கண்ட பேரண்ட பட்சி வாகனம்

வாகனம்
உரிய கடவுள்: திருமால்

கண்ட பேரண்ட பட்சி வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ இந்துக் கடவுள்கள் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். இதனை இருதலைப்புள் வாகனம் என்றும் அழைக்கலாம். இந்து சமய புராணங்களிபடி திருமாலின் வாகனம் ஆகும்.

வாகன தத்துவம்

தொகு

திருமால் இரணியன் எனும் அரக்கனை கொல்ல நரசிம்ம வடிவெடுத்து அழித்தார். சிங்க முகமும் மனித உடலும் கொண்ட நரசிம்மர் உக்கிரம் குறையாமல் பலரை கொன்றார். அதனால் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட நரசிம்மரை அழிக்க சரபம் எனும் பறவையாக வடிவெடுத்து அழித்தார்.

சரப மூர்த்தியின் ஓவியம்

சரபேசுவரர் எட்டு கால்களும், இரண்டு முகங்களும், நான்கு கைகளும், மிகக்கூரிய நகங்களும், உடலின் இருபுறங்களில் இறக்கைகளும், சிங்கத்தினைப் போல் நீண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், யானையைப் போன்ற கண்களும், கோரப் பற்களும், யாளியைப் போன்ற உருவமும் உடையவராக நம்பப்படுகிறார்.சிவபெருமானின் சரப வடிவினை சரபேஸ்வரர் என வழிபடுகின்றனர்.

சைவ வைணவ தர்க்க மோதல்களால் சரபேஸ்வரை அழிக்க திருமால் இருதலைப்புள்ளாக வடிவெடுத்து சரபேஸ்வரருடன் சண்டையிட்டு வென்றதாக நூல்களில் எழுதப்பட்டன.

இருதலைப் புள்ளானது, கரிய உடலும், இரண்டு தலைகளும் அலகுகளில் பற்கள் கொண்ட பெரிய பறவையாக சித்தரிக்கப்படுகிறது.‌ யானையையே அலகால் தூக்கிச் சென்று உண்ணும் அளவிற்கு பெரிய அளவிலான பறவையாகவும், வலிமையான பறவையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கோயில்களில் உலா நாட்கள்

தொகு
  • மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலசாமி பங்குனி திருவிழா ஆறாம் நாள் திருவிழாவில் கண்ட பேரண்ட பட்சி வாகனத்தில் உலா வருகிறார்.[1]

இவற்றையும் காண்க

தொகு
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hindu Gods Vaganas drawings
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. புத்தகம்:தமிழகக் கோயில் வாகனங்கள். ஆசிரியர்:சக்கரவர்த்தி, பிரதீப் - பக்கம் 33 ஆவண இருப்பிடம் டாக்டர் உ.வே.சா. நூலகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ட_பேரண்ட_பட்சி_வாகனம்&oldid=3711918" இலிருந்து மீள்விக்கப்பட்டது