Pathmakanthi Mankarraj
தரவு
தரவு என்றால் என்ன என்பதற்கு பல்வேறுபட்ட வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன. தரவு என்பது இலக்கங்கள், சொற்கள், அளவீடுகள், அவதானிப்புக்கள் அல்லது விடயங்களின் விளக்கங்கள் போன்ற உண்மைகளின் தொகுப்பு என வரைவிலக்கணம் செய்ய முடியும். பகுப்பாய்வு, கலந்துரையாடல் அல்லது கணிப்பீடுகளுக்கான அடிப்படையாகப் பயன்படுத்தப்படும் அளவீடுகள் மற்றும் புள்ளிவிபரங்கள் போன்ற உண்மைத் தகவல்கள் தரவுகள் எனப்படும். ஒக்ஸ்போட் அகராதியின் பிரகாரம் "தீர்மானங்களை மேற்கொள்ளல் அல்லது விடயங்களை கண்டறிவதற்காகப் பயன்படுத்தப்படும் உண்மைகள் அல்லது தகவல்கள் தரவு என வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது". குறித்த ஒரு விடயம் தொடர்பான விஞ்ஞான பூர்வமான, எண்ணிக்கை அல்லது பண்பு சார்ந்த உண்மைகள் தரவு எனப்படும். அதாவது குறித்த ஒரு விடயம் தொடர்பாக விஞ்ஞான ரீதியான முறைகளின் பயன்பாட்டின் ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் எண்சார் (இலக்கம்) அல்லது பண்புசார் முடிவுகளே தரவு எனப்படும். வேறு வார்த்தையில் குறிப்பிடுவதாயின், குறித்தவொரு விடயம், அவதானிப்பு அலகுகள், சம்பவங்கள் தொடர்பாக சேகரிக்கப்படும் அனைத்து அம்சங்களும் தரவு எனப்படும். தரவு ஒன்றுக்கான உதாரணமாக தரம் 12 இல் கல்வி பயிலும் மாணவர்கள் புவியியல் பாடத்தில் பெற்றுக் கொண்ட புள்ளிகள், குறித்த நாளொன்றின் போது கொழும்பு நகரத்திற்குள் இடம்பெற்ற வீதி விபத்துகளின் எண்ணிக்கை, நாடுகளின் அடிப்படையில் கோவிட் 19 ஆல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை போன்றவற்றை குறிப்பிட முடியும். தரவின் விசேட இயல்புகளாக பின்வருவன காணப்படுகின்றன.
1.பண்பு சார்பாகவும் கணியம் சார்பாகவும் அமையலாம்.
2.பகுப்பாய்விற்கு உட்படுத்த முடியும்
3.புள்ளிவிபரவியல் நுட்பங்களைப் பிரயோகிக்கலாம்
4.பகுப்பாய்வு செய்யாமல் முடிவுகளைப் பெற முடியாது
5.இலகுவாக சேமிக்கவும், தேவையின் போது மீள பயன்படுத்தவும் முடியும்
6.இடம்சார் தரவுகளை ஒழுங்கு முறையில் காட்டலாம்
7.இடரீதியான மற்றும் காலரீதியான பரம்பல் பங்குகளை புவியியல் தரவுகளில் காட்டலாம்
8.கருதுகோள் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்
9.தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்
10.புதிய விடயம் ஒன்றை அறிந்துக்கொள்ளவும், ஏற்கனவே உள்ள விடயம் ஒன்றினை தெளிவுப்படுத்திக் கொள்ளவும் முடியும்
- ↑ கிரிசாந்தன், பு (22 April 2023). "தரவு:ஓர் அறிமுகம்". புவியியல் சஞ்சிகை 1: Pp53,54.
- ↑ Thakur, Dinesh (22 April 2023). [https:ecomputernotes.com/fundamental/information-technology/what-do-you-mean-by-data-and information "What is the Different between Data and Information?"].
{{cite web}}
: Check|url=
value (help)