வாழ்க்கைக் குறிப்பு தொகு

இராசத்தான் மாநிலத்தின் தலைநகரமான செய்ப்பூரில் அபூர்வி பிறந்தார். இவருடைய குடும்பம் விளையாட்டைப் பின்னணியாக கொண்ட ஒரு குடும்பமாகும். தாய் பிந்து சண்டேலா ஓர் கூடைப்பந்து வீராங்கனையாவார்.[1] தந்தை குல்தீப் சிங் சண்டேலா தீவிரமான விளையாட்டு ஆர்வம் கொண்டிருந்தார்.

விளையாட்டு பத்திரிகையாளராக வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டிருந்த அபூர்வி, 2008-ஆம் ஆண்டு பீகிங் ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்த அபினவ் பிந்த்ரா  தங்கப் பதக்கம் வென்றதைப்  பார்த்து ஈர்க்கப்பட்டு துப்பாக்கி சுடுதல் மீது ஆர்வம் கொண்டார். குடும்பத்தினர் உதவியுடன் பயிற்சிகள் மேற்கொள்ளத் தொடங்கினார்.[2]

தொழில்முறை சாதனைகள் தொகு

  1. 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் சண்டேலா வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார். மேலும் 2012 ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற மூத்தோர் தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றார். 2012- 2019 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து ஆறு முறை தேசிய அளவிலான இத்தகைய போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்தார்.[3]
  2. 2015 ஆம் ஆண்டு தென் கொரியாவின் சாங்வோன் மற்றும் செருமனியின் மூனிச் நகரங்களில் நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கி சுடுவோர் கூட்டமைப்பின் துப்பாக்கி சுடும் போட்டிகளில் 10மீ காற்றழுத்த துப்பாக்கி சுடுதல் பிரிவில் முறையே மூன்று மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்தார்.
  3. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் அபூர்வி சண்டேலா வெண்கலப் பதக்கம் வென்றார்.
  4. 2019 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கி சுடுவோர் கூட்டமைப்பின் துப்பாக்கி சுடும் போட்டிகளில் இரண்டாம் இடமும் ரியோ ஒலிம்பிக்கில் போட்டியிட தகுதியும் பெற்றார்.[4] [5]
  5. டோக்கியோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட அபூர்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  6. ஆத்திரியாவில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற மேடோன் காப் என்ற தனியார் துப்பாக்கிசுடும் போட்டியில் அபூர்வி தங்கப் பதக்கம் பெற்றார்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. "अपूर्वी चंदेला: ओलंपिक में जीत के लिए तैयार" (in hi). BBC News हिंदी. https://www.bbc.com/hindi/sport-55962771. 
  2. "துப்பாக்கியே துணை: ஒலிம்பிக்சில் பிரகாசிக்க காத்திருக்கும் அபூர்வி சண்டேலா". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2021-02-20.
  3. "Indian Shooter Apurvi Chandela on Winning Gold at ISSF World Cup | The Quint - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
  4. "Rio Olympics 2016: Jitu Rai finishes 8th in 10m Air Pistol; Apurvi Chandela, Ayonika Paul out in qualifiers". First Post. 7 August 2016. பார்க்கப்பட்ட நாள் 8 August 2016.
  5. "Apurvi Chandela Biography, Records and Age". Olympic Channel. பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
  6. India, Press Trust of. "Shooting: Apurvi Chandela, Divyansh Pawar win gold medals in Meyton Cup". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Gayathrikamaraj&oldid=3109484" இலிருந்து மீள்விக்கப்பட்டது