஒலி செய்வதற்கு மடக்கிய வாய். 12. ஆயம் = ஆடுகளின் கூட்டம். 13. துஞ்சுதல் = தங்குதல்.

கொண்டு கூட்டு: எங்கோன் இருந்த மூதூர்ப் புகுதல் இரவலர்க்கு எளிது; அவனுடைய நாடு, மன்னர் நினைக்குங் காலை இடையன் சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப் புலிதுஞ்சு வியன்புலத்து அற்று எனக் கூட்டுக.

உரை: எம்முடைய அரசன் இருந்த ஆரவாரமான பழைய ஊரில், அந்த ஊருக்கு உரியவர்கள் போல், காலம் பாராது நெருங்கி, அரசன் வீற்றிருக்கும் நாளவைக்குள் தலைநிமிர்ந்து செல்லுதல் எம் போன்ற இரவலர்க்கு எளிது. அது இரவலர்க்குத்தான் எளிதே அல்லாமல், அவனுடைய பகைவர்களுக்கு எளிதல்ல. கோதை தன் நாட்டின் பாதுகாவலை ஏற்றுக் கொண்டு, மழை பொழியும் வானம் நாணும் வகையில் தன்னிடம் வந்தோர்க்குக் குறையாது கொடுக்கும் கவிந்த கைகளையுடைய வள்ளல். வலிமை மிகுந்த பெரிய கைகளையுடைய அவன் வலிமையை எதிர்த்து, அவன் நாட்டுக்குள் வந்த வஞ்சின வேந்தரை எண்ணும் பொழுது, அவர்களின் நிலை, பசிய இலைகளால் தொடுக்கப்பட்ட மாலையையும், அழுக்குப் படிந்த உடையையும், சீழ்க்கை அடிக்கும் வாயையும் உடைய இடையன் ஒருவன் சிறிய ஆட்டுக்குட்டிகளுடன், நெருங்க முடியாத ஒருபுலி இருக்கும் பெரிய அகன்ற இடத்துக்குள் நுழைவதைப் போன்றது.

பாடல் எண் 61. மலைந்தோரும் பணிந்தோரும்!

தொகு

பாடியவர்: கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 54-இல் காண்க.

பாடப்பட்டோன்: சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி. இச்சோழ மன்னன், சோழன் நலங்கிள்ளியின் மகன் என்று கருதப்படுகிறான். இலவந்திகை என்றால் குளத்தருகே உள்ள சோலை என்று பொருள். குளத்தருகே இருந்த சோலை ஒன்றில் இருந்த பள்ளியில் (படுக்கை அறையில்) இறந்ததால், இச்சோழமன்னன் சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி என்று அழைக்கப்பட்டான். பாடலின் பின்னணி: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் சேட்சென்னியின் நாட்டின் வளங்களையும் அவன் போர் புரியும் ஆற்றலையும் இப்பாடலில் விரிவாகக் கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.

துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.


கொண்டைக் கூழைத் தண்தழைக் கடைசியர்

சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்

மலங்குமிளிர் செறுவின் தளம்புதடிந் திட்ட

பழன வாளைப் பரூஉக்கண் துணியல்

புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக

விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி

நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும்

வன்கை வினைஞர் புன்தலைச் சிறாஅர்

தெங்குபடு வியன்பழம் முனையின், தந்தையர்

குறைக்கண் நெடும்போர் ஏறி விசைத்தெழுந்து

செழுங்கோள் பெண்ணைப் பழந்தொட முயலும்

வைகல் யாணர் நன்னாட்டுப் பொருநன்

எஃகுவிளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி

சிலைத்தார் அகலம் மலைக்குநர் உளர்எனில்

தாமறி குவர்தமக்கு உறுதி; யாம்அவன்

எழு திணிதோள் வழுவின்றி மலைந்தோர்

வாழக் கண்டன்றும் இலமே; தாழாது

திருந்துஅடி பொருந்த வல்லோர்

வருந்தக் காண்டல் அதனினும் இலமே!


