பரங்கிப்பேட்டை தொடருந்து நிலையம்
பரங்கிப்பேட்டை தொடருந்து நிலையம் (Parangipettai railway station) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும், நாடு சுதந்திரம் அடைந்து சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகும் பரங்கிப்பேட்டையில் தொடருந்து போக்குவரத்து சிறப்பாக இருந்தது . போக்குவரத்து வசதிகள் நவீனமயமாக்கப்பட்ட பிறகு, பரங்கிப்பேட்டை மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தது. இந்த நிலையத்தை தெற்கு இரயில்வே 2017 இல் NSG-6 என வகைப்படுத்தியது.[5] இப்போது, 2023 இல் HG-2 என வகைப்படுத்தியுள்ளது.[6]
பரங்கிப்பேட்டை - PO | |||||
---|---|---|---|---|---|
இந்திய ரயில் நிலையம் | |||||
பரங்கிப்பேட்டை தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | முட்லூர் சாலை, பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம், தமிழ்நாடு -608502[1] | ||||
ஆள்கூறுகள் | 11°28′37″N 79°44′12″E / 11.47698°N 79.73679°E | ||||
ஏற்றம் | 6 மீட்டர் (19.69 அடி) | ||||
உரிமம் | இந்திய ரயில்வே | ||||
இயக்குபவர் | திருச்சிராப்பள்ளி கோட்டம், தென்னக இரயில்வே | ||||
நிர்வகிப்பவர் | முகவர் | ||||
தடங்கள் | சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடம் | ||||
நடைமேடை | 1 | ||||
இருப்புப் பாதைகள் | 1 | ||||
இணைப்புக்கள் | பேருந்து, ஆட்டோ ரிக்சா | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரநிலை (தரையில்) | ||||
தரிப்பிடம் | ஆம் | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | செயல்படும் | ||||
நிலையக் குறியீடு | PO | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | திருச்சிராப்பள்ளி | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | சூலை 1, 1877[2] [3] [4] | ||||
மின்சாரமயம் | 25 kV AC 50 Hz on பெப்ரவரி 7, 2020 | ||||
பயணிகள் | |||||
பயணிகள் 2016-2017 2017-2018 2018-2019 2019-2020 | 1.21 லட்சங்கள் 2.36 லட்சங்கள் 1.48 லட்சங்கள் 1.49 லட்சங்கள் | ||||
| |||||
| |||||
| |||||
|
அகலப்பாதையாக மாற்றப்பட்ட பிறகு, விழுப்புரம், மயிலாடுதுறை செல்லும் 6 தொடருந்துகள், பெங்களூரு - காரைக்கால் இடையே மேலும் இரண்டு ரயில்கள் என மொத்தம் 8 தொடருந்துகள் மட்டுமே பரங்கிப்பேட்டையில் நின்று செல்கின்றன. பரங்கிப்பேட்டை வழியாக செல்லும் 60+ விரைவு வண்டிகள் எதுவும் இங்கு நிற்பதில்லை.
பரங்கிப்பேட்டை தொடருந்து நிலையம் கடலூரிலிருந்து 17 மைல் தொலைவிலும், மாயவரத்திலிருந்து (மயிலாடுதுறை) 29 1/2 தொலைவிலும், சென்னையிலிருந்து (எழும்பூர்) 145 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. பரங்கிப்பேட்டை நகரம் தொடருந்து நிலையத்தின் கிழக்கே ஒரு மைல் தொலைவில் உள்ளது.
புத்தகங்கள்
தொகுதென்னிந்திய இரயில்வே நிறுவனம் 1900, 1903, 1909, 1926 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தென்னிந்திய இரயில்வே விளக்க வழிகாட்டி என்ற நூலில் பரங்கிப்பேட்டை தொடருந்து நிலையம் பற்றிய தகவல்களை 1900 இல் ஒன்றரைப் பக்கங்களில் வழங்கியுள்ளது.
பழைய கட்டிடத்தின் எச்சங்கள்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Parangipettai Railway Station Map/Atlas SR/Southern Zone - Railway Enquiry". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 12 February 2024.
- ↑ R. P. Saxena. "Indian Railway History Time line". Irse.bravehost.com. Archived from the original on 29 February 2012. பார்க்கப்பட்ட நாள் 1 January 2014.
- ↑ Baliga, B.S. (1962). Madras District Gazetteers: South Arcot. Madras, Controller of Stationery and Printing. book Pg. No. 293
- ↑ History of Indian Railways -Constructed and in Progress (PDF). Railway Board, Government of INDIA. 1938. Ref PDF Pg. No. 239
- ↑ "TPJ DIVISION - Categorization of stations 2017" (PDF). தென்னக இரயில்வே. S. No. 54.
- ↑ "TPJ DIVISION - LIST OF STATIONS -2023" (PDF). தென்னக இரயில்வே. S. No. 104.
- ↑ Ref Pg. No. 43-44 : Illustrated Guide to the South Indian Railway (Incorporated in England): Including the Tanjore District Board, Pondicherry, Peralam-Karaikkal, Travancore State, Cochin State, Coimbatore District Board, Tinnevelly-Tiruchendur, and the Nilgiri Railways. Asian Educational Services. 1926. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-1889-3.
- ↑ Ref Pg. NO. 199-201: Illustrated Guide to the South Indian Railway: Including the Mayavaram-Mutupet, and Peralam-Karaikkal Railways. 1900.
- ↑ Ref Part-2/Main Line/Portonovo:The Illustrated Guide to the South Indian Railway. Amberley Publishing Limited. 15 July 2015. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4456-5082-1.