கேந்திரிய வித்யாலயா
கேந்திரிய வித்யாலயா சங்கதன் (இந்தி: केन्द्रीय विद्यालय सङ्घटनम् பொருள்:மத்திய பள்ளிகளின் கூட்டமைப்பு) என்பது மத்திய அரசின் இந்திய கல்வித் துறை அமைச்சகத்தால் நிருவகிக்கப்படும் மத்திய அரசுப் பள்ளியாகும். இது இந்தியாவில் மட்டுமின்றி காத்மாண்டு, மாஸ்கோ, டெஹ்ரான் ஆகிய இடங்களிலும் செயல்படுகிறது.[1]
கேந்திரிய வித்யாலயா Kendriya Vidyalaya Sangathan केन्द्रीय विद्यालय संगठन | |
---|---|
அமைவிடம் | |
இந்தியா | |
தகவல் | |
குறிக்கோள் | Tatvam Pooshan Apaavrunu |
தொடக்கம் | 1963 |
பள்ளி அவை | நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) |
ஆணையம் | கல்வித் துறை அமைச்சகம் (இந்தியா) |
இணையம் | kvsangathan.nic.in |
அனைத்து கே.வி. பள்ளிகளிலும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடமுறையும் பயிற்றுவித்தல் திட்டமும் பின்பற்றப்படுவதால் நடுவணரசு ஊழியர்கள் இடமாற்றம் பெறும் போது குழந்தைகளின் கல்வியில் சிக்கல் நேர்வதில்லை. 1950ல் வெறும் 3 பள்ளிகளுடன் துவங்கி, தற்போது மொத்தமாக 1,248 பள்ளிகள் இந்தியாவிலும் 3 பள்ளிகள் அயல் நாட்டிலும் செயல்பட்டுக்கொண்டு உள்ளன. இக்கல்வி அமைப்பானது உலகளாவிய சங்கிலித்தொடர் பள்ளிகளில் முதன்மையானது.[2][3]
வரலாறு
தொகு1963-ம் ஆண்ட 'நடுவண் பள்ளிகள்' என்ற பெயரில் தொடங்கப்பட்டு, பின்னர் 'கேந்திரிய வித்யாலயா' என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகள் அனைத்தும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்துடன் (CBSE) இணைக்கப்பட்டுள்ளன.
இந்தியப் பாதுகாப்புத் துறையில் சேவையாற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் பணியாற்றுபவர்கள் அடிக்கடி பணிமாறுதல்களால் பல இடங்களில் பணியாற்றும் சூழலில் அவர்களின் குழந்தைகளுக்குத் தொடர்ச்சியான மற்றும் நிலையான கல்வியை வழங்க வேண்டும் என்ற முதன்மை நோக்கில் செயல்பட்டு வருகின்றன. பிறகு இராணுவத் துறையில் தனியாக இராணுவப் பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில் மத்திய அரசுப் பணியில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் குழந்தைகளுக்கும் கல்வியை அளித்து வருகிறது.[4] இப்பள்ளிகள் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றன.[5]
பாடத்திட்டம்
தொகுஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. பொதுவான பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகள் பின்பற்றப்படுவதால் மத்திய அரசு ஊழியர்கள் பணியிடம் மாற்றம் பெறுகின்றபொழுது அவர்களின் குழந்தைகளின் கல்வித்தரம் பாதிப்படையா வண்ணம் அமைந்துள்ளது. இதனால் குழந்தைகளின் கல்வி உரிமை உறுதிசெய்யப்படுகிறது.
நிர்வாகம்
தொகுகேந்திரிய வித்யாலயா சங்கதன்(அமைப்பு) என்கின்ற நடுவண் பள்ளி அமைப்பு புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இவ்வமைப்பு இப்பள்ளிகளின் செயல்பாட்டை கண்காணித்து வருகின்றது. இந்நிர்வாக அமைப்பின் தலைவர் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் முதன்மை அமைச்சர் ஆவார். இதன் துணைத்தலைவர் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் இணை அமைச்சர் ஆவார். இவ்வமைப்பின் ஆணையர் இதன் பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றார். மேலும், பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள், இதன் துணை ஆணையர்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.[6] பல்வேறு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டு உதவி ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் தலைவராக செயலாற்றி வருகின்றனர். பள்ளி நிர்வாகத்திற்கு என்று தனியாக முதல்வர் நியமிக்கப்படுகிறார்.
பள்ளிகள்
தொகு2016 மார்ச் மாத நிலவரப்படி 1128 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1125 பள்ளிகள் இந்தியாவிலும் காத்மாண்டு, மாஸ்கோ, டெக்ரான் போன்ற நாடுகளில் மூன்று பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. [7]
இப்பள்ளிகளில் 1,209,138 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 56,445 பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இப்பள்ளிகள் இந்தியாவில் 25 மண்டலமாக பிரிக்கப்பட்டு அமைந்துள்ளன.
சிறப்புகள்
தொகு- பொதுவான பாடத்திட்டம் கொண்டு ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது.
- சமஸ்கிருதம் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாயப் பாடமாகவும், 9-ம் வகு்பபு முதல் 12ம் வகுப்பு வரை தேர்ந்தெடுக்கும் பாடமாகவும் அமைந்துள்ளது.
- 2014-ஆம் ஆண்டு வரை 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்ப வரை ஜெர்மன் மொழி கற்றுத் தரப்பட்டுள்ளது.
- மாஸ்கோவில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குப் பிரெஞ்சு அல்லது ரஷ்யா மொழி மூன்றாவது அல்லது இரண்டாவது மொழியாக கற்றுத் தரப்படுகிறது.
- தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணங்கள் இல்லை. பிற மாணவர்களுக்குக் கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டு பள்ளி வளர்ச்சி நிதியாக பயன்படுத்தப்படுகிறது.
- குடும்பத்தில் ஒரே பெண் குழந்தை உள்ள நிலையில் அக்குழந்தைக்கு 6-ம் வகுப்பிலிருந்து கல்விக் கட்டணம் மற்றும் பள்ளி மேம்பாட்டு நிதி வாங்குவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.[8]
சான்றுகள்
தொகு- ↑ "கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர விண்ணப்பப் பதிவு தொடங்கியது". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
- ↑ "kvs: Latest News, Videos and Photos of kvs | Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
- ↑ "Kendriya Vidyalayas announce early summer vacation, to remain closed till June 20". www.timesnownews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
- ↑ மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி
- ↑ "Kendriya Vidyalaya". Kendriya Vidyalaya Sangathan. National Informatics Centre (NIC), Government of India. பார்க்கப்பட்ட நாள் 7 September 2010.
- ↑ "Kendriya Vidyalaya Sangathan". Kvsangathan.nic.in. 2013-03-31. பார்க்கப்பட்ட நாள் 2016-03-06.
- ↑ "KVS homepage". Kendriya Vidyalaya Sangathan. Archived from the original on 25 June 2014.
- ↑ "Category wise exemption from payment of Tuition fee, VVN & Computer Fund" (PDF). Kendriya Vidyalaya Sangathan. Archived from the original (PDF) on 2018-08-27. பார்க்கப்பட்ட நாள் 2017-07-19.