பயனர் பேச்சு:Parvathisri/தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு
முன்னர் இலங்கையைச் சேர்ந்த சிந்துஜாவும் ஆர்வத்துடன் பங்களித்த ஒரு பெண் பயனர். இசை தொடர்பான பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ---மயூரநாதன் (பேச்சு) 17:20, 9 செப்டம்பர் 2013 (UTC)
- எனது முன்னைய பதிவு ஒன்று இங்கே: http://tamilwikipedia.blogspot.ca/2011/03/blog-post_08.html
தொழில்நுட்பத் துறையில், இணையத்தில் பெண்களின், அதுவும் குறிப்பாக இந்தியப் பெண்களின் பங்கேற்பு பொதுவில் மிகவும் குறைவாகவே உள்ளது. தமிழ் விக்கியூடகங்களிலும் அப்படியே. விக்கியூடகங்கள் கணினி ஆர்வலர்களைக் கொண்டு முதலில் உருவானதாலும், அதில் ஆண்களே அதிகம் இருந்தாலும் தொடக்க காலத்தில் இப்படி இருந்தது. சக பெண் பங்களிப்பாளர்கள் குறைவானதாக இருந்தால், அவர்கள் அன்னியப்படுத்தப்பட்டு இருக்கலாம். சில வலைப்பின்னல்களில் (pinterest.com - http://www.pcmag.com/article2/0,2817,2400187,00.asp, http://www.forbes.com/sites/gyro/2012/04/10/4-reasons-pinterest-wins-with-women-and-facebook-loses/) போன்றவற்றில் பெண்கள் அதிகம் பங்கேற்கிறார்கள். அது ஏன் என அலசலாம். அத்தோடு வேறு ஒரு விக்கி பயனர் சுட்டிய http://blogs.wsj.com/digits/2013/08/19/women-contributors-still-face-hurdles-at-wikipedia/ கட்டுரையும் கவனிக்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 21:35, 9 செப்டம்பர் 2013 (UTC)
ஒரளவு தாங்கள் கூறிய செய்திகளை இணைத்துள்ளேன். தேர்வுகள் சமயமாதலால் என்னால் இதற்கு மேல் செய்திகளை இணைக்க இயலாத நிலை உள்ளது. வருந்துகிறேன். வேறு யாரேனும் செய்திகளை இணைக்க முடிந்தாலும் நன்று,-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:42, 16 செப்டம்பர் 2013 (UTC)
சில பரிந்துரைகள்
தொகுபெண்களின் பங்களிப்பு விக்கிப்பீடியாவில் குறைவே என்ற போதும் தொடக்கம் முதல் அதனை சுட்டிக்காட்ட வேண்டாமே. \\மிகவும் குறைவாகவே உள்ளது\\ \\ மிக மிகக் குறைவாகவே உள்ளது. \\ போன்ற எதிர்மறை வாசகங்களை நீக்க முயலாம். அதற்கு பதிலாக பெண்களின் பங்களிப்பு கனிசமாக உள்ளது என்பதைப் போன்ற நடையை பின்பற்றலாம். தமிழ்ப் பெண்களின் நிலைப்பாடு பத்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெண் பங்களிப்பார்கள் எத்துறையில் பங்காற்றினார்கள். அவர்கள் பங்களிப்பின் முக்கியத்துவம் என்ன? போன்றவற்றை சேர்த்து விரிவாக்க வேண்டும். பங்களிப்பு குறைவதற்கான காரணங்கள் பகுதியை சுருக்க வேண்டுகிறேன். இத்தனை விரிவான அலசல்களை விக்கிப்பீடியர்களுக்குள் வைத்துக் கொள்வது மேலும் பெண் பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையை கூட்ட வழிவகை செய்யும். பொது இடத்தில் வைக்கும் பொழுது அதுவே பெண்களுக்கு பயத்தினை தந்துவிடலாம். குறிப்பாக \\பெண் பங்களிப்பாளர்களின் பயனர் பக்கங்களில் செய்யப்படும் விசமத் தொகுப்புகள் \\ என்ற செய்தியை முதன் முதலாக இப்போதுதான் அறிகிறேன். தமிழ் விக்கியில் இந்த செயல்பாடு இல்லையெனும் பொழுதும் பொதுமக்களிடையே மற்ற விக்கிகள் குறித்தான தவறான பரப்புரையாக இது அமைந்துவிடும். குறைகளை சுருங்க கூறி, நிறைகளை பெரிதுபடுத்த வேண்டுகிறேன். மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:35, 19 செப்டம்பர் 2013 (UTC)
- பரப்புரை நோக்கில் இக்கட்டுரையைப் பயன்படுத்துகிறோம் என்றால் செகதீசுவரன் சுட்டியபடி வளர்முகமாக அணுகலாம். ஏற்கனவே பங்களித்து வரும் பெண்களின் ஒளிப்படங்கள், அவர்களைப் பற்றிய குறிப்புகளைச் சேர்ப்பதன் மூலம் தாங்களும் பங்களிக்கலாமே என்ற எண்ணத்தைப் பெண்களிடம் தோற்றுவிக்கலாம்.--இரவி (பேச்சு) 10:26, 19 செப்டம்பர் 2013 (UTC)
உதவி
தொகுகருத்துகளுக்கு நன்றி. தேவையான மாற்றங்களைச் செய்தால் மகிழ்வேன். நேரமின்மை ஒரு பெரிய குறையாக உள்ளது. சிந்து, பூங்கோதை, கலை ஆகியோரின் படங்கள் கிடைக்கவில்லை. இருப்பின் இணைக்கவும், நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:44, 26 செப்டம்பர் 2013 (UTC)