சுரேன், தொடர்ந்து இலங்கை தொடர்பான கட்டுரைகளில் நீங்கள் ஆர்வம் காட்டி வருவதை கண்டு மகிழ்கிறேன். உங்களுக்கு என பயனர் கணக்கு உருவாக்கி கொண்டு செயல்படுவீர்களேயானால், பிற பயனர்கள் உங்களை எளிதில் தொடர்பு கொண்டு கட்டுரை குறித்து விவாதிக்க உதவியாக இருக்கும். ஒரு பயனர் கணக்கை உருவாக்கிக்கொள்வது மிகவும் துரிதமான இலவசமான செயலாகும். பயனர் கணக்கு உருவாக்குவதற்காக உங்கள் தனி நபர் தகவல் எதுவும் கேட்கப்பட மாட்டாது. தவிர, பயணர் கணக்கு உருவாக்குவதனால் உங்களுக்கு பல நன்மைகள் உண்டு. அவற்றுள் சில:

  • நீங்கள் விரும்பும் பயனர் பெயரை பெறலாம்
  • உங்கள் பங்களிப்புகள் அனைத்தையும் "என் பங்களிப்புகள்" என்ற இணைப்பை தெரிவு செய்து காணலாம்.
  • உங்களுக்கென பிரத்யேக பயனர் பக்கம் கிடைக்கும்
  • உங்களுக்கென பிரத்யேக பேச்சுப் பக்கமும் அதன் மூலம் பிற பயனர்கள் உங்களுக்கு மின் மடல் அனுப்பும் வசதியும் கிடைக்கும். ஆனால், உங்களின் மின் மடல் முகவரியை பிற பயனர்கள் அறிய இயலாது.
  • நீங்கள் விரும்பும் கட்டுரைகளில் நிகழும் மாற்றங்களை கண்காணிக்க கவனிப்பு பட்டியல் வசதி
  • விக்கிபீடியா பக்கங்களின் பெயர்களை மாற்றும் அனுமதி
  • கோப்புகளை பதிவேற்றும் அனுமதி
  • உங்கள் விருப்பத்திற்கேற்ப விக்கிபீடியா தள தோற்றத்தையும் நடத்தையையும் மாற்றி பார்வையிடும் அனுமதி
  • விக்கிபீடியா நிர்வாகி ஆகும் வாய்ப்பு
  • ஓட்டெடுப்புகளில் கலந்து கொள்ளும் உரிமை
  • பயணர் கணக்கு உருவாக்கிய பின், உங்கள் IP முகவரி பிற பயனர்களிடம் இருந்து மறைக்கப்படும்

நீங்கள் ஒரு விக்கிபீடியர் ஆக முன்வருவீர்கள் என்ற நம்பிக்கையில் பயனர் கணக்கு உருவாக்கிக் கொள்ள முன்வாருங்கள் என்று உங்களை அழைக்கிறோம்.

ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--ரவி (பேச்சு) 16:27, 18 செப்டெம்பர் 2005 (UTC)Reply


தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:220.247.231.180&oldid=16576" இலிருந்து மீள்விக்கப்பட்டது