அருஞ்சொற்பொருள்: 1. கொண்டை = மயிர் முடிச்சு; கூழை = தலை மயிர்; தழை = பச்சிலை; கடைசியர் = உழத்தியர், மருத நிலப் பெண்கள். 2. நெய்தல் = வெள்ளாம்பல்; கட்கும் = களைந்து எறியும். 3. மலங்கு = ஒரு வகை மீன்; மிளிர்தல் = ஒளிசெய்தல்; செறு = வயல்; தளம்பு = சேற்றைக் குழப்பிக் கட்டிகளை உடைத்து செம்மைப் படுத்தும் கருவி; தடிதல் = அறுத்தல், வெட்டல். 4. பழனம் = வயல்; வாளை = வாளை மீன்; பரூஉ = பருமை; துணியல் = துண்டு (சதை). 5. கண்ணுறை = மேலே தூவுவது. 6. விசித்தல் = விம்முதல், வீங்குதல்; மாந்தல் = உண்ணுதல், வருந்துதல். 7. சூடு = நெற்கதிர்க் கட்டு. 8. வினைஞர் = மருத நில மக்கள் (உழவர்கள்). 9. தெங்கு = தென்னை. 10. விசை = விரைவு. 11. செழுமை = வளமை; கோள் = குலை; பெண்ணை = பனைமரம். 12. வைகல் = நாள்; யாணர் = புதிய வருவாய். 13. எஃகு = வேல்; தடக்கை = பெரிய கை; சென்னி = நலங்கிள்ளி சேட்சென்னி. 14. சிலை = ஒளி; அகலம் = மார்பு; மலைத்தல் = போரிடுதல். 15. உறுதி = உறப்போவது (நேரப்போவது). 16. எழு = கணையமரம்; உறழ் = ஒத்தல்; திணி = வலிமை; வழு = தவறு. 17. தாழாது = விரைந்து. 18. திருந்துதல் = ஒழுங்குகாகுதல்.

உரை: கொண்டையாக முடிந்த முடியும், முடியில் செருகிய தழையும் உடைய மருதநிலப் பெண்கள், சிறிய வெள்ளாம்பலுடன் ஆம்பலையும் களைவர். வயல்களில் மலங்கு மீன்கள் ஒளிருகின்றன. அந்த வயல்களில் தளம்பைப் பயன்படுத்தியதால், பருத்த வாளை மீன்கள் துண்டிக்கப் படுகின்றன. புதுநெல்லைக் குத்தி ஆக்கிய வெண்மையான சோற்றின் மேல் அந்த வாளைமீன் துண்டுகளைத் தூவி, விலாப் புடைக்க உண்ட மயக்கத்தால், நெடிய நெற்கதிர்களின் கட்டுகளை வைக்கும் இடம் தெரியாமல் உழவர்கள் தடுமாறுவர். வலிய கைகளையுடைய உழவர்களின் இளஞ்சிறுவர்கள் தென்னை மரங்கள் தரும் தேங்காய்களை வெறுத்துத், தம் தந்தையரின் குறுகிய இடங்களில் உள்ள நெடிய வைக்கோற் போரில் விரைந்து ஏறி பனம்பழத்தைப் பறிக்க முயல்வர். நாள்தோறும் புதிய வருவாயையுடைய நல்ல நாட்டிற்கு அரசனாகிய நலங்கிள்ளி சேட்சென்னி, வேல் ஒளிரும் பெரிய கையினையும் நன்கு செய்யப்பட்ட தேரையும் உடையவன். ஒளி நிறைந்த மலர் மாலைகளை அணிந்த மார்பையுடைய சேட்சென்னியுடன் போர்புரிபவர்கள் இருப்பார்களானால், அவர்களுக்கு நேரப் போவதை அவர்கள் மட்டுமே அறிவார்கள். நாங்கள் கணையமரம் போன்ற வலிய தோள்களையுடைய அவனோடு போரிட்டவர்கள் வாழக்கண்டதில்லை. விரைந்து சென்று அவனது நல்லடியை அடைய வல்லோர் வருந்தக் கண்டது அதனினும் இல்லை.

பாடல் எண் 167. நீயும் ஒன்று இனியை;அவரும் ஒன்று இனியர்!

தொகு

பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.

பாடப்பட்டோன்: ஏனாதி திருக்கிள்ளி. ஏனாதி என்பது முடிவேந்தர்களால் படைத்தலைவர்களுக்கு வழங்கப்பட்ட சிற்ப்புப் பெயர். இவன் சோழநாட்டுக் குறுநில மன்னர்களுள் ஒருவன். பல போர்களில் சோழ வேந்தர்களுக்குத் துணையாகப் போரிட்டவன்.

