பயனர்:Sridhar G/மணல்தொட்டி
நான்காம் தாமஸ் குரூஸ் மபோதர் (Thomas Cruise Mapother IV பிறப்பு: சூலை 3,1962 ) ஓர் அமெரிக்க நடிகரும் தயாரிப்பாளரரும் ஆவார். ஹாலிவுட்டின் சிறந்த ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படும் இவர், நான்கு அகாதமி விருதுகளுக்கான பரிந்துரைகளைத் தவிர, கவுரவ பாம் டி 'ஓர் மற்றும் மூன்று கோல்டன் குளோப் விருதுகள் உட்பட பல்வேறு பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.[1][2][3] இவரது திரைப்படங்கள் வட அமெரிக்காவில் 5 பில்லியன் டாலருக்கும் அதிகமாகவும், உலகளவில் 12 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகவும் வசூலித்துள்ளன, இதனால் இவர் அனைத்துக் காலத்திலும் அதிக வருமானம் ஈட்டிய நடிகர்களில் ஒருவராக உள்ளார்.[4][5] குரூஸ் தொடர்ச்சியாக $100 மில்லியன் வசூல் செய்த திரைப்படங்களுக்கான கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார், இது 2012 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் சாதிக்கப்பட்டது.[6] இவர், தொடர்ந்து உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக உள்ளார்.[7]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுகுரூசு சூலை 3,1962 இல் நியூயார்க்கின் சிராகூசில் [8] மின் பொறியாளர் தாமஸ் குரூசு மபோதர் III (1934-1984) மற்றும் சிறப்புக் கல்வி ஆசிரியர் மேரி லீ (née Pfiffer′ 1936-2017) ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[9] இவரது பெற்றோர் இருவரும் கென்டக்கியின் லூயிஸ்வில்லியைச் சேர்ந்தவர்கள், மேலும் ஆங்கிலம், ஜெர்மன், ஐரிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாவர்.[10][11][12] குரூஸுக்கு லீ ஆன், மரியன் மற்றும் காஸ் என்ற மூன்று சகோதரிகள் உள்ளனர். இவரது உறவினர்களில் ஒருவரான வில்லியம் மபோதரும் ஒரு நடிகரவார், இவர் குரூசுடன் ஐந்து படங்களில் தோன்றியுள்ளார்.[13]
கத்தோலிக்கப் பிண்னனியில் வறுமையாக வாழ்ந்தார். பின்னர் இவர் தனது தந்தையை "குழப்பமான வணிகர்", தனது குழந்தைகளை அடிக்கும் "கொடுமைக்காரன்" மற்றும் "கோழை" என்று விவரித்தார்.[14] குரூசுன் உயிரியல் தந்தை 1984 இல் புற்றுநோயால் இறந்தார்.[14][15]
நடிப்பு வாழ்க்கை
தொகு1980களில்
தொகுதனது 18 ஆம் வயதில், தனது தாய் மற்றும் மாற்றாந்தாய் தந்தையின் ஒப்புதலோடு குரூசு நடிப்புத் தொழிலைத் தொடர நியூயார்க் நகரத்திற்குக் குடிபெயர்ந்தார்.[16][17] நியூயார்க்கில் பணியாளகப் பணியாற்றிய பிறகு, தொலைக்காட்சியில் நடிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். அவர் சி. ஏ. ஏ உடன் கையெழுத்திட்டு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.[16] 1981 ஆம் ஆண்டு வெளியான எண்ட்லெஸ் லவ் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய பகுதியாக அறிமுகமானார், அதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் பிற்பகுதியில் டேப்ஸ் என்ற திரைப்படத்தில் இராணுவ அகாதமி மாணவராக ஒரு முக்கிய துணை வேடத்தில் நடித்தார். குரூசு முதலில் ஒரு பின்னணி நடிகராக தோன்றவிருந்தார், ஆனால் இயக்குனர் ஹரோல்ட் பெக்கருக்கு இவரது நடைப்புத் திறன் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக இவரது கதாப்பாத்திரம் விரிவுபடுத்தப்பட்டது.[18] 1983 ஆம் ஆண்டில், பிரான்சிஸ் போர்டு கபேல குரூயிசு தி அவுட்சைடர்ஸ் திரைப்படத்தின் குழும நடிகர்களில் குரூசு ஒரு பகுதியாக இருந்தார். அதே ஆண்டு இவர் ஆல் தி ரைட் மூவ்ஸ் மற்றும் ரிஸ்கி பிசினஸ் ஆகிய திரைபப்டங்களில் தோன்றினார்.1985 இல் வெளியான ரிட்லி சுகாட் திரைப்படமான லெஜெண்டிலும் கதாநாயகனாக நடித்தார்.[19] 1986 ஆம் ஆண்டின் டாப் கன் மூலம், சூப்பர் ஸ்டாராக அறியப்பட்டார்.[20]
சொந்த வாழ்க்கை
தொகுகுரூசு தனது பெரும்பாலான நேரத்தை கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸ், புளோரிடாவின் கிளியர்வாட்டர், இங்கிலாந்து ஆகிய இடங்களில் கழித்தார். அங்கு, மத்திய லண்டன், டுல்விச், கிழக்கு கிரின்ஸ்டெட், மற்றும் பிக்ஜின் ஹில் போன்ற பல்வேறு இடங்களில் வசித்து வருகிறார்.[21][22][23][24][25] 1980களின் முற்பகுதி முதல் நடுப்பகுதி வரை, மெலிசா கில்பர்ட், ரெபேக்கா டி மோர்னே, பட்டி சியால்பா, செர் ஆகியோருடன் உறவில் இருந்தார்..[26][27][28][29]
- ↑ "Will Tom Cruise Be the Last Real Movie Star?". Esquire. May 25, 2022. Archived from the original on November 18, 2023. பார்க்கப்பட்ட நாள் November 18, 2023.
- ↑ "From 'Top Gun' to Hollywood icon: The best of Tom Cruise through the years". Yahoo Finance. May 27, 2022. Archived from the original on November 18, 2023. பார்க்கப்பட்ட நாள் November 18, 2023.
- ↑ Radhakrishnan, Manjusha (June 26, 2023). "Hollywood icon Tom Cruise swoops down Abu Dhabi for 'Mission: Impossible — Dead Reckoning, Part One' premiere". Gulf News. Archived from the original on August 31, 2024. பார்க்கப்பட்ட நாள் November 19, 2023.
- ↑ "Tom Cruise". The Numbers. Archived from the original on July 15, 2024. பார்க்கப்பட்ட நாள் 2023-07-20.
- ↑ "Top 100 Stars in Leading Roles at the Worldwide Box Office". The Numbers. Archived from the original on November 4, 2018. பார்க்கப்பட்ட நாள் 2024-07-18.
- ↑ "Most consecutive $100-million-grossing movies (actor)". Guiness World Records. பார்க்கப்பட்ட நாள் 2024-09-13.
- ↑ Block, Alex Ben; Wilson, Lucy Autrey, eds. (2010). George Lucas's Blockbusting: A Decade-By-Decade Survey of Timeless Movies Including Untold Secrets of Their Financial and Cultural Success. HarperCollins. pp. 616–617, 714–715, 824–825 & 832. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-177889-6.
- ↑ "Tom Cruise". Encyclopaedia Britannica.
- ↑ "About Tom". Time. June 24, 2002. Archived from the original on August 24, 2013. பார்க்கப்பட்ட நாள் February 3, 2013.
- ↑ "If truth be told, Tom Cruise Mapother IV has always been something of a ladies' man" (PDF). Gloucester Historical Society. Archived from the original (PDF) on December 29, 2020. பார்க்கப்பட்ட நாள் October 7, 2017.
- ↑ "Tom Cruise's Irish Ancestry". Eneclann.ie. March 28, 2013. Archived from the original on April 7, 2016. பார்க்கப்பட்ட நாள் April 4, 2013.
- ↑ "Ancestry of Tom Cruise". Wargs.com. Archived from the original on October 27, 2011. பார்க்கப்பட்ட நாள் August 8, 2009.
- ↑ "Stars you didn't know were related". EW.com. Archived from the original on December 29, 2020. பார்க்கப்பட்ட நாள் February 18, 2020.
- ↑ 14.0 14.1 "I Can Create Who I Am". Parade. April 9, 2006. Archived from the original on April 12, 2011. பார்க்கப்பட்ட நாள் February 18, 2011.
- ↑ Fisher, Luchina (July 10, 2012). "Tom Cruise and Katie Holmes: Very Different Upbringings". ABCNews.go.com. ABC. Archived from the original on December 29, 2020. பார்க்கப்பட்ட நாள் October 13, 2016.
- ↑ 16.0 16.1 "Tom Cruise Biography, Filmography". Fox News. March 25, 2015. Archived from the original on December 29, 2020. பார்க்கப்பட்ட நாள் May 21, 2020.
- ↑ Huddleston, Tom Jr. (July 27, 2018). "These were 'Mission: Impossible—Fallout' star Tom Cruise's first jobs as a kid". CNBC. Archived from the original on December 29, 2020. பார்க்கப்பட்ட நாள் May 21, 2020.
- ↑ Higgins, Bill (December 17, 2011). "How Tom Cruise and Sean Penn Got Their Big Breaks". Rolling Stone. Archived from the original on August 13, 2022. பார்க்கப்பட்ட நாள் January 13, 2024.
- ↑ "Risky Business". Rotten Tomatoes. Archived from the original on June 19, 2006. பார்க்கப்பட்ட நாள் May 10, 2006.
- ↑ "Obituary: Tony Scott". BBC News. August 20, 2012 இம் மூலத்தில் இருந்து August 21, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120821082108/http://www.bbc.co.uk/news/entertainment-arts-19316140.
- ↑ "Tom Cruise House – Beverly Hills | | Celebrity Homes". www.celebhomes.net. December 10, 2012. Archived from the original on December 29, 2020. பார்க்கப்பட்ட நாள் April 27, 2020.
- ↑ "Tom Cruise's New Florida Penthouse Near Scientology Headquarters Features 'Pool Garden and Kitchen'". Popculture.com. Archived from the original on December 29, 2020. பார்க்கப்பட்ட நாள் April 27, 2020.
- ↑ "Star couple 'buy London home'". news.bbc.co.uk. Archived from the original on December 29, 2020. பார்க்கப்பட்ட நாள் April 27, 2020.
- ↑ .
- ↑ Honey, Sam (May 16, 2022). "Tom Cruise's quiet life in Biggin Hill and his daughter's very ordinary life". KentLive. Archived from the original on September 4, 2023. பார்க்கப்பட்ட நாள் July 5, 2022.
- ↑ Ross, Martha (July 12, 2021). "Is Tom Cruise's rumored new girlfriend ... July 2021". mercurynews.com. The Mercury News. Archived from the original on October 13, 2022. பார்க்கப்பட்ட நாள் April 25, 2022.
- ↑ "Cruise Control". Vh1. May 27, 2005. Archived from the original on June 29, 2011. பார்க்கப்பட்ட நாள் June 5, 2011.
- ↑ "Romancing the Boss". People. Archived from the original on December 29, 2020. பார்க்கப்பட்ட நாள் April 27, 2020.
- ↑ "Cher reveals affair with Tom Cruise". NewsComAu. Archived from the original on June 17, 2010. பார்க்கப்பட்ட நாள் April 2, 2015.