பரம்பு
பரம்பு (harrow) என்பது மண்பரப்பில் உள்ள கட்டிகளை உடைத்து சீராக மண்னைப் பரவச் செய்யும் கருவியாகும். எனவே இது தன் செயல்பட்டில் ஏரில் இருந்து தெளிவாக வேறுபட்டதாகும். ஏர் ஆழமாக உழுவதற்குப் பயன்படுகிறது. உழவுக்குப் பிறகான சீரற்ற வயல் பரப்பைப் பரம்படித்தல் சீராக்குகிறது. பரம்படித்தலின் முதன்மையான நோக்கமே மண்கட்டிகளை உடைத்து விதைப்படுகையாகப் பயன்படுவதற்கு ஏற்றபடி மண்கட்டமைப்பு அமையுமாறு மண்ணை நுண்சீராக்குவதே. களையகற்றவும் விதைத்தப் பின் விதைகளைச் சீராகப் பரவ விடவும் பருவாரியான பரம்படித்தலும் மேற்கொள்ளப்படுகிறது. பரம்படித்தல் முழு மட்பரப்பையும் கிளறிவிட்டு நல விதைப்படுகையாக்கும். களையெடுப்பான் பயிரிடையில் அமையும் களைகளை மட்டும் வாரிக் களைகிறது.
நடைமுறையில் பொதுவாக நான்குவகைப் பரம்புகள் உள்ளன; அவை, வட்டில் பரம்புகள், விற்சுருள் பல் பரம்பு உட்பட்ட கொழுவகைப் பரம்புகள், இழுவைப் பரம்புகள், முட்பரம்புகள், சங்கிலித்தொடர் பரம்புகள், சங்கிலித்தொடர்-விட்டில் கூட்டுப் பரம்புகள் என்பனவாகும். பரம்புகள் முன்பு விலங்குகளால் இழுக்கப்பட்டன. இழுப்பதற்குக் குதிரைகள், காளைகள், கோவேறு கழுதைகள் பயன்பட்டன. சில இடங்களிலும் சில காலங்களிலும் இதற்கு மாந்த உழைப்பே பயன்பட்டது. இப்போது பரம்புகளை இழுக்க இழுதண்டு பூட்டிய இழுவைப்பொறிகள் பயன்படுகின்றன.
மரபான பரம்பு இப்போது உருள்விசைப் பரம்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெறுமனே விசைப்பரம்பு என்றே வழங்குகிறது.[1]
வகைகள்
தொகுகுளிர்ந்த காலநிலைகளில் வழக்கமாக விட்டில் பரம்பும் சங்கிலித்தொடர்ப் பரம்பும் கொழுப் பரம்பும் முட்பரம்பும் விற்சுருள் கொழுப் பரம்பும் பயன்படுகின்றன. சங்கிலித்தொடர் பரம்பு உழவைச் சீர்படுத்தல், விதைகலைச் சீராக பரவவிடல் போன்ற எளிய பணிக்ளுக்கே பயன்படுகிறது. விட்டில் பரம்பு உழவுக்குப் பின் மண்கட்டிகளை உடைத்தல் போன்ற அரும்பணிகளுக்கு பயன்படுகிறது. மேலும், இழுவைப்பொறியால் இயக்கப்படும் பலவகை விசைப்பரம்புகளும் உள்ளன. இவை தம் முன்னோக்கிய இயக்கத்தைச் சார்ந்திருப்பதில்லை.
கொழுவகைப் பரம்புகள் நடவுக்கு முன்பு விதைப்படுகையைச் சீராக்கவும் வளரும் பயிர்களில் உள்ள சிறிய களைகளை நீக்கவும் வரிசையிடையில் உள்ள மண்ணைத் தளர்த்தவும் நீரை மண்ணடிப் பகுதிக்குக் கொண்டு சேர்க்கவும் பயன்படுகின்றன. நான்காவதான சங்கிலி-விட்டில் பரம்பில் சங்கிலியால் பூட்டப்பட்ட விட்டில்கள் தரையில் குறிப்பிட்டகோணத்தில் இழுக்கப்படுகின்றன. இவை மேற்பரப்பில் வேகமாகச் செல்லும். சங்கிலி பூட்டிய விட்டில்கள் சுழன்று மேற்பரப்பை ஒரு செமீ ஆழத்துக்குக் கீறிவிடும். இவ்வாறு ஒரே ஒரு தடவையில் நடவுக்கான விதைப்படுகை ஆயத்தமாகி விடும்.
இழுவைப் பரம்பு எடை மிக்க பரம்பாகும்.
விசைப்பரம்பு
தொகுசுழல் விசைப்பரம்பு அல்லது வெறுமனே விசைப் பரம்பு, பல தொகுதி குத்துநிலைக் கொழுக்களைக் கொண்டமைகிறது. ஒவ்வொரு கொழுத்தொகுதியும் குத்தச்சில் சுழல விடப்படுகின்றன. இவை உழவைக் கிடைநிலையில் செய்கின்றன. இது மண்ணடுக்குகளை புரட்டிப் போட்டு தலைகீழாக்குவதில்லை. எனவே, மண்ணடியில் உறங்கும் களைவிதைகள் மேற்பரப்பை அடைவதில்லை. மேலும், மண் அடியடுக்கும் கிடைநிலையில் பிளவுறுவதில்லை. எனவே, விதைப்படுகை வன்மையுறுவதில்லை. [2]
வரலாற்றுச் சான்றுகள்
தொகுபரம்பின் புனைவும் பயன்பாடும் வடமேற்கு வேல் பேரரசில் வாழ்ந்த அலுவலர் இயா சிக்சீ எழுதிய குவிமின் யாவுழ்சு எனும் நூலில் குறிப்பிடப்படுகின்றன. இது கட்டிகளை உடைக்கவும் களைகளை நீக்கவும் தீங்குயிரிகளையும் நோய்களையும் கட்டுபடுத்தவும் பயன்பட்டுள்ளது.[3] பரம்புகள் பின்னர் ஐரோப்பாவில் இடைக்காலத்தில் பயன்பட்டுள்ளன.[4] பரம்பு குறித்த மிகப் பழைய குறிப்பு பதினோறாம் நூற்றாண்டைச் சார்ந்த நூலான பாயேயுக்சு தாபெசுத்திரியின் பத்தாம் காட்சியில் உள்ளது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Jean-Martin Fortier."The rotary power harrow" பரணிடப்பட்டது 2015-02-14 at the வந்தவழி இயந்திரம், FarmStart Tool Shed, February 18, 2014. Retrieved on 5 March 2015.
- ↑ Jean-Martin Fortier. "The rotary power harrow" பரணிடப்பட்டது 2015-02-14 at the வந்தவழி இயந்திரம், FarmStart Tool Shed, February 18, 2014. Retrieved on 5 March 2015.
- ↑ Lu, Yongxing. A History of Chinese Science and Technology. Vol. 2. Springer. p. 366. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3662513897.
- ↑ Jean Gimpel. The Medieval Machine. p. 53.
வெளி இணைப்புகள்
தொகு- "Harrow". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 13. (1911). 27–28.
- Harrows from the 11th-16th centuries பரணிடப்பட்டது 2020-01-16 at the வந்தவழி இயந்திரம்
- "Little Harrows" Song parody