பாடலின் பின்னணி: ஏனாதியின் வீரத்தையும் வண்மையையும் கேள்விப்பட்டு, அவனைக் காணக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் சென்றவர். அவர் திருக்கிள்ளியின் உடலில் இருந்த வடுக்களைக் கண்டு வியந்து, இகழ்வதுபோல் புகழ்ந்து அவனை இப்பாடலில் சிறப்பிக்கிறார். திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும். துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.


நீயே, அமர்காணின் அமர்கடந்துஅவர்

படைவிலக்கி எதிர்நிற்றலின்

வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு

கேள்விக்கு இனியை கட்குஇன் னாயே;

அவரே, நிற்காணின் புறங்கொடுத்தலின்

ஊறுஅறியா மெய்யாக்கையொடு

கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னாரே!

அதனால், நீயும்ஒன்று இனியை;அவரும்ஒன்று இனியர்;

ஒவ்வா யாவுள மற்றே? வெல்போர்க்

கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி!

நின்னை வியக்குமிவ் உலகம் அஃது

என்னோ பெரும உரைத்திசின் எமக்கே.


அருஞ்சொற்பொருள்: 1. அமர் = போர்; கடந்து = வென்று. 3. வாய்த்தல் = கிடைத்தல், சேர்தல். கட்கு = கண்ணுக்கு. 6. ஊறு = காயம், தழும்பு. 9. ஒவ்வுதல் = பொருந்துதல் (ஒத்திருத்தல்); ஒவ்வா = பொருந்தாத (ஒப்பில்லாத). 10. கடு = விரைவு. 12. உரைத்திசின் = உரைப்பாயாக.

உரை: நீ, போரைக் கண்டால், அப்போரில் வென்று, அப்பகைவர்களின் படையை எதிர்த்து நிற்கிறாய். அதனால், வாளால் உண்டாகிய தழும்புகளுடைய உடலோடு உள்ள உன் வீரச் செயல்களைக் கேட்பதற்கு இனியவனாய் உள்ளாய். ஆனால், நீ கண்ணுக்கு இனியவனாயக (அழகானவனாக) இல்லை.

உன் பகைவர், உன்னைக் கண்டால் புறங்காட்டி ஓடுவதால் தழும்பில்லாத உடலோடு பார்ப்பதற்கு இனிமையானவர்களாக (அழகானவர்களாக) இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் செயல்கள் கேட்பதற்கு இனிமையானவையாக இல்லை.

அதனால், நீ ஒருவகையில் இனியவன்; அவர்களும் ஒரு வகையில் இனியவர்களாக உள்ளனர். உங்களுக்குள் வேறுபாடுகள் எவை? போரில் வெற்றியும், வீரக்கழல் அணிந்த திருவடிகளும், விரைவாகச் செல்லும் குதிரைகளும் உடைய உன்னைக் கண்டு இவ்வுலகம் வியக்கிறது. அதற்குக் காரணம் என்னவோ? தலைவா! அதை எனக்கு உரைப்பாயாக.

பாடல் எண் 180. நீயும் வம்மோ! முதுவாய் இரவல !

தொகு

பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.

பாடப்பட்டோன்: ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் (180). இவன் பெயர் ஈர்ந்தூர் கிழான் கோயமான் என்று சில உரையாசிரியர்கள் கருதுகின்றனர். ஈர்ந்தூர் என்பது இக்காலத்தில் கொங்கு நாட்டில் ஈஞ்ஞூர் என்று அழைக்கப்படுகிறது. இவன் சோழ வேந்தர்களுக்குத் துணையாகப் போர்புரிந்தவன்.

பாடலின் பின்னணி: இப்பாடல், ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனிடம் பரிசில் பெற்ற பாணன் ஒருவன் பசியால் வாடும் பாணன் ஒருவனை ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.

துறை: வல்லாண் முல்லை: பாணாற்றுப் படையும் ஆகும்.

வல்லாண் முல்லை: ஒரு வீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனது புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.

பாணாற்றுப் படை: பரிசு பெற்ற பாணன், பரிசு பெற வரும் பாணனுக்குச் செல்லும் வழியும் புரவலன் புகழும் கூறி ஆற்றுப்படுத்துதல்.


நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே;

இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே;

இறையுறு விழுமம் தாங்கி அமர்அகத்து

இரும்புசுவைக் கொண்ட விழுப்புண் நோய்தீர்ந்து

மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி

வடுவின்றி வடிந்த யாக்கையன் கொடையெதிர்ந்து

ஈர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன்

இன்மை தீர வேண்டின் எம்மொடு

நீயும் வம்மோ! முதுவாய் இரவல!

யாம்தன் இரக்கும் காலைத் தான்எம்

உண்ணா மருங்குல் காட்டித் தன்ஊர்க்

கருங்கைக் கொல்லனை இரக்கும்

திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே.


அருஞ்சொற்பொருள்: 1.நிரப்பு = வறுமை (இன்மை). 3. இறை = அரசன்; விழுமம் = துன்பம். 5. மயங்கி = கலந்து. 6. வடு = குற்றம்; வடிவு = அழகு. 11. மருங்குல் = வயிறு.

கொண்டு கூட்டு: பாண்பசிப் பகைஞன் ஈர்ந்தை யோன்; அவன் தன்னை யாம் இரக்கும் காலைத் தான் எம் மருங்குல் காட்டி நெடுவேல் வடித்திசின் எனக் கருங்கைக் கொல்லனை இரக்கும்; முதுவாய் இரவல, இன்மை தீர வேண்டின், எம்மொடு நீயும் வம்மோ எனக் கூட்டுக.

உரை: முதிய இரவலனே! ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் இரப்பவர்களின் வறுமையைத் தீர்க்கும் அளவிற்குக் கொடுக்கும் செல்வம் உடையவன் அல்லன்; ஆனாலும், இல்லையென்று மறுத்துக் கூறும் சிறுமை இல்லாதவன். அவன், தன் அரசனுக்கு வந்த துன்பங்களைத் தான் தாங்கிக்கொண்டு, போர்க்களத்தில் படைக்கருவிகளால் உண்டாகும் விழுப்புண்களை ஏற்றுக் கொண்டவன். மருந்துக்காக பல இடங்களில் வெட்டப்பட்ட அடிமரம்போல் உடலெல்லாம் வடுக்கள் நிறைந்திருந்தாலும் அவன் குற்றமற்ற அழகிய உடலுடையவன்; இரவலரை எதிர்பார்த்திருப்பவன்; ஈர்ந்தூர் என்னும் ஊரைச் சார்ந்தவன்; பாணர்களின் பசிக்குப் பகைவன். உன்னுடைய வறுமை தீர வேண்டுமானால், நீ என்னோடு வருவாயாக. நாம் இரக்கும் பொழுது, நம்முடைய பசியால் வாடும் வயிற்றைத் தன் ஊரில் உள்ள வலிய கைகளுடைய கொல்லனிடம் காட்டிச் சிறந்த இலைவடிவில் அமைந்த நெடிய வேலை வடிப்பாயாக என்று கூறுவான்.

சிறப்புக் குறிப்பு: கொல்லனிடம் வேல் வடிப்பாயாக என்று கூறுவது, பகைவர்களோடு போருக்குச் சென்று, அவர்களை வென்று, பொருள் கொண்டுவந்து இரப்போர்க்கு அளிப்பதற்காக என்ற பொருளில் கூறப்பட்டிருக்கிறது.

பாடல் எண் 197. நல்குரவு உள்ளுதும்

தொகு

பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.

பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் (58, 61, 167, 180, 197, 394). இச்சோழ மன்னன் குராப்பள்ளி என்னும் இடத்தில் இறந்ததால் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்று அழைக்கப்பட்டான். இவன் காலத்தில், சேர நாட்டில் குட்டுவன் கோதையும் பாண்டிய நாட்டில் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஆட்சி புரிந்தனர். இவனைப் பாடியவர்கள்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், மருத்துவன் உறையூர் தாமோதரனார்.

பாடலின் பின்னணி: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைக் காணச் சென்றார். அவன் இப்புலவர்க்குப் பரிசளிப்பதற்குக் கால தாமதமாக்கினான். அதனால் கோபமடைந்த கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், “அரசே, அரசர்களிடம் தேர்களும் படைகளும் மிகுதியாக இருப்பதாலோ, பல போர்களில் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதற்காகவோ நாங்கள் அவர்களை வியந்து பாராட்டுவதில்லை. சிறிய ஊரின் மன்னர்களாக இருந்தாலும் எங்கள் பெருமையை உணர்ந்தவர்களைத் தான் நாங்கள் பாராட்டுவோம். எத்துணைத் துன்பம் வந்தாலும் உண்மை உணர்வும் நல்லறிவும் இல்லாதவர்களின் செல்வத்தை விரும்பமாட்டோம். நல்லறிவு உடையவர்கள் வறுமையில் இருந்தாலும் அவர்களைப் பெரிதும் பாராட்டுவோம்” என்று இப்பாடலில் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.

துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.


வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு

கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்

கடல்கண் டன்ன ஒண்படைத் தானையடு

மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ

உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு

செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ

மண்கெழு தானை ஒண்பூண் வேந்தர்

வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;

எம்மால் வியக்கப் படூஉ மோரே

இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த

குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு

புன்புல வரகின் சொன்றியடு பெறூஉம்

சீறூர் மன்னர் ஆயினும் எம்வயின்

பாடறிந்து ஒழுகும் பண்பி னாரே;

மிகப்பேர் எவ்வம் உறினும் எனைத்தும்

உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்;

நல்லறி வுடையோர் நல்குரவு

உள்ளுதும்; பெரும யாம் உவந்துநனி பெரிதே.


அருஞ்சொற்பொருள்: 1. வளி = காற்று; வாவுதல் = தாவுதல்; இவுளி = குதிரை. 2. நுடங்குதல் = ஆடல், துவளல், முடங்குதல், தள்ளாடுதல், வளைதல்; எனா - இடைச்சொல். 5. உரும் = இடி; உட்கு = அச்சம். 6. செரு = போர். 10. படப்பை = தோட்டம்; மறி = ஆட்டுக்குட்டி. 11. அடகு = கீரை; முஞ்ஞை = முன்னை. 12. சொன்றி = சோறு. 14. பாடறிந்து ஒழுகும் பண்பு = பண்பாடு. 15. எவ்வம் = துன்பம். 17. நல்குரவு = வறுமை. 18. நனி = மிகவும்.

உரை: காற்றைப்போல் தாவிச்செல்லும் குதிரைகளும், கொடிகள் அசைந்தாடும் தேர்களும், கடல்போன்ற படையும், மலையையும் எதிர்த்துப் போர் புரியவல்ல களிறுகளும் உடையவர்கள் என்பதற்காகவோ, இடிபோல் ஒலிக்கும் அச்சம்தரும் முரசோடு போரில் வெற்றி பெற்றவர்கள் என்பதற்காகவோ, பெருநிலமாளும், ஒளிபொருந்திய அணிகலன்கள் அணிந்த அரசர்களின் வெண்கொற்றக்குடையுடன் விளங்கும் செல்வத்தை நாங்கள் மதிப்பது இல்லை. முள்வேலியுடைய தோட்டத்தில் ஆடு மேய்ந்தது போக மிஞ்சியுள்ள சிறிய இலையுள்ள, மணம் நிறைந்த முன்னைக் கீரையை புன்செய் நிலத்தில் விளைந்த வரகுச் சோற்றுடன் உண்ணும் மக்களுடைய சிறிய ஊர்க்கு அரசனாக இருந்தாலும் எம்மிடத்துப் பழகும் முறை அறிந்து நடக்கும் பண்பு உடையவர்களைத்தான் நாங்கள் மதிப்போம். மிகப்பெரிய துன்பமுற்றாலும், எங்களிடம் அன்பில்லாதவர்களின் செல்வத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பெரும! நல்ல அறிவுடையவர்களின் வறுமையை மிகவும் மகிழ்வோடு பெருமையாகக் கருதுவோம்.

சிறப்புக் குறிப்பு:

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை. (குறள் - 657) என்ற குறளில், பழியை மேற்கொண்டு செய்த செயல்களால் பெற்ற செல்வத்தைவிட, சான்றோர்களின் மிகுந்த வறுமையே சிறந்தது என்று திருவள்ளுவர் கூறுவது இப்பாடலில் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் கூறும் கருத்தோடு ஒத்திருப்பதைக் காண்க.

பாடல் எண் 394. என்றும் செல்லேன்!

தொகு

பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.

பாடப்பட்டோன்: சோழிய ஏனாதி திருக்குட்டுவன்.

திணை: பாடாண். துறை: கடைநிலை.


சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின்,

ஒலிபுனற் கழனி வெண்குடைக் கிழவோன்,

வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன்,

வள்ளிய னாதல் வையகம் புகழினும்!

