பயனர்:Ravidreams/sandbox/jawahar-existing

<edited_tamil_wikitext> ஜவகர்லால் நேரு (நவம்பர் 14, 1889மே 27, 1964), இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார். இவர் குழந்தைகள் மீது மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றபோது, அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, மே 27 இல், அவர் காலமாகும் வரை இப்பதவியில் இருந்தார்.

இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு, காங்கிரஸ் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் குடியரசு இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார். அணிசேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் உலக அரசியலில் மிக முக்கிய நபரானார்.

வாழ்க்கை வரலாறு

தொகு

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் செல்வந்தரும் வழக்கறிஞருமான மோதிலால் நேருவுக்கும் சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக நேரு பிறந்தார். உருதுவில் ஜவஹர் இ லால் என்றால் "சிகப்பு நகை" என்று பொருள். இச்சொல்லிலிருந்து "ஜவகர்லால்" என்ற பெயர் உருவானது.

'காஷ்மீரி பண்டிதர்' கவுல் பிராமணர் குலத்தில் பிறந்தவர் நேரு குடும்பத்தார். (காஷ்மீரக் கால்வாயைக் குறிக்கும் சொல் நெஹர் மருவி நேரு ஆயிற்று. ராஜகவுலின் பின் வந்தோருக்கு நேரு பட்டம் ஆகியது). நேரு குடும்பம் பிரதான வீதியையும், சந்தடி நிறைந்த கடைத் தெருவையும் ஒட்டியிருந்த பழைய பகுதியான சௌக்கியில் முதலில் வசித்து வந்தது. மோதிலால் நேரு, பல வருடங்களுக்கு முன்பாகவே அலகாபாத்திற்கு வந்து வழக்குரைஞர் தொழில் புரிந்தார். ராஜாக்கள், ஜமீன்தார்கள் மற்றும் பணக்காரர்களின் வழக்குகளை ஏற்று நடத்தியதால் பேரும், புகழுடன் நிதியும் அவரிடம் குவிந்தது. எனவே மோதிலால் தனது இருப்பிடத்தைப் பணக்காரர்கள் வசிக்கும் பகுதிக்கு மாற்றிக்கொண்டார்.

 
ஆனந்தபவன்

இந்திய தேசிய காங்கிரசால் நடத்தப்பட்ட உணர்ச்சிமயமான இந்திய தேசிய இயக்கத்தின் செயல் உறுப்பினராக இருந்தார். நேருவும் அவரின் இரு சகோதரிகளுமான, விஜயலட்சுமி பண்டிட்டும், கிருஷ்ணாவும் ஆனந்தபவன் என்ற பெரிய மாளிகையில் வளர்ந்து வந்தனர். அக்காலத்தில் இந்திய உயர் குடிமக்களால் அவசியமாகக் கருதப்பட்ட ஆங்கில நாகரிகத்துடன் வளர்க்கப்பட்டனர்.

சீனப் போரில் தோற்றவராகவும், காஷ்மீர் சிக்கலைத் தவறாகக் கையாண்டவராகவும், இன்றைக்கு இந்தியாவின் பெரும்பாலான அவலங்களுக்குக் காரணமானவராகவும் காட்டப்படும் அவர் உண்மையில் எப்படிப்பட்டவர்? நேருவைப் பற்றிய பல்வேறு பரப்புரைகள் எந்த அளவுக்கு உண்மையானவை? [1]

கல்வி

தொகு

ஜவகர்லால் நேருவுக்கு இந்தி மொழி, சமஸ்கிருதம் மற்றும் இந்தியக் கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. மோதிலால் நேரு, இந்தியக் குடிமைப் பணிக்குத் தன் மகன் தகுதி பெற வேண்டும் என்று விரும்பி, அதற்காக அவரை இங்கிலாந்தில் உள்ள ஹார்ரோவிற்கு அனுப்பினார். ஜவகர்லால் நேரு, ஹார்ரோவில் உள்ள பள்ளி வாழ்க்கையை முற்றிலும் விரும்பவில்லை. அவர், பள்ளிப் பாடத்திட்டம் கடுமையாகவும், தங்குமிடத்தின் நிலை வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருப்பதையும் உணர்ந்தார். இருந்தாலும் பள்ளிப் படிப்பை முடித்ததும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி, டிரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார்.

நேரு, அவருடைய தேர்வில் இரண்டாவது இடம் பெற்று 1910 இல் பட்டம் பெற்றார். சுதந்திர வெளிப்பாட்டிற்குப் பெயர்பெற்ற அப்பல்கலைக்கழகம், வரிசையான பல பாடத்திட்டம் அல்லாத கலைகளில் பங்கு பெற ஊக்குவித்தது. மேலும் அவருடைய பொது உருவ அமைப்பாலும் முக்கிய தாக்கத்தை உண்டாக்கியதால் அனைவராலும் கவனிக்கப்பட்டார். 1910 அக்டோபர் இன்னர் டெம்பில் இல் சட்டம் பயிலப் பதிவு செய்து கொண்டார். ஹாரோ மற்றும் கேம்பிரிட்ஜில் அவர் விரும்பியோ, கவரப்பட்டோ சட்டம் பயிலவில்லை. மாறாகத் தந்தை வேண்டுகோளுக்காகப் படித்தார். நேரு இறுதித்தேர்வில் 1912 இல் வெற்றிபெற்று, இன்னர் டெம்பில் இல் ஆண்டு இறுதியில் சட்டத்துறைக்கு அழைக்கப்பட்டார். சட்டப் பணி செய்ய விரைவில் இந்தியா திரும்பினார்.

திருமணம்

தொகு

கமலா கவுல் என்ற 16 அகவை நிரம்பிய காஷ்மீரி பிராமணப் பெண்ணை, 1916 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதியில் மணந்தார். அவர்களுக்குத் திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திரா பிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தாள். பின்னாளில் அவர் ஃபெரோஸ் காந்தியை மணம் புரிந்ததால் இந்திரா காந்தி என்றழைக்கப்பட்டார். கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாகச் செயல்பட்டார். ஆனால் 1936 இல் இறந்தார். அதன்பின் நேரு கடைசி வரை தனியாகவே வாழ்ந்தார்.[2]. அவரின் கடைசிக் காலத்தில் தன் மகளோடும் உடன்பிறந்த விஜயலட்சுமி பண்டிட்டுடனும் வாழ்ந்தார். </edited_tamil_wikitext>

  1. "மே 27: சிறியன சிந்தியாத நேருவின் நினைவு தினம் சிறப்பு பகிர்வு...". Vikatan. 16 october 2016. http://www.vikatan.com/news/coverstory/28315.html. பார்த்த நாள்: 15 February 2017. 
  2. "Nehru-Edwina were in love: Edwina's daughter". இந்தியன் எக்சுபிரசு. 15 July 2007 இம் மூலத்தில் இருந்து 21 ஜனவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120121092839/http://www.expressindia.com/news/fullstory.php?newsid=89537. பார்த்த நாள்: 21 May 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ravidreams/sandbox/jawahar-existing&oldid=4167469" இலிருந்து மீள்விக்கப்பட்டது