பரவூர் சுந்தரம் ஐயர்

இந்திய இசைக் கலைஞர்

பரவூர் சுந்தரம் ஐயர் (Parur Sundaram Iyer) (1891-1974) இன்றைய கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் பரவூரைச் சேர்ந்த ஓர் வயலின் இசைக்கலைஞர் ஆவார். இவர் இந்தியப் பாரம்பரிய இசையிலும் மற்றும் இந்துஸ்தானி இசையிலும்] தேர்ச்சி பெற்றவர்.[1] கருநாடக இசைக்கலைஞர்களான ம. சு. அனந்தராமன் மற்றும் ம. சு. கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் இசைக் கலைஞர்களாவர்.

சுந்தரம் ஐயர், 1972 ஆம் ஆண்டில் கேரள சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றுள்ளார்.[2]

இசை பாணி

தொகு

சுந்தரம் ஐயர் தனக்கென ஒரு இசை பாணியை உருவாக்கினார். இது இவரது சொந்த ஊரான பரவூர் என்ற பெயரால் பரவூர் பாணி என்று அழைக்கப்படுகிறது.[3] இவர் இந்திய மாநிலமான கேரளத்திலுள்ள பரவூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர். மேலும், கர்நாடக இசைச் சூழலில் வளர்ந்தார். 1909 ஆம் ஆண்டில் பண்டிதர் விஷ்ணு திகம்பர் பலூசுகரிடம் இந்துஸ்தானி இசையைக் கற்றுக்கொள்ள மும்பைக்குச் சென்றார். மும்பையில் உள்ள கந்தர்வ மகா வித்யாலயாவில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1922இல் சென்னை திரும்பினார். இவர் ஒரு புதிய பாணியை உருவாக்கினார். இது கர்நாடக வயலின் வாசிப்பில் இந்துஸ்தானி இசையின் சில கூறுகளைக் கொண்டிருந்தது.

அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் மற்றும் செம்பை வைத்தியநாத பாகவதர் சக இசைக்கலைஞர்களின் பாராட்டைப் பெற்றார். அப்துல் கரீம் கான் சாப் இசையை விரும்பிய சுந்தரம் ஐயர் தனது வீட்டில் அவரது இசைக் கச்சேரிகளை ஏற்பாடு செய்வார்.[4]

இறப்பு

தொகு

பரவூர் சுந்தரம் ஐயர் டிசம்பர் 1974 இல் இறந்தார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Parūr Sundaram Iyer (in ஆங்கிலம்), Oxford University Press, 2011, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acref/9780195650983.001.0001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-565098-3, பார்க்கப்பட்ட நாள் 2021-10-08
  2. "Kerala Sangeetha Nataka Akademi Award: Classical Music". Department of Cultural Affairs, Government of Kerala. பார்க்கப்பட்ட நாள் 26 February 2023.
  3. "Parur M.S. Anantharaman - rasikas.org". www.rasikas.org. பார்க்கப்பட்ட நாள் 2021-10-08.
  4. "Parur Sundaram Iyer". www.sruti.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரவூர்_சுந்தரம்_ஐயர்&oldid=4021194" இலிருந்து மீள்விக்கப்பட்டது