பரணி (இலக்கியம்)
பரணி பற்றிய அறிமுகம்
பரணி என்பது தமிழில் வழங்கப்பெறும் தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளுள் ஒன்றாகும். போரிலே ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரர்கள் மேல் பாடப்படுவது பரணி இலக்கியம் ஆகும்.இதை,
ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி எனப் இலக்கண விளக்க பட்டியல் விளக்குகிறது.பெரும்போர் புரிந்து வெற்றி பெற்ற வீரனைச் சிறப்பித்துப் பாடுவதையும் பரணி என்று வழங்குவதுண்டு. போரிற் தோற்ற அரசன் நாட்டில் போர்க்களம் அமைத்துப் போர் செய்து, வெற்றி பெறுவதால் தோற்ற நாட்டுப் பெயரால் நூலை வழங்குவது மரபு.
பரணி என்னும் சொல்லானது, காடுகிழவோன், பூதம், அடுப்பு, தாழி, பெருஞ்சோறு, தருமன் நாள், போதம் என்னும் பல பொருள்களைத் தரும். இதனைக்
- " காடு கிழவோன் பூதமடுப்பே, தாழி பெருஞ்சோறு தருமனாள் போதமெனப் பாகு பட்டது பரணி நாட்பெயரே " - திவாகரம்
என்பதால் அறியலாம்.
பரணிகள்
தொகுஎண் | நூல் | ஆசிரியர் | காலம் |
---|---|---|---|
1 | கொப்பத்துப் பரணி [1] | - | 1054 |
2 | கூடல் சங்கமத்துப் பரணி | - | 1064 |
3 | கலிங்கத்துப்பரணி | செயங்கொண்டார் | 1118 |
4 | தக்கயாகப் பரணி | ஒட்டக்கூத்தர் | 1155 |
5 | இரணியவதைப் பரணி [1] | - | 1210 |
6 | அஞ்ஞானவதைப் பரணி | தத்துவராயர் | 1450 |
7 | மோகவதைப் பரணி | தத்துவராயர் | 1450 |
8 | பாசவதைப் பரணி | வைத்தியநாத தேசிகர் | 1640 |
9 | திருச்செந்தூர்ப் பரணி | சீனிப்புலவர் | 18ஆம் நூற்றாண்டு |
10 | கஞ்சவதைப் பரணி [2] | - | - [3] |
11 | கலைசைச் சிதம்பரேசர் பரணி | சுப்பிரமணிய முனிவர் | 1800 [4] |
பகுதிகள்
தொகுபொதுவாகப் பரணிகள் பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்கும்.
- கடவுள் வாழ்த்து
- கடை திறப்பு
- காடு பாடியது
- கோயில் பாடியது
- தேவியைப் பாடியது
- பேய்ப்பாடியது
- இந்திரசாலம்
- இராச பாரம்பரியம்
- பேய் முறைப்பாடு
- அவதாரம்
- காளிக்குக் கூளி கூறியது
- போர் பாடியது
- களம் பாடியது
- கூழ் அடுதல்
மேற்கோள்கள்
தொகுஇவற்றையும் பார்க்கவும்
தொகுகருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005