பரம்பூர்
பரம்பூர் (Parambur) என்பது தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா,அன்னவாசல் ஒன்றியத்தில் அமைந்துள்ள கிராமம். இவ்வூரானது புதுக்கோட்டையிலிருந்து சுமார் 25கிமீ தொலைவிலும், அன்னவாசலில் இருந்து சுமார் 8கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
பரம்பூர் | |
— கிராமம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | புதுக்கோட்டை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
பஞ்சாயத்து தலைவர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மொழி
தொகுதமிழ்,கன்னடம்,சௌராஷ்டிரம் போன்ற மொழிகள் இங்குள்ள மக்களால் பேசப்படுகிறது.
சமயம்
தொகுஇந்து,முஸ்லீம்,கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு சமய வேறுபாடின்றி ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர்.
கோவில்கள்
தொகுசிவன்கோவில், பெருமாள் கோவில், ஆகாசக்கருப்பர், அய்யனார், பகவதி அம்மன், மந்தையம்மன், பிடாரி அம்மன், தேரடிக்கருப்பர், கிருஷ்ணன் கோவில், மதுரைவீரன், கன்னிமார் கோவில் மற்றும் இஸ்லாமியர்களின் மசூதி,கிறித்தவர்களின் தேவாலயம் போன்றவையும் இங்கு அமைந்துள்ளது.
பள்ளிகள்
தொகுஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்றும், அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றும் இங்கு அமைந்துள்ளது.
மருத்துவமனை
தொகுதரம்உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது.
தொழில்
தொகுவிவசாயம், கிரானைட் கல்குவாரி, கூலி, செயற்கை வைரம் பட்டை தீட்டுதல் (2006ஆம் ஆண்டு வரை.தற்போது நலிவடைந்த நிலையில்) மக்களின் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.