பரங்கி நாற்காலி வாகனம்
|
பரங்கி நாற்காலி வாகனம் ஓவியம்
|
உரிய கடவுள்: |
பெருமாள், ஆண்டாள்
|
வகைகள்: |
பரங்கி நாற்காலி வாகனம், இரட்டை பரங்கி நாற்காலி வாகனம்
|
பரங்கி நாற்காலி வாகனம் என்பது வைணவ கோயில்கள் சிலவற்றில் இறைவன் உலா வருவதற்கு பயன்படுத்தும் வாகனமாகும்.[1] இந்த வாகனம் 17ம் நூற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்கர்கள் பயன்படுத்திய பெரிய சதுர வடிவிலான பரங்கி நாற்காலியை போன்று செய்யப்பட்டது.
கோயில்களில் உற்சவ நாட்கள்
தொகு
- நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா திருக்குறுங்குடி நம்பி கோவிலில் பங்குனி பிரமோற்சவம் திருவிழா முதல் நாள் இரவில் பெருமாள் பரங்கி நாற்காலியில் உலா வருகிறார்.
- கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித் திருவிழா இரண்டாம் நாள் இரவு பரங்கி நாற்காலி வாகனத்தில் அய்யா வைகுண்டர் உலா வருகிறார்.
|