பயனர்:Officialprm/மணல்தொட்டி
பெ. பெவிஸ்டன் | |
---|---|
சேவரத்னா, சாதனைத் தமிழன் | |
பிறப்பு | புன்னக்காயல், தூத்துக்குடி மாவட்டம் |
இருப்பிடம் | மதுரை, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | சமூக பணி சமயப்பணி இலக்கியப்பணி |
சமயம் | கிறிஸ்தவம் |
விருதுகள் | சேவரத்னா விருது இலக்கிய செம்மல் பல்துறை கலைஞர் சாதனைத் தமிழன் விருது |
மதுரையில் சமயப்பணியாளராக பணி செய்து வரும் மத போதகர் பெ. பெவிஸ்டன் (B. Beviston) என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக சமயப்பணியோடு சமூகப்பணி, இலக்கியப்பணி உள்ளிட்ட பல துறைகளில் திறம்பட சாதித்து இலக்கிய செம்மல், சேவரத்னா, சாதனைத் தமிழன், பல்துறை கலைஞர் போன்ற சர்வதேச விருதுகளை பெற்று சாதித்து வருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇவர் தமிழ்நாடு மாநிலம் தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகில் உள்ள புன்னக்காயலை சேர்ந்த கடற்கரை கிராமத்தில் பெமிலிட்டன் - விண்ணரசி ஆகியோருக்கு மூத்த மகனாக பிறந்தார். ஆரம்ப காலங்களில் கல்வியில் மிகவும் பின்தங்கிய இவர், ஒன்பதாம் வகுப்பு பயிலும் போது பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். எனினும் இறை நம்பிக்கையினாலும் விடா முயர்ச்சியினாலும் படிப்பில் கவனம் செலுத்தியதன் விளைவாக மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதிக்க துவங்கினார். தனது பதினாறாம் வயதில் பிரகாசமான வாழ்வு என்ற முதல் நூலினை எழுதினார். பல அரசியல் தலைவர்களால் பாராட்டு பெற்ற இந்நூலினை வெள்ளாளன்விளை பேராயர் அசரியா நினைவு மேல்நிலைப் பள்ளி வெளியிட்டது.
சமூக பணியும் சமய பணியும்
தொகுபோதகர். பெ. பெவிஸ்டன், இந்தியாவின் முன்னணி செய்தித் தாள்களில் பல ஆண்டுகள் தொடர்ந்து கதை, கட்டுரைகளை ஆன்மீகம் சார்ந்து எழுதி வந்த இவர் சமூகவியல் (Sociology), இதழியல் (Journalism) மற்றும் மனித உரிமைகள் (Human Rights) ஆகிய மூன்று துறைகளில் தனித்தனியே பட்டப்படிப்புகளை பயின்று பட்டம் பெற்றார். இவர் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சம்மேளம் அமைப்பில் உறுப்பினராகவும், மனித உரிமைகள் கழகத்தின் இளைஞர் அணி கிளை செயலாளராகவும் சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் கடவுளுடைய குருத்துவ பணிக்கான அழைப்பைப் பெற்று 2009 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி முதல் தொடர்ந்து முழு நேரமாக இறைப்பணியாற்றி வருகிறார்.
தற்போது இவர் இறையியல் (Theology) முதுகலை பட்டப்படிப்புகளை முறையாக பயின்று, அசெம்பிளிஸ் ஆப் காட் அமைப்பில் இணைந்து சபை ஊழியம் செய்து வருகிறார். மேலும் இவர் நற்செய்தி அறிவித்தல், போதனை மற்றும் ஆலோசனை ஊழியங்களிலும் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு பணி செய்து வருகிறார். இவரது இணைய ஊடகமானது சமூகத்தில் மாபெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி, இயங்கி வருகிறது.
இலக்கிய வெளியீடுகள்
தொகுஇவர் சமூகம் சமூகம் சார்ந்த பல்வேறு ஆய்வு கட்டுரைகளையும், இளைஞர்களுக்கான ஊக்கமூட்டும் தொடர்களையும்[1], சர்வதேச தரச்சான்று புத்தக எண் பெற்ற பதிமூன்று ஆன்மீக புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
கட்டுரைகள்
தொகு- சமூக தீமைகள்
- பிரகாசமான வாழ்வு
- திருநங்கைகளின் வாழ்வியல்
- போதையில் மாறும் பாதைகள்
- உள்ளாற்றலை பேராற்றலாக்கு
- தமிழகத்தின் முதல் அச்சுக்கூடம்
விருதுகள்
தொகுஇவரது இலக்கியம் மற்றும் ஊடகச் சேவையினை அங்கிகரித்து அமெரிக்காவில் டெக்ஸஸ் மாநகரில் அமைந்துள்ள டேஸ்ப்ரிங் பல்கலைக் கழகம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் மலேசியாவிலுள்ள உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் சாதனைத் தமிழன்[2] என்ற விருதினை இவருக்கு வழங்கியுள்ளது. தமிழ் இலக்கிய உலகில் அரசு அங்கீகாரம் பெற்ற பிரபல அமைப்புகளால் தேசிய மற்றும் சர்வதேச அளவில் இலக்கியச் செம்மல், சேவரத்னா[3], பல்துறை கலைஞர், கிளான்டர்எக்ஸ் எழுத்தாளர்[4] விருது, ஊடகவியளாளர்[5] விருது, போன்ற உயரிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ↑ "தந்தையாய் இருக்கிற ஆண்டவர்". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2012-04-27.
- ↑ "சாதனை தமிழன் விருது, மலேசியா". TCN Press. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
- ↑ "சேவரத்னா விருது, சென்னை". TCN Press. பார்க்கப்பட்ட நாள் 2021-10-16.
- ↑ "எழுத்தாளர் விருது, கிளான்டர்எக்ஸ்". hindustan Metro. பார்க்கப்பட்ட நாள் 2022-01-28.
- ↑ "ஊடகவியளாளர் விருது, ஹரியானா". magic book of record. பார்க்கப்பட்ட நாள் 2021-11-02.