உள்ளல் ஓம்புமின், உயர்மொழிப் புலவீர்!

யானும், இருள்நிலாக் கழிந்த பகல்செய் வைகறை,

ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றிப்,

பாடுஇமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை

வாடா வஞ்சி பாடினேன் ஆக,

அகமலி உவகையடு அணுகல் வேண்டிக்,

கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின்

வெஞ்சின வேழம் நல்கினன் ; அஞ்சி

யான்அது பெயர்த்தனென் ஆகத், தான்அது

சிறிதென உணர்ந்தமை நாணிப், பிறிதும்ஓர்

பெருங்களிறு நல்கி யோனே; அதற்கொண்டு,

இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு உறினும்,

‘துன்னரும் பரிசில் தரும்’ என,

என்றும் செல்லேன், அவன் குன்றுகெழு நாட்டே!

Karikala Chola

தொகு

Period: Not known; between 2nd century BC and 2nd century AD.

Karikala Chola was the most popular king among the early Chola kings. Although there are lot of historical proofs and ancient poems are available to proove the existence of this king, there are a lot of mythological stories associated with this kings. It is very difficult to differentiate the historical incidents and mythological incidents in Karikala's history.

It is believed that Karikala Chola ruled around 2nd century BC or 2nd century AD during Sangam period. He was the son of the king Ilanchet Chenni. His mother was Azhundurven's daughter. As per some stories, Karikalan lost his father in his young age. His enemies put him behind the bars. While escaping from the prison, his legs got caught in the fire in the prison. Hence he got the name 'Karikalan' which means 'burnt legs' in Tamil language.

The ancient Tamil literature 'Pattinaththu Palai' talks about Karikala Chola and his great victory in the battle of Venni. Venni is a small place near Tanjore in Tamil Nadu. In the battle of Venni, it is evident that Karikala Chola won Chera king, Pandya king and 11 other small princes together. The reason for this battle is unknown. In this battle, the Chera king got hurt on his back. The Chera king Peruncheralathan, being the legendary ancient Tamil king and being the one who followed the culture of ancient Tamil warrior, committed suicide due to this. The poet Venni Kuyaththiyar, a friend of Karikalan, witnessed this battle and sung about the same.

Karikala Chola won nine princes together in the battle of Vagai Paranthalai which was sung by Paranar. Due to these victories Oviyars and Aruvalars surrendered to him.There is a version which claims that he even won Himalayas in the north and Sri Lanka in the south.

Karikalan was a religious king. He gave importance to irrigation during his period. He built Kallanai dam near Trichy in South India, which is considered as one of the oldest water regulator structure which is still in use. He converted many forests into fields.

As per some stories, he married a Velir princess from a place called Nangur. His daughter Adimanti married the Chera princess Attanathi. As Attanathi died in Kaveri flood, Adimanti committed suicide.

As per the old Tamil literature Silappatikaram, this king invaded till Himalayas and won Magada, Vajra and Avanti kings.

Nalankilli who ruled from Puhar city and fought with Nedunkilli is believed to be the son of Karikala Chola. Karikala also had another son named Mavalathan.

There are some legends without proof such as the elephant choosing him as the king by putting garland, his invasion to Kanchipuram and the movement of Velirs to Tondaimandalam by him.

There are some scholars who believe that there were two Karikalans and not just one.

Karikalan was definitely a powerful king. Not only Vijayalaya Chola, but even Telugu Cholas and few princes from Kannda land used to claim that they belonged to Karikalan dynasty.

The references about this king are found in ancient Tamil books such as Silappadhikaram, Porunar Aattruppadai, Pattinapalai, Ettu Thokai, Periya Puranam and Kalingaththu Barani.

The king supported Tamil literature. His uncle Irumbidar Thalaiyar was a poet. During his period, Uruthiran Kannanar sang him in Pattina Palai; Mudaththamak Kanniyaar sang him in Porunar Aattru Padai; also, poets like Kaviripoompattinaththu Karikkannnaar, 'Konattu Erichalur Madalan Madurai Kumaranaar' and Maruththuvan Damodaranaar sang his praises.

Edit & Publish

தொகு

A.Sivaraman

S/O R.M.Arunachalam

Erichy-Chidambaravidthi PO

Aranthangi TK

Pudukkottai DT

614 622

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Erichy&oldid=3417704" இலிருந்து மீள்விக்கப்பட்டது