பரமகம்ச உபநிடதம்

ஆன்மீகம், துறவு வாழ்க்கை, துறவு பற்றிய இந்து நூல்

பரமகம்ச உபநிடதம் (Paramahaṃsa Upanishad ), சமசுகிருதத்தில் எழுதப்பட்ட 108 உபநிடத இந்து வேதங்களில் ஒன்றும், அதர்வண வேதத்துடன் இணைக்கப்பட்ட 31 உபநிடதங்களில் ஒன்றுமாகும். [1] இது சந்நியாச உபநிடதங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. [2] இராமானுசரின் கூற்றுப்படி, விட்டுணு-சகசிரநாமத்தின்படி தெய்வீக அன்னப்ப் பறவை வடிவத்தில் பிரம்மாவுக்கு வேதங்களைக் கற்பித்த விட்டுணுவின் வடிவங்களில் இதுவும் ஒன்று.

பரகம்சர்
உரையின் தலைப்பிற்கு "உயர்ந்த அன்னம்" என்று பொருள்
பகுதிகள்1
வரிகள்4

உபநிடதம் என்பது இந்துக் கடவுளான பிரம்மாவுக்கும் நாரதருக்கும் இடையேயான உரையாடலாகும். அவர்களின் உரையாடல் பரமகம்ச (உயர்ந்த ஆன்மா) யோகியின் பண்புகளை மையமாகக் கொண்டது. இந்த உரை துறவியை சீவன்முத்தி என்றும், (உயிருடன் இருக்கும் போது விடுதலை பெற்ற ஆன்மா), விதேக முக்தா (மரணத்திற்குப் பிறகான விடுதலை) என்றும் விவரிக்கிறது. [3]

பொது சகாப்தம் தொடங்குவதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் இந்த உரை இயற்றப்பட்டிருக்கலாம். [4] யோகி என்ற சொற்களைப் பயன்படுத்துவதற்கும் அந்த அடைமொழியால் துறப்பவர்களை அழைப்பதற்கும் இது குறிப்பிடத்தக்கது. [5] [6]

காலவரிசை

தொகு

பரமகம்ச உபநிடதம் இயற்றப்பட்ட ஆண்டு தெரியவில்லை. [7] இந்த உரை பழமையானது. ஏனெனில் தேதி சிறப்பாக நிறுவப்பட்டுள்ள பிற பண்டைய உரைகளில் இதைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாசகக் குறிப்புகள் மற்றும் இலக்கிய நடை, இந்த இந்து உரை 3 ஆம் நூற்றாண்டு தேதியிடப்பட்ட ஆசிரம உபநிடதத்துக்கு முன் இயற்றப்பட்டது என்று கூறுகின்றன. [7] உபநிடதங்களின் ஜெர்மன் அறிஞரான இசுப்ரோக்காப், இது கிமு 1 ஆம் நூற்றாண்டின் கடைசி சில நூற்றாண்டுகளில் இருந்து வந்ததாகக் கூறுகிறார். [7]

உள்ளடக்கம்

தொகு

உபநிடதம், அதன் தொடக்க மற்றும் முடிவுப் பாடல்களில், பிரம்மம் மற்றும் பிரபஞ்சத்தின் எல்லையற்ற தன்மையின் முதன்மையை வலியுறுத்துகிறது. பிரம்மம் எல்லையற்றதைக் குறிக்கிறது. உபநிடதத்தின் கருப்பொருள் நான்கு பாடல்களில் பரமகம்ச யோகிகளின் பாதையின் அம்சம் குறித்த நாரதரின் கேள்விக்கு பகவான் பிரம்மாவின் விளக்கமாக வழங்கப்படுகிறது. [8]

அம்சம் அல்லது தெய்வீக அன்னம், பரமகம்ச யோகியின் மேன்மையை முன்னிலைப்படுத்தப் பயன்படுகிறது. அதாவது "ஒளிமயமானவர்". நீரிலிருந்து பாலை பிரிக்க அன்னத்தின் தரத்தை உருவகமாகக் குறிக்கிறது. [9]

 
ஒரு சந்நியாசி

பரமகம்ச யோகி நிலையை அடைவது கடினமான பணி என்றும், அத்தகைய யோகிகள் கிடைப்பது அரிது என்றும் பிரம்மா விளக்குகிறார். பரமகம்ச யோகி வேதங்களின் மனிதர், உரையை உறுதிப்படுத்துவார். அவர் மட்டுமே நித்திய தூய்மையான இறுதி யதார்த்தமான பிரம்மத்தில் நிலைத்திருக்கிறார். [5] [6] இந்த யோகி, தனது தனது தலை முடி உட்பட தனது மனைவி, மகன்கள், மகள்கள், உறவினர்கள், நண்பர்கள் மட்டுமல்ல, புனித நூல்கள், அனைத்து சடங்குகள் மற்றும் பாராயணங்கள் போன்ற அனைத்தையும் துறக்கிறார்.

பரமகம்ச யோகி என்பவர் கொள்கை பிடிவாதம் கொண்டவர் அல்லது அவதூறுகளால் பாதிக்கப்படாதவர், தன்னை வெளிப்பாடுத்த்தாவர், அடக்கமானவர், மேலும் அனைத்து மனித குறைபாடுகளையும் மறந்தவர். தனது உடலின் இருப்புக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர், இவர் தன்னை ஒரு சடலமாக கருதுகிறார். பொய்யான பாசாங்குகளுக்கு அப்பாற்பட்டவர் மற்றும் பிரம்மத்தை உணர்ந்து வாழ்கிறார்.[9]

அத்தியாயம் 3 இல், உபநிடதம் அறிவுக் கோலை ஏந்தும் இவருக்கு "ஏகதண்டி" என்ற அடைமொழியை அளிக்கிறது, ஏனெனில் இவர் உலகின் அனைத்து இன்பங்களையும் துறப்பவராக இருக்கிறார். "அறிவு" மற்றும் "தண்டம்" ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்பவர் ஒரு பரமகம்சராக இருப்பார் . [5]

இதனையும் பார்க்கவும்

தொகு

சான்றுகள்

தொகு
  1. Tinoco 1997.
  2. Olivelle 1992.
  3. Prasad 2003.
  4. Olivelle 1992, ப. 5, 7-8.
  5. 5.0 5.1 5.2 Olivelle 1992, ப. 137-140.
  6. 6.0 6.1 Deussen, Bedekar & Palsule 1997, ப. 753-755.
  7. 7.0 7.1 7.2 Olivelle 1992, ப. 5, 8-9.
  8. Madhavananda, Swami. "Paramahamsa Upanishad". Vedanta Spiritual Library - Spiritual Devotional Religious Sanatana Dharama. Archived from the original on 23 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 28 April 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. 9.0 9.1 Madhavananda, Swami. "Paramahamsa Upanishad". Vedanta Spiritual Library - Spiritual Devotional Religious Sanatana Dharama. Archived from the original on 23 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 28 April 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமகம்ச_உபநிடதம்&oldid=3959564" இலிருந்து மீள்விக்கப்பட்டது