புன்னக்காயல் ஊராட்சி

இது தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது


புன்னக்காயல் ஊராட்சி (Punnakayal Gram Panchayat), தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒனறியத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 7021 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 3378 பேரும் ஆண்கள் 3643 பேரும் உள்ளடங்குவர்.

புன்னக்காயல்
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். கி. செந்தில் ராஜ், இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி தூத்துக்குடி
மக்களவை உறுப்பினர்

கனிமொழி

சட்டமன்றத் தொகுதி திருச்செந்தூர்
சட்டமன்ற உறுப்பினர்

அனிதா ராதாகிருஷ்ணன் (திமுக)

மக்கள் தொகை 7,021
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


உலக சாதனை பட்டியலில் பெயர்பெற்ற புன்னக்காயல்

புன்னக்காயல் ( போர்த்துக்கீசியர்களால் புன்னக்காலே என அழைக்கப்படுகிறது.), இது தமிழ்நாட் டில் உள்ள ஒரு துறைமுகப்பட்டிணமாகும்.

கி.பி 1551-ல் இரண்டு மருத்துவமனைகள், ஒரு குருமடம் மற்றும் அடுத்த ஆண்டில் மண் கோட்டையுடன் நிறுவப்பட்ட புன்னக்காயல், தென்னிந்தியக் கடற்கரையில் போர்த்துக்கீசியர்களின் வருகைக்கு பிறகு 50 ஆண்டுகளாக போர்த்துக்கீசியர்களின் முக்கிய ஊராக திகழ்ந்தது.

1586 ஆம் ஆண்டில் இங்கு முதல் தமிழ் அச்சகம் அமைக்கப்பட்டது. திருப்பணியாளர் ஜோம் டி. ஃபாரியா என்பவரால் தமிழ் அச்சுக்கள் உருவாக்கப்பட்டது. இவ்வூரில் பணியாற்றிய திருப்பணியாளர் ஹென்ரிக் ஹென்றிக்கஸ் என்பவர் தாமே தமிழ் மொழியில் சில புத்தகங்களை எழுதியுள்ளார். அவையாவன: தம்பிரான் வணக்கம், கிறிஸ்தியானி வாழ்வாக்கம், கன்பெசனாரியோ ( தமிழில்: கொமபேசியூனாயரு) மற்றும் ஃளோஸ்சாங்தோரும் என்ற புத்தகத்தை தமிழ் படுத்தியுள்ளார்.

1553ல் இந்தியாவின் கடற்கரையில் அமைந்திருந்த போர்த்துக்கீசிய உடமைகளுக்கு எதிரான துருக்கிய ஓட்டோமான் தாக்குதலின் முக்கிய தளமாக புன்னக்காயல் இருந்தது. போர்த்துக்கீசியர்கள் வாணிபத்தை நிறுவ முற்பட்ட தூத்துக்குடியைச் சுற்றியுள்ள முத்துக்குளித்துறை கடலோரப் படைகளை தாக்கியது. அவர்களுக்கு மலபார் மரக்கார் முஸ்லீம்கள் போரில் உதவி செய்தனர். மதுரை வித்துல நாயக்கருடன் மறைமுக உடன்படிக்கையை ஏற்படுத்தினர்.

போர்த்துக்கீசியர்களை புன்னக்காயலில் கைதுசெய்தனர். மேலும் அங்குள்ள தேவாலயர்களைத் தீக்கறையாக்கினர். 1600-ல் திருப்பணியாளர் ஹென்ரிக் ஹென்றிக்கஸ் புன்னக்காயலில் மரணடமடைந்தார்.

1586 இல்  அண்டிரிக் அடிகளாரால் தமிழக எல்லைக்குள்  முதன் முதலில் புன்னைக்காயலில் அச்சுக்கூடம் நிறுவப்பட்டது.

இந்த அச்சுக்கூடத்தில் "FLOS SANCTORUM"  (அடியார் வரலாறு) என்ற 670 பக்கங்கள் கொண்ட நூல் அச்சிடப்பட்டது. தமிழ் மொழியில் நான்கு நூல்களை அச்சிட்ட அண்டிரிக் அடிகளாரை 'அச்சுக்கலையின் தந்தை' என்று அழைக்கின்றனர்.

1714 இல் சீகன்பால்கு ஐயரால் தரங்கப்பாடியில் தமிழ் மொழியில் விவிலியம் அச்சிடப்பட்டது. அங்கு அவர் காகிதப் பட்டறையையும் நிறுவினார். தமிழகத்தில் முதல் காகிதப் பட்டறை நிறுவப்பட்ட இடம் தரங்கம்பாடியே. மாறாக, தமிழ் முதன் முதலில் அச்சேறியது தரங்கம்பாடி எனத் தவறான தகவல் பாடநூல்களில் பதிவாகி உள்ளது.

தமிழ் மொழி தமிழக எல்லைக்கு அப்பால் முதலில் 1578 இல் கேரளத்திலும், 1586 இல் தமிழக எல்லைக்குள் புன்னைக்காயலிலும் முதன்முதலில் அச்சேறியது.

உலகிலேயே புன்னைக்காயலில் தான் தமிழ் மொழி அச்சுப் பணிக்காக உருவாக்கப்பட்ட முதல் அச்சுக்கூடம் இருந்தது என்பதை பல்வேறு உறுதிசெய்து 2021ம் ஆண்டு நவம்பர் 27 அன்று யுனிவர்செல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற உலகத்தரசான்று பெற்ற நிறுவனம் இதனை வரலாற்று உலகசாதனையாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கியுள்ளது.

அடிப்படை வசதிகள் தொகு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 418
சிறு மின்விசைக் குழாய்கள்
கைக்குழாய்கள்
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்
உள்ளாட்சிக் கட்டடங்கள் 19
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள்
ஊருணிகள் அல்லது குளங்கள் 1
விளையாட்டு மையங்கள் 1
சந்தைகள்
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 15
ஊராட்சிச் சாலைகள்
பேருந்து நிலையங்கள்
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 1

சிற்றூர்கள் தொகு

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:

  1. புதுகாலனி
  2. புன்னக்காயல்

சான்றுகள் தொகு

{{Tinnevelly Robert Caldwell p.72 மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு ↑ இந்தியப் பெருங்கடலில் இந்திய கடல்-வணிக, சமயம் மற்றும் பாலிடின் பியுஸ் மெல்லன்கதீல் ப .117}}


  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/collectors. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  4. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. http://www.tnrd.gov.in/databases/tn_village_details.pdf. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  5. "ஆழ்வார்திருநகரி வட்டார வரைபடம்". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=30&blk_name=Agastiswaram&dcodenew=28&drdblknew=1. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  6. 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்". தமிழ் இணையக் கல்விக்கழகம். http://www.tamilvu.org/coresite/download/Village_Panchayat.pdf. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  7. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. http://www.tnrd.gov.in/databases/Habitation.pdf. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.