உயர்கல்வித் துறை (தமிழ்நாடு)
(பயனர்:TNSE KNRKAVINPAZHANI KRR/மணல்தொட்டி 14 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உயர்கல்வித் துறை (தமிழ்நாடு) (Department of Higher Education (Tamil Nadu)) என்பது என்பது தமிழ்நாடு அரசின் ஒரு துறை ஆகும். இத்துறை உயர்கல்வியை மாநிலம் முழுவதும் பரவலாக்கப்படுவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1811 |
ஆட்சி எல்லை | தமிழ்நாடு |
தலைமையகம் | சென்னை |
அமைச்சர் |
|
அமைப்பு தலைமைகள் |
|
மூல அமைப்பு | தமிழ்நாடு அரசு |
வலைத்தளம் | Higher Education Department |
வரலாறு
தொகுதமிழ்நாட்டில் 1957ஆம் ஆண்டு அக்டோபர் 14ம் நாள் தொழில்நுட்பக் கல்வித்துறை தொடங்கப்பட்டது. 1997ஆம் ஆண்டு கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை எனத் தனித் துறைகளாகப் பிரிக்கப்பட்டது.[1]
குறிக்கோள்கள்
தொகுஉயர்கல்வித் துறையானது சமூகத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு கொள்கைகள், சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் பலவேறு திட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்துவதை அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளது.
- உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி வழங்குதல்
- ஏழை, எளிய குடும்பத்திலுள்ள இளைஞர்களுக்கு உயர் கல்வியை வழங்குதல்
- உயர்கல்வியின் சமவாய்ப்பினை வழங்குதல்
- 2020-க்குள் உயர்கல்வி அடைவு நிலையை 25 விழுக்காட்டிற்கு உயர்த்துதல்
- கல்லூரிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்
- பாடத்திட்டத்தை வளப்படுத்தி மேம்பாடு அடைய செய்தல்
- உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல்
- கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களிடையே உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துதல்
- மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை
ஊக்கப்படுத்துதல்.[2]
துணை - துறைகள்
தொகு- கல்லூரிக் கல்வி இயக்குநரகம் - கல்லூரிக் கல்வி இயக்குநரின் தலைமையில் செயல்படுகிறது.
- தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம்
- ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை[3]
செயல்கள்/அமைப்புகள்
தொகு- தமிழ்நாடு மாநில உயர்க்கல்வி மன்றம்
- தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம்
- தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கழகம்
- தமிழ்நாடு மாநில உருது அகாடமி
- தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்
- அறிவியல் நகரம், சென்னை.[4]
உயர்கல்வித்துறை அமைச்சர்கள்
தொகுபெயர் | படம் | அலுவல் காலம் | |
---|---|---|---|
செ. அரங்கநாயகம் | 30 சூன் 1977 | 17 பிப்ரவரி 1980 | |
செ. அரங்கநாயகம் | 9 சூன் 1980 | 9 பிப்ரவரி 1985 | |
சி. பொன்னையன் | 10 பிப்ரவரி 1985 | 30 சனவரி 1988 | |
க. அன்பழகம் | 27 சனவரி 1989 | 30 சனவரி 1991 | |
இராம. வீரப்பன் | 24 சூன் 1991 | 1995 | |
க. அன்பழகன் | 13 மே 1996 | 13 மே 2001 | |
மு. தம்பித்துரை | 14 மே 2001 | 1 மார்ச்சு 2002 | |
செ. வெ. சண்முகம் | 2 மார்ச்சு 2002 | 12 மே 2006 | |
க. பொன்முடி | 13 மே 2006 | 15 மே 2011 | |
பெ. பழனியப்பன் | 16 மே 2011 | 22 மே 2016 | |
கே. பி. அன்பழகன் | 23 மே 2016 | 6 மே 2021 | |
க. பொன்முடி | 7 மே 2021 | 2023 |
சான்றுகள்
தொகு- ↑ "departments created". http://www.tn.gov.in. http://www.tn.gov.in/rti/proactive/hedu/handbook-hedu.pdf. பார்த்த நாள்: 2012-10-30.
- ↑ "Objective of the Department". http://www.tn.gov.in. http://www.tn.gov.in/rti/proactive/hedu/handbook-hedu.pdf. பார்த்த நாள்: 2012-10-30.
- ↑ "Sub - Departments under the Higher Education Department". http://www.tn.gov.in. http://www.tn.gov.in/rti/proactive/hedu/handbook-hedu.pdf. பார்த்த நாள்: 2012-10-30.
- ↑ "Organisations under the Higher Education Department". http://www.tn.gov.in. http://www.tn.gov.in/rti/proactive/hedu/handbook-hedu.pdf. பார்த்த நாள்: 2012-10-30.