பரிசில்
பரிசில் என்னும் துறையினதாகப் புறநானூற்றுப் பாடல் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. [1] இது பாடாண் திணையில் வரும் துறை.
குமணனிடம் பெற்றுவந்த பரிசிலைப் புலவர் பெருஞ்சித்திரனார் தன் மனைவியிடம் கொடுத்து அதனை என்ன செய்யவேண்டும் என்று கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
உன்னை விரும்பியவர்களுக்கும், நீ விரும்பியவர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நம் சுற்றத்தாரின் பசியைப் போக்க முன்பு கடன் கொடுத்தவர்களுக்கும், - இப்படி இன்னார்க்கு என்று எண்ணாது, எல்லாருக்கும் கொடு. என்னிடம் கேட்காமலேயே கொடு. இது குமணன் நல்கிய வளம். – என்கிறார்.
பரிசில் கடாநிலை, பரிசில் விடை ஆகிய துறைகளைப் பாடாண் திணையின் பகுதியாகக் குறிப்பிடும் தொல்காப்பியம் இதனைத் தனியொரு துறையாகக் குறிப்பிடவில்லை.
புறப்பொருள் வெண்பாமாலை பரிசில் துறை எனச் சுட்டுவது வேறு துறை. இன்னார் கொடுத்தது என்று கூறுவது ‘பரிசில் துறை’ என்கிறது.[2][3]