பயனர்:M. BARAKATH NISHA/மணல்தொட்டி
பிம்லா காஷ்யப் சூடு | |
---|---|
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 2010–2016 | |
தொகுதி | இமாச்சலப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 26 பெப்ரவரி 1942 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதீய ஜனதா கட்சி |
துணைவர் | சிரவன் காசியப் சூடு |
வாழிடம்(s) | 10/10, பழைய பூடெய்ல் கட்டிடம், நடு கடை வீதி, சிம்லா, இமாச்சலப் பிரதேசம்- 171001 |
முன்னாள் கல்லூரி | பஞ்சாப் பல்கலைக்கழகம் |
தொழில் | சமூக செயற்பாட்டாளர், அரசியல்வாதி |
பிம்லா காசியப் சூடு (Bimla Kashyap Sood)(பிறப்பு: பிப்ரவரி 26, 1942) என்பவர் ஓர் இந்தியப் பெண் அரசியல்வாதி, சமூக சேவகர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் இந்திய நாடாளுமன்ற மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[1]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுகாசியப் சூடு, இமாச்சலப் பிரதேசத்தில் சோலன் மாவட்டத்தில் உள்ள செயில் கிராமத்தில் பிறந்தார். இவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில், இளங்கலை பட்டப்படிப்பு முடித்தார். இவர் ஜூன் 11, 1962 இல் சிரவன் காசியப் சூடுனை மணந்தார். இத்தம்பதியருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.[1]
தொழில்
தொகு1990களில், காசியப் சூடு அரசுசாரா அமைப்பான "தாமரை நலச் சங்கம்" மூலம் இமாச்சலச் பிரதேசத்தில் கல்வியறிவு பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1999ஆம் ஆண்டில், இவர் குடும்ப ஆலோசனை மற்றும் பெண்கள் நலனை நோக்கமாகக் கொண்ட "மனவி" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவினார். 1998 முதல் 2003 வரையிலான காலப்பகுதியில், இவர் "இமாச்சலப் பிரதேச மாநில கூட்டுறவு வங்கி", "இமாச்சலப் பிரதேச மாநில கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி கூட்டுறவு நிறுவனம்" ஆகியவற்றின் இயக்குநராகவும், சிம்லா மாநகராட்சியில் ஆலோசனை இயக்குநராகவும் பதவி வகித்தார். மேலும் "மகிளா விகாஸ் நிகாம்" இயக்குனராகவும் சிம்லாவில் பணியாற்றினார்.[1]
இவர் ஏப்ரல், 2010இல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், நீர்வளக் குழு மற்றும் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சார ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பணியாற்றினார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "WebPage of Smt. Bimla Kashyap Sood Member Of Parliament (RAJYA SABHA)". பார்க்கப்பட்ட நாள் 21 March 2014.