கருட வாகனம்
கருட வாகனம் என்பது வைணவ சமயத்தில் முழுமுதற் கடவுளான திருமால் உலா செல்லும் வாகனங்களில் ஒன்றாகும். கருடனை பெரிய திருவடி என்கின்றனர். [1] கருடாழ்வார், விஷ்ணுப்பிரியன், விஹாகேஸ்வரன், வைநதேயன், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன் என்ற பெயர்களும் கருடனுக்கு உண்டு. கருடவாகனத்தில் திருமாலை பார்ப்பவர்களுக்கு மறுபிறவியே இல்லை என்பது வைணவர்களின் நம்பிக்கை ஆகும்.[2] வாகன அமைப்புதொகுகருடன் மனிதர்களைப் போன்ற தோற்றத்துடன், மூக்கு மட்டும் கழுகு போல அமைக்கப்படுகிறது. கருடன வாகனத்திற்கு இறக்கைகள் உளாளன. அமர்ந்த நிலையில் ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். இரு கரங்களை முன்புறம் நீட்டியவாறு உள்ளார். அதில் திருமாலின் பாதங்களை தாங்குவார். கோயில்களில் உலா நாட்கள்தொகுவைணவ கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமத்திற்கு ஏற்றவாறு உற்சவத்தின் மூன்றாம் நாள் அல்லது ஐந்தாம் நாள் கருட வாகனம் பயன்படுத்தப்படுகிறது.[1]
கல் கருட வாகனம்தொகு
நாச்சியார் கோயிலில் கருட வாகன உலாவை கல் கருடன் சேவை என்கின்றனர். இந்த விழா வருடத்தில் மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் நடைபெறுகிறது. கல்கருட சேவையின் பொழுது 4 டன் எடையுள்ள கல்லினால் செய்யப்பட்ட கருடாழ்வார் வீதிஉலா நடைபெறும். கருட வாகனத்தை முதலில் 4 பேரும் பின்னர் 8,16,32,64 கடைசியாக 128 பேர் தூக்குவர். நிகழ்ச்சி முடிவில் சிலையை மீண்டும் கோவிலுக்குள் எடுத்து செல்லும் பொழுது சிலை தூக்குவோரின் எண்ணிக்கை 128, 64, 32, 16,8 என குறைந்து இறுதியில் 4 பேர் மட்டும் சிலையை கோவிலுக்குள் எடுத்துச்செல்வர். இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
|