பரங்கி நாற்காலி
பரங்கி நாற்காலி என்பது கால்களை மடித்து உட்கார்ந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட நாற்காலி ஆகும். 17ம் நூற்றாண்டின் தஞ்சாவூர் நாயக்கர்கள் இந்த வகை நாற்காலிகளை பயன்படுத்தி வந்துள்ளனர். [1]
சொல்லிலக்கணம்
தொகுபரங்கி என்னும் வார்த்தை பிரெஞ்ச் என்பதன் மருவாகக் கருதப்படுகிறது. பிரெஞ்சுக்காரர்களை பரங்கியர்கள் என அழைத்துள்ளனர். இந்த நாற்காலிகள் மனிதர்கள் தங்கள் கால்களை மடித்து அமர்ந்து கொள்ளும் வகையில், பெரிய அளவிலான சதுர வடிவில் அமைக்கப்படுகிறது.
பரங்கி நாற்காலி வாகனம்
தொகுதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வைணவ தலங்கள் சிலவற்றில் பரங்கி நாற்காலி வாகனம் உள்ளது. [1] இதில் திருமால், ஆண்டாள் ஆகிய இறைகள் அமர்ந்து உலா செல்கின்றனர்.
இவற்றையும் காண்க
தொகு- * சப்பரம்