உலகக்கிண்ணம்2010 தென்ஆபிரிக்கா உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த தென்னாபிரிக்கா தயாராகி விட்டது. 2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கு 32 நாடுகள் தெரிவு செய்யப்பட்டு விட்டன. பீபாவில் அங்கத்துவம் வகிக்கும் 224 நாடுகள் உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டியில் விளையாடின.

பலம்வாய்ந்த நாடுகளான ஆர்ஜென்டீனாவும், பிரான்ஸும் இறுதிவரை போராடி தமது கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. உதைப்பந்தாட்டத்தின் பலம் வாய்ந்த நாடுகள் முட்டி மோதி தமது திறமையை வெளிப்படுத்தி உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதனால் தென் ஆபிரிக்கா நேரடியாக விளையாடும் தகுதியைப் பெற்றது.

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து 43 நாடுகள் தகுதிகாண் போட்டியில் விளையாடின. கானா, ஐவரிகோஸ்ட், கமரூன், நைஜீரியா, அல்ஜீரியா ஆகிய ஐந்து நாடுகள் புள்ளிகளின் அடிப்படையில் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. கிரிக்கெட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டுதலைப் பெற்ற தென் ஆபிரிக்கா உதைபந்தாட்ட ரசிகர்களின் பாராட்டையும் பெறும் என்பதில் சந்தேகமில்லை. பீபாவில் தென்ஆபிரிக்கா சேர்ந்து 15 ஆண்டுகளாகின்றன.

1998, 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடும் தகுதியை தென் ஆபிரிக்கா பெற்றது. 1996 ஆம் ஆண்டு ஆபிரிக்கக் கிண்ணத்தைக் கைப்பற்றிய தென் ஆபிரிக்கா 1998 ஆம் ஆண்டு இரண்டாவது இடத்தையும் 2000 ஆம் ஆண்டு 3 ஆம் இடத்தையும் பெற்றது. ஆபிரிக்கக் கிண்ணப் போட்டியில் விளையாட தொடர்ச்சியாக ஏழு முறை தென் ஆபிரிக்கா தகுதி பெற்றது. தென் ஆபிரிக்காவின் பயிற்சியாளரான ஜோ. எல், சாந்தனா கடமையாற்றி வருகிறார். கசிசிடிக்குகோ பென்னி மக்கார்த்தி, கிபுகி சோபென்னி, சியா பெங்கா, ஹொம் விடே ஆகிய வீரர்கள் மீது தென் ஆபிரிக்க ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

அண்மையில் விளையாடிய ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றிகளையும் மூன்று தோல்விகளையும் பெற்றது. ஒரு போட்டி சமநிலையில் முடிந்தது. தென் ஆபிரிக்கா ஐந்து கோல்கள் அடித்துள்ளது. எதிரணிகள் ஐந்து கோல்கள் அடித்துள்ளன. தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 10 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டுள்ளன

வாழ்த்துக்கள்

தொகு

சிறப்பு வாழ்த்துக்கள் வர்மா! நீங்கள் தொடங்கிய 2010 உலகக்கோப்பை கால்பந்து கட்டுரை தமிழ் விக்கிப்பீடியா குறுந்தட்டு திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. -- மாகிர் 15:18, 25 சனவரி 2012 (UTC)Reply

பதிப்புரிமை மீறல்

தொகு
 

வணக்கம், Varmah!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


--AntonTalk 16:03, 6 சூலை 2014 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Varmah&oldid=3185119" இலிருந்து மீள்விக்கப்பட்டது