பரவூர்
பரவூர் இந்தியாவின் கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது கொல்லம் நகரத்திலிருந்து 21 கிலோமீட்டர்கள் வடக்கு திசையிலும் மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 55 கிலோமீட்டர்கள் வடக்கு திசையிலும் அமைந்துள்ளது.
பரவுர் | |
ஆள்கூறு | 8°54′40″N 76°40′08″E / 8.911°N 76.669°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கொல்லம் |
ஆளுநர் | ஆரிப் முகமது கான் |
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[1] |
மக்களவைத் தொகுதி | பரவுர் |
மக்கள் தொகை | 43,739 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
புவியியல் அமைப்பு
தொகுஇவ்வூரின் அமைவிடம் 8°47′N 76°00′E / 8.78°N 76°E ஆகும். இவ்வூர் கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் உள்ளது. [2] இந்த நகரத்தில் கடற்கரை நிறைய உள்ளன. இந்த நகரம் ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும்.
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 43,739 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3]
பரவூர் புட்டிங்கல் கோயில் வெடி விபத்து
தொகுபரவூரிலுள்ள புட்டிங்கல் பகவதி அம்மன் கோயில் வருடாந்திரத் திருவிழாவின் போது பட்டாசுகள் வெடிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் பட்டாசுகள் சேமித்து வைத்திருந்த கிடங்கி 10 ஏப்ரல் 2016 அன்று அதிகாலையில் தீப்பிடித்து வெடித்துச் சிதறியதால் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். முந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமுற்றனர். [4] [5]
ஆதாரங்கள்
தொகு- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- ↑ Falling Rain Genomics, Inc – Paravur
- ↑ "Kollam District Level Statistics 2011". censusindia.gov.in. 2012. பார்க்கப்பட்ட நாள் 2014-01-02.
- ↑ கேரளம் - கொல்லம் கோயில் வெடி விபத்து: பலி 110 ஆக அதிகரிப்பு; 350 பேர் காயம்
- ↑ கேரள ஆலயத்தில் வெடி விபத்து: 100க்கும் அதிகமானவர்கள் பலி