பயனர்:Ruzzelprasanna/மணல்தொட்டி

சுமித்ரா நாயக்

Ruzzelprasanna/மணல்தொட்டி
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியா
குடியுரிமைஇந்தியர்
பிறப்பு8 மார்ச் 2000
ஜஜ்பூர்
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுரக்பி
பதக்கத் தகவல்கள்
நாடு  இந்தியா
தங்கப் பதக்கம் – முதலிடம் {{{2}}} மகளிர்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் {{{2}}} கலப்பு

சுமித்ரா நாயக் (Sumitra Nayak) (பிறப்பு 8 மார்ச் 2000) ஒடிசாவின் ஜஜ்பூரைச் சேர்ந்த, ரக்பி கால்பந்து வீராங்கனை ஆவார். [1] இவர் இந்தியாவுக்காக பதக்கங்களை வென்றுள்ளார். மேலும், 2019 ஆசிய மகளிர் போட்டிகளில், இந்தியா வெண்கலப் பதக்கம் பெற முக்கிய பங்காற்றினார்.[2]

வாழ்க்கைப் பின்னணி

தொகு

இவர், 2000 மார்ச் 8 அன்று ஒடிசாவின் ஜஜ்பூர் மாவட்டத்தின் துபுரி கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை ஒரு குடிகாரராக இருந்ததால் குடும்பம் வறுமையில் இருந்தது. இவரது தாயார், தனது கணவரால் துன்புறுத்தப்பட்டார். பின்னர், இவர் குழந்தையாக இருந்தபோது புவனேசுவருக்கு குடிபெயர்ந்தார். இவரது தந்தை ஒரு முறை இவரது குடும்பத்தை வீட்டில் அடைத்து வைத்து இவர்களை உயிருடன் எரிக்க முயன்றார். ஆனால் இவர்கள் தப்பிப்பிழைத்தனர். தனது தாயார் இவரது குழந்தைகளை வளர்ப்பதற்காக மற்றவர்களின் வீடுகளில் ஒரு பணிப்பெண்ணாக வேலை செய்ய வேண்டியிருந்தது.

புவனேசுவரில், இவர் பழங்குடி குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் விளையாட்டுப் பயிற்சியை வழங்கும் கலிங்க சமூக அறிவியல் நிறுவனத்தில் (கிஸ்) சேர்ந்தார். [3] அவர் தற்போது நிறுவனத்தில் இளங்கலை மாணவி ஆவார்.

ரக்பியுடனான இவரது முயற்சி 2008ஆம் ஆண்டில் கலிங்க சமூக அறிவியல் நிறுவனத்த்தின் மைதானத்தில் தொடங்கியது. ஒரு குழு வீரர்கள் ஓவல் வடிவ பந்துடன் விளையாடுவதைக் கண்டு மகிழ்ந்தார். பந்து ஒரு டைனோசரின் முட்டை போல் இருப்பதாக சிறுவயது நாயக் நினைத்திருந்தார். இவர் விரைவில் விளையாட்டை விளையாடத் தொடங்கினார். மேலும் அதைச் சிறப்பாகச் செய்யத் தொடங்கினார். குடும்பத்தை ஆதரிப்பதற்காக ஒரு அழகுக் கலை கடையை நடத்தி வரும் இவரது தாயார், ஆரம்பத்தில் தனது மகளை ரக்பி விளையாட அனுமதிக்க தயங்கினார். ஏனெனில் வீரர்கள் ஒருவருக்கொருவர் விழுந்ததைக் கண்டார். இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள வீரர்கள் பயிற்சியளிக்கப்படுகிறார்கள் என்று இவர் தனது தாயை சமாதானப்படுத்தினார்.

நாயக் இப்போது கலிங்க சமூக அறிவியல் நிறுவனத்திலும், தனது கிராமத்தில் உள்ள பெண்களுக்கு ரக்பி கற்றுக்கொடுக்கிறார். [4]

வெற்றிகள்

தொகு

நாயக் பயிற்சியாளர் உருத்ரகேசு ஜீனாவின் கீழ் கலிங்க சமூக அறிவியல் நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். 2012ஆம் ஆண்டில் மாநில அளவில் அறிமுகமானதைத் தொடர்ந்து, ஒடிசா பெண்கள் 2014 இல் 13 வயதுக்குட்பட்ட பெண்கள் ரக்பி உலகக் கோப்பையில் பங்கேற்றார். தேசிய பள்ளி விளையாட்டு மற்றும் தேசியப் போட்டிகள் தொடர்ந்து வந்தன. துபாயில் நடைபெற்ற 2016 ஆசிய பெண்கள் ரக்பிப் போட்டிகளில் (18வய்துக்குட்பட்டோர்) இந்தியாவின் வெண்கலப் பதக்கம் வென்றதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். 2018ஆம் ஆண்டில், இவர் இந்தியாவின் 18 வயதுக்குட்பட்ட ரக்பி அணியின் தலைவியாக நியமிக்கப்பட்டார். [5]

இவரது மிகப்பெரிய பங்கு 2019 சூன் மாதம் 15 அன்று இந்தியாவின் முதல் சர்வதேச வெற்றியில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தின் கடைசி நேரத்தில் இவர் ஒரு பெனால்டியை உதைத்தார். இது ஆசிய ரக்பி மகளிர் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை வென்றெடுக்க உதவியது, தவிர 15 களின் வடிவத்தில் முதல் வெற்றியைப் பெற்றது. [6]

ஆகத்து 2019 இல் சகார்த்தாவில் நடந்த ஆசியா ரக்பி செவன்ஸ் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மூத்தோர் அணியின் ஒரு பகுதியாக இவர் இருந்தார். அதே மாதத்தில் லாவோஸில் நடந்த 20 வயதுகுட்பட்டோருக்கான ஆசிய ரக்பி பெண்கள் தொடரில் இவர் இந்திய அணியை வழிநடத்தினார்.

ஆசிய ரக்பி பெண்கள் தொடரில் இந்திய அணிக்காக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாய்க் இவருக்கு வாழ்த்து தெரிவித்தார். [7]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ruzzelprasanna/மணல்தொட்டி&oldid=3664146" இலிருந்து மீள்விக்கப்பட